காஷ்மீர் இளைஞர்களே… இந்தியாவுடன் இணைந்து வாழுங்கள் – சேத்தன் பகத் காஷ்மீர் இளைஞர்களே… இந்தியாவுடன் இணைந்து வாழுங்கள் – சேத்தன் பகத்
காஷ்மீர் இளைஞர்களே…   இந்தியாவுடன் இணைந்து வாழுங்கள் – சேத்தன் பகத் சேத்தன் பகத் அமெரிக்காவில் மென்பொருளாராக, ஒரு வங்கியில் வேலை பார்த்தவர். எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் வேலையை உதறிவிட்டு, இந்தியா திரும்பி... காஷ்மீர் இளைஞர்களே… இந்தியாவுடன் இணைந்து வாழுங்கள் – சேத்தன் பகத்

காஷ்மீர் இளைஞர்களே…   இந்தியாவுடன் இணைந்து வாழுங்கள்

– சேத்தன் பகத்

சேத்தன் பகத் அமெரிக்காவில் மென்பொருளாராக, ஒரு வங்கியில் வேலை பார்த்தவர். எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் வேலையை உதறிவிட்டு, இந்தியா திரும்பி எழுத தொடங்கி விட்டார். அவரது புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை.
இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக அவர் மிகவும் பிரபலம். காஷ்மீர் இளைஞர்களுக்கு ஏப்ரல் மாதம் அவர் எழுதிய கடிதம் இது. இன்றும் அவரது கடிதம் இன்னும் அதிக பொருள் பொதிந்ததாகவே உள்ளது.

அன்புள்ள காஷ்மீர் நண்பர்களே (இந்தியாவை பிடிக்காதவர்கள்) இன்று நான் உங்களுக்கு இந்த பகிரங்க கடிதம் எழுதுகிறேன். ஏன் என்றால் காஷ்மீரில் பல விபரீதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.ஸ்ரீநகர், தேசிய பொறியியல் கல்லூரியில் நடந்த மாணவர் ரகளை, இந்தியர்களின் கண்டனத்தை பெற்றுள்ளது!! இந்திய அணி தோற்றபின், காஷ்மீர் மாணவர்கள், வெடி வைத்து கொண்டாடினர். அதனை கண்ட மற்ற மாநில மாணவர்கள் இந்திய கொடியினை ஏந்தி, பாரத் மாதாகீ ஜெய் என கோஷமிட, ரகளை வெடித்தது, போலிஸார் வந்து தான் கலைத்தனர்.
காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிரான சூழல் நிலவி வருகிறது. காஷ்மீர் தான், ஒரு தனி நாடாக இருக்கவோ, அல்லது பாகிஸ்தானுடன் இணை யவோ விரும்பும் சூழல் உள்ளது.நான் தேச பக்தன். எனது இந்தியாவை நான் நேசிக்கிறேன். இருந்தாலும் உங்களது இந்தியாவிற்கு எதிரான எண்ணங்களை நான் மதிக்கிறேன். உங்களுக்கான சில காரணங்கள் இருக்கும் என்று கூட எண்ணுகிறேன்
இருப்பினும் சகோதரர்களே, உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். உங்கள் எதிர்காலம் பிரகாசமானதாக, வளமானதாக நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க வேண்டு மென்றால், இந்தியாவுடன் தான் நீங்கள் இணைய வேண்டும். இது நான் சரித்திரத்தை, பூகோளத்தை வைத்தோ இல்லை ஒரு உணர்வு பூர்வமான முடிவை சொல்லுகிறேன் என்றோ தயவு செய்து எண்ணி விடாதீர்கள். காஷ்மீரில் உள்ள சாதாரண மக்களின் உள்ளத்தில் உள்ள கனவை பற்றித் தான் கூறுகிறேன். அவர்களின் கனவு ஒன்று தான்!! நிம்மதியான, வளமான வாழ்க்கை!! அது இந்தியாவுடன் இருந்தால் மட்டுமே வசப்படும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
காஷ்மீர் விடுதலை தலைவர்களும், வல்லுநர்களும் இப்போது என் மீது பாய உள்ளனர் என்பதை அறிகிறேன். இந்த விடுதலை தலைவர்கள் தான் இந்த காஷ்மீர் பிரச்சினையை கிளப்பிவிட்டு, அதில் தனது ராஜாங்கத்தை நடத்தி வருபவர்கள். காஷ்மீர் பிரச்சினை தீர்ந்து விட்டால் இந்த விடுதலை வீரர்களின் கதி தான் என்ன?? அதனால் தான் இந்திய அரசும், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் கொடுக்கும் எந்த விதமான நியாயமான யோசனையையும், இந்த விடுதலை தலைவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இது மிகவும் வில்லங்கமானது என்று கூறி ஒதுக்கி விடுகின்றனர். ஏனென்றால் இந்த பிரச்சினை, இந்த பிரிவினைவாதம் தான் அவர்களின் வாழ்வாதாரம். இது இல்லை என்றால் பின் அவர்களுக்கு ஏது வேலை? ஏது கூலி? ஆனால் இந்த பிரச்சினைகளின் தாக்கம் உங்களைத் தான், அதாவது இளைஞர்களைத் தான் அதிகம் பாதிக்கிறது.உண்மையில் பிரச்சினை தான் என்ன??இந்தியா சுதந்திரமடைந்த தருவாயில், அனைத்து சிறிய அரசுகளை ஒன்றிணைத்து, இந்தியாவை உருவாக்கிய இரும்புத்தலைவர் தான் வல்லபாய் பட்டேல். ஆனால் பிரதமராக காந்தியால் நியமிக்கப்பட்டவர் ஜவஹர்லால் நேரு அவர்கள். இந்தியாவின் பிற சமஸ்தானங்களை பட்டேல் ஒன்றிணைக்கட்டும் காஷ்மீர் விவகாரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூற, அப்போது தொடங்கியது தான் காஷ்மீர் பிரச்சினை.
காஷ்மீர் நாட்டு ராஜாவாக இருந்தவர்தான் ராஜா ஹரிசிங் மகராஜ்!! காஷ்மீரில் இஸ்லாமிய மக்கள் இருந்தபடியால், ஷேக் அப்துல்லா செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தார். சுதந்திர போராட்டம் நடக்கும் வேளையில், அங்கிருந்த இஸ்லாமியர், இந்துக்களைத் தாக்கவே, ராஜா ஹரிசிங், ஷேக் அப்துல்லாவை சிறையில் அடைத்து, வன்முறையை அடக்கினார். இதனை கேள்விபட்ட நேரு, உடனே காஷ்மீர் கிளம்பி, ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்ய புறப்பட்டார். இதனை கேள்வியுற்ற ஹரிசிங் மகராஜ், ஜவஹர்லால் நேருவை, எல்லையிலேயே தடுத்து, திருப்பி அனுப்பி விட்டார். காஷ்மீர் ராஜா ஹரிவிங்கிற்கு, ஷேக் அப்துல்லா மற்றும் நேருவின் நட்பு நன்றாக தெரியும்.
அதனால் தான், நேரு தான் பிரதமர் என்றவுடன், ராஜா ஹரி சிங் தயங்கினார். ஏன் காஷ்மீர் தனியாக இருக்க கூடாது? என்று யோசித்தார். நேருவின் செயல்பாடுகள் அவருக்கு பிடிக்கவில்லை என்பதே முதல் காரணம்.சுதந்திரமடைந்தது ஆகஸ்ட் 15ந் தேதி. பாகிஸ்தான் பிரிந்த இரண்டு மாதங்களில், காஷ்மீரை தாக்கியது. தாக்கி காஷ்மீரின் ஒரு பாதியை பிடித்துக் கொண்டது. பிறகு சீனாவும் சிறிது பகுதியை பிடித்துக் கொண்டது.காஷ்மீர் ராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணைந்து விடுவேன் என்று எழுதி கொடுத்து விட்டு, ராணுவ உதவி கேட்டார்.

70 வருடங்கள் ஆகியும் பிரச்சினை தீரவில்லை.பாகிஸ்தான் தனது பகுதி காஷ்மீரிலிருந்து, தொடர்ந்து  தீவீரவாதத்தை ஊக்குவித்து,  காஷ்மீர் பண்டிட்டுகளை   வெளியேற்றி, முழுமையான   இஸ்லாமிய நாடாக மாற்ற    முயற்சித்து வருகிறது.

உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் ராணுவ வலிமையோடு சீறி புறப்பட்டார். இதோ பாகிஸ்தானின் படைகளை தடுத்து விட்டோம். உத்தரவு கொடுங்கள். பாகிஸ்தான் பிடித்துள்ள பகுதிகளை மீட்டு எடுப்போம் என்று ராணுவ அதிகாரி கேட்க, இந்திய பிரதமராக, காந்தியால் உட்கார வைக்கப்பட்ட நேரு ஒரு வரலாற்று தவறை செய்தார்.மவுண்ட்பேட்டனின் மனைவியின் பேச்சைக் கேட்டார் என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். நேரு ராணுவ அதிகாரியிடம் உத்தரவு மறுத்து விட்டு பின் வாங்குமாறு கூறினார்.

 

அதிர்ச்சி அடைந்த ராணுவம், நமது நாட்டின் ஒரு பகுதியை, எதிரிகள் அத்துமீறி ஆக்ரமித்துக் கொண்டுள்ளனர். ஏன் எங்களை தடுக்க வேண்டும் என கேட்க, நேரு, இதனை ஐக்கிய சபை தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி, நமது உள்நாட்டு பிரச்சினையை, ஐக்கிய சபையிடம் கொண்டு சென்றார்.ஐக்கிய சபை இது தான் சமயம் என்று எண்ணி, இன்றுவரை இந்தியா பாகிஸ்தான் சண்டையை வளர்த்து வருகிறது.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான், ஆளும் காஷ்மீர் பகுதியை விட்டு பாகிஸ்தான் விலக வேண்டும் என்று ஐ.நா சபை கூறியுள்ளது.
70 வருடங்கள் ஆகியும் பிரச்சினை தீரவில்லை. பாகிஸ்தான் தனது பகுதி காஷ்மீரிலிருந்து, தொடர்ந்து தீவீரவாதத்தை ஊக்குவித்து, காஷ்மீர் பண்டிட்டுகளை வெளியேற்றி, முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சித்து வருகிறது.
காஷ்மீர் ராஜா ஹரிசிங் இந்தியாவுடன் சேர ஒப்புதல் அளித்தவுடன், பிரதமர் நேரு தேவையே இல்லாமல், ஷேக் அப்துல்லாவிடம் ஏதேனும் முன் நிபந்தனைகள் உண்டா என்று கேட்க, ஆரம்பித்தது தான் இந்த, சிறப்பு அந்தஸ்து தலைவலி. காஷ்மிருக்கு தனி சட்டங்கள் சில காலம் வரை என்று சொன்ன நேரு, இந்தியர்களை இன்று வரை ரத்தம் சிந்த வைத்துவிட்டார்.
காஷ்மீருக்கு தனி சட்டம். பிற இந்திய மாநிலங்களில் வாழ்பவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. சிறப்பு அந்தஸ்தும் காஷ்மீருக்கு உண்டு. இப்படி இந்தியாவை சிக்கலில் மாட்டும் வகையில் பல சலுகைகளை ஷேக் அப்துல்லா முன் வைக்க, நேரு பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே ஒப்புக் கொண்டார்.

காஷ்மீரின் வெளிநாட்டு விவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் துறையை மட்டுமே இந்தியா செயலாக்கும் என்று நேரு கையெழுத்திட்டார். அதுவும் பாராளுமன்றத்தில் யாருக்கும் சொல்லாமல். பாகிஸ்தான் ஆளும் காஷ்மீரில் இருந்து தீவீரவாதம் தொடர, இந்தியா ஆளும் காஷ்மீரில் உள்ள தேச விரோத இஸ்லாமியர் துணை போக, இந்திய ராணுவத்தினருக்கு கெட்ட பெயர் தான் வந்தது. ரத்தமும் உயிரும் சேதமானது. இதுதான் காஷ்மீரின் கதை!! காஷ்மீர்

இளைஞர்களே! இப்போது சொல்லுங்கள்! – ஆசிரியர் குறிப்பு

சீனாவும், பாகிஸ்தானும் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ள பகுதியை மூன்றாக பிரிக்கலாம். லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு.

காஷ்மீர் என்பது சுமார் 70 லட்சம் பேர் வாழும் ஒரு சிறிய நகரம் தான்.

சென்னையை போல ஒரு நகரம். இந்த நகரம் தனித்து வாழ முடியுமா?

அருகில் இருக்கும் கயவர் நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இந்த காஷ்மீரை கபளிகரம் செய்து விடாதா??

எப்போதும் போர், தீவிரவாதம் என்று இருந்தால், அந்த இடம் போதை, கடத்தல், கொள்ளை என்று மாறி விடாதா?

தீவீரவாத இஸ்லாமிய படை காஷ்மீரை உடனடியாக வளைத்து விடுமே!!

அப்போது இளைஞர்களுக்கு எங்கே இருக்கும் வேலை வாய்ப்பு!!

பாகிஸ்தானுடன் சேர்ந்தாலும் இதே கதி தான்!!

மேலும் உங்களில் சரிபாதியான பெண்களை பற்றி நினைத்து பார்த்தீர்களா??

அவர்களின் சுதந்திரம், கல்வி, வேலை, பற்றி கனவு கூட காண முடியுமா?

இளைஞர்களே நன்றாக சிந்தியுங்கள்!!
அரசு சட்டம் 370 உங்களுக்கு தேவையில்லை. இந்தியாவுடன் இணைந்து, வலுவான பொருளாதாரமாக உங்கள் காஷ்மீர் நகரை மாற்றுங்கள். உங்கள் தீவீரவாதிகளுக்கு டாடா சொல்லி விட்டு, அரசியல் வாதிகளுக்கு இடம் கொடுங்கள்.
உங்களுக்குள் தீவீரவாதிகளை உலவ விட்டு, இந்திய ராணுவ வீரர்களை பழி சொல்லாதீர்கள். பாகிஸ்தான் ராணுவம், உள்ளு£ர் தீவீரவாத தலைவர்கள், உங்கள தவறாக வழி நடத்தும்இவர்களைத் தான் நிபுணர்கள என நீங்கள் பழி சொல்ல வேண்டும். இந்தியா தோற்றால் கொண்டாடாதீர்கள். இந்தியா வீழ்ந்தால் மகிழாதீர்கள். ஏனென்றால் இந்தியா தோல்வி அடைந்தால், நீங்களும் தோற்று போவீர்கள்.
ஜெய் ஹிந்! ஜெய் காஷ்மீர்!!

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *