சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? – திரு நம்பிநாராயணன் வரலாற்றுத் தொடர் – 1 சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? – திரு நம்பிநாராயணன் வரலாற்றுத் தொடர் – 1
சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? வெள்ளையனே வெளியேறு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் நீடித்த ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்தியா தன் விடுதலைக்குப் போராடிய வரலாற்றைத் தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு... சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? – திரு நம்பிநாராயணன் வரலாற்றுத் தொடர் – 1

சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ?

வெள்ளையனே வெளியேறு

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் நீடித்த ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்தியா தன் விடுதலைக்குப் போராடிய வரலாற்றைத் தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு என நாம் கூறுகிறோம். அந்தக் காலகட்டத்தை ஐந்து கட்டமாகப் பிரித்துப் பார்க்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

quit india 3வீர சாவர்க்கரால் முதல் இந்திய சுதந் திரப் போர் என வர்ணிக்கப்பட்ட 1857ற்கு முந்தைய காலகட்டத்தை முதலாவது என்றும் 1857 முதல் காங்கிரஸ் உருவாகி ( 1885 ) வளர்ச்சி பெற்ற காலகட்டமான 1900 வரை நடந்த போராட்டங்களை இரண்டாவது காலகட்டமாகவும், 1900 முதல் திலகரின் சகாப்தமான 1920 வரை மூன்றாம் காலகட்டமாகவும், திலகரின் மறைவிற்குப் பின் காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்ட காங்கிர சின் போராட்டம், காந்திய தலைமையோடு அணுகுமுறை யில் மாற்றம் கொண்டபோதும் சுதந்திர வேள்வியில் தீவிரமாகப் போராடிய இயங்கங்களின் போராட்டம், 1942ல் “செய் அல்லது செத்துமடி’’ என்ற அறைகூவலோடு காந்தியால் விடுக்கப்பட்ட “வெள்ளையனே வெளியேறு’’ போராட்ட காலகட்டம் என 1942 வரையிலான காலகட்டம், நான்காவது என்றும் 42 முதல் 47 வரையிலான குறுகிய காலத்தை ஐந்தாவது காலகட்டம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

 

வீர வரலாறு

இதில் 1920ற்குப் பிறகான மூன்று காலகட்டத்தில், ஐந்தாம் காலகட்டம் தவிர, மூன்று மற்றும் நான்காம் காலகட்டத்தில் காந்தியத் தலைமையிலான காங்கிரசின் பங்களிப்பை விட தீவிரவாத போராளிகளின் பங்களிப்புதான் அதிகமாக இருந் திருக்கிறது என்பதே உண்மை. ஆனால் இந்த உண்மைகளின் பெரும் பகுதி நமது வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்டது. பெரும்பாலான

லீவீstஷீக்ஷீவீணீஸீs தங்களை tஷ்வீstஷீக்ஷீவீணீஸீs ஆக மாற்றிக் கொண்டு வரலாற்றை எழுதியதே இதற்கு முக்கிய காரணம். எனவேதான் “கத்தியின்றி ரத்தமின்றி வந்த சுதந்திரம்’’ என்று காங்கிரஸ் இயக்கத்தினராலும் சில படித்த மேதைகளாலும் கூசாமல் பொய் சொல்ல முடிகிறது.

நமது கலாச்சாரத்தை மீட்கவே…

இந்தச் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆங்கிலேயன் கொள்ளையடித்துச் சென்ற செல்வங்களும் அவனால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிகளும், அவனால் உருவாக்கப்பட்ட பஞ்சமும் பட்டினியும் மட்டுமே காரணமாய் இருக்கவில்லை. சுதேசியம் என்ற வார்த்தைக்குள் அடக்கப்படக் கூடிய ஒரு ‘‘சமூக கலாசார பொருளாதார’’ காரணிகள் தான் முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் பொருளாதாரத்தைவிட கலாசார மீட்பே அதிகம் காரணமாய் இருந்திருக்கிறது. இதற்கு ஒரு உதாரணம் கூற வேண்டுமானால், திருநெல்வேலி மாவட்டத்தின் கலெக்டராய் இருந்த ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டு வீழ்த்திய வீர வாஞ்சிநாதனின் வீரமரணக் குறிப்பே போதுமானது.

வீரவாஞ்சி

vanchimaniyachijunctionவாஞ்சிநாதனின் அந்தக் குறிப்பில் ‘‘ஸ்ரீராமனும் கிருஷ்ணனும், சிவாஜியும், குருகோவிந்தசிம்மனும், யுதிஷ்டிரச் சக்கரவர்த்தியும் முடிசூட்டி அரசோச்சிய புனிதமான பாரத மண்ணில் மிலேச்ச மரபை சேர்ந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுக்கு முடி சூட்டு விழாவா? இதை மானமுள்ள எந்த பாரதீயனும் அனுமதிக்க மாட்டான்.

புண்ணிய பாரத பூமியை அடிமைப்படுத்தி அடக்கியாள எண்ணும் மிலேச்சர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை உணர்த்தவே நான் ஆஷை சுட்டிக் கொன்றேன். பாரத தேவிக்கு என் எளிய காணிக்கையாக என் உயிரையும் நான் அர்ப்பணிக்கிறேன். இந்தக் கொலைக்கு நானே முழுப் பொறுப்பு ஏற்கி றேன் ‘‘என்று எழுதப்பட்டிருந்தது. (கடிதத்தின் ஒரு பகுதி)

நமது உண்மையான வரலாறு என்ன?

எதிர்கால நலனுக்காக கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்வோம் என்ற அடிப்படையில் சுதந் திரம் பெற்று 70 வது ஆண்டில் அடியெடுத்து விட்ட நாம், சுதந்திரப் போராட்டத்தின் சில சம்பங்களை, வரலாற்று நாயகர்களின் சாதனைகளை சற்றே பின்னோக் கிப் பார்க்க வேண்டும் என்பதாலேயே இத் தொடர் கட்டுரை.

இது ஆகஸ்ட் மாதம் என்பதால் சுதந்திரப் போராட்ட யுத்தத்தில் ஆகஸ்ட் புரட்சி என்ற புரட்சியை உருவாக்கக் காரணமான ‘‘வெள்ளையனே வெளியேறு’’ இயக்கம் பற்றி இந்த இதழில் பார்க்கலாம்.

வெள்ளையனே வெளியேறு

ஜூலை 14, 1942-ல் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான ஆயத்தத்தைத் தொடங்கியது. ஆகஸ்ட் 8, 1942-ல் பம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய் அல்லது செத்து மடி

quit india 1மாநாட்டில் பேசிய காந்திஜி ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். மேலும் நாட்டு மக்கள் பிரிட்டிஷாரின் கட்டளைகளை பின்பற்றாமல் ஒரு சுதந்திர தேசத்தைப் போல் செயல்படும்படியும் கோரிக்கை விடுத்தார். எனவே இது ஒத்துழையாமை இயக்கம் என்றும் கூறப்பட்டது.

சிறை

இவ்வியக்கத்திற்கு பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பு இருப்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு. மறுநாளே (ஆகஸ்ட் 9, 1942) காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் சிறைப் பிடித்தது. புனே நகரில் உள்ள ஆகாகான் மாளிகையில் காந்திஜி சிறை வைக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்கள் மற்றவர் களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு அகமதுநகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இந்தக் கைதுகள் போராட்டத்தை ஒடுக்குவதற்குப் பதிலாக மக்களின் உணர்ச்சிகளை மேலும் தூண்டிவிட்டது. தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டு ஆவேசமடைந்த மக்கள் பெரும் திரளாகப் போராட்டத்தில் குதித்தார்கள்.

 

 

புரட்சி

துவக்கத்தில் சாத்வீக வழியில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டம்,வெள்ளையர்களின் அடக்கு முறையின் விளைவாக வன்முறைப் போராட்டமாக உருவெடுத்தது. நாடு முழுவதிலும் பெரிய அளவிலான கிளர்ச்சிகளும் போராட்டங்களும் வெடித்தன.

தொழிலாளர் கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். தீவிரவாத இளைஞர்கள் பலர் ஆங்காங்கே நாசகார வேலையில் ஈடுபட்டு பிரிட்டிஷாரை மிரட்டினர். இந்திய – பிரிட்டிஷ் ராணுவத்தின் கூட்டுப்படைகளின் விநியோக பாதைகள் வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டன. அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது, மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டதோடு போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வழிகள் பாதிக்கப்பட்டன.

இது முடிவு…

ஆங்கிலேய அரசை அசைத்துப் பார்த்த மாபெரும் போராட்டம் எனவும் இதைச் சொல்லலாம். அமைதி வழியில் தொடங்கிய இப்போராட்டம் வன்முறைப் வழி யில் அடியெடுத்து வைத்தபோது தான் வெள்ளைய அரசு தங்க ளுடைய ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவில் முடிவு கட்டபட்டு விட்டது என்பதை உணரத் துவங்கியது. போராட்டத்தை அடக்க அரசு பல இடங் களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மக் கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு விசாரணையே இல்லாமல் தண்டனை வழங்கப்பட்டார்கள்.

காட்டி கொடுத்த கம்யூனிஸ்டுகள்

நாடே ஒன்றிணைந்து வெள்ளை யனே வெளியேறு போராட்டத்தில், ஒத்துழையாமை போராட்டத்தில், ஆகஸ்ட் புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, புரட்சிக்கென்ற மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள், காங்கிரசின் திட்டங்களையும் அதன் தலைவர்களை யும், போராளி வீரர்களையும், செவ்வனே பிரிட்டிஷாரிடம் போட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்து வந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் துரோகம்

போராட்டம் தீவிரவாத குழுக்கள் கைகளில் சென்று விட்டதை அறிந்த காங்கிரஸ்கட்சியும் திடீரென்று பல சம்பங்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்ததோடு அச்சம்பவங்களை கண்டிக்கவும் செய்தது. தைரியமாக களத்தில் இறங்கிய லட்சோப லட்சம் தொண்டர்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறி அவர்கள் முதுகில் குத்தவும் தயங்கவில்லை காங்கிரஸ்.

சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் எப்படி தேசபக்தர்களை காட்டிக் கொடுத்தனர் என்பதற்கும், தான் அறிவித்த போராட்டத்தை தானே எப்படி நீர்த்துப் போகச் செய்தது காங்கிரஸ் என்பதற்கும் ‘‘வெள்ளையனே வெளியேறு’’ போராட்டம் ஒரு நல்ல உதாரணம். இருப் பினும் கூட லட்சோப லட்சம் வீரர்களை களம் இறக்கிய பெருமையும், சுதந்திரப் போராட்டத்தை மாபெரும் வெகுஜனப் போராட்டமாக மாற்றிய பெருமையும் ‘‘வெள்ளையனே வெளியேறு’’ இயக்கத்தையே சாரும்.

ஆங்கிலேயன் அகன்றுவிட்டான். ஆனால் ‘‘அடிமையின் மோகம்’’ மட்டும் இன்னமும் நம்மை விட்டு அகலாதிருக்கிறது.

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *