மோடியின் இரண்டாண்டு ஆட்சி! ஈடில்லா சாதனைகளின் ஆட்சி!! மோடியின் இரண்டாண்டு ஆட்சி! ஈடில்லா சாதனைகளின் ஆட்சி!!
மோடியின் இரண்டாண்டு ஆட்சி! ஈடில்லா சாதனைகளின் ஆட்சி!! காங்கிரஸ் ஆட்சியின் போதும் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது, பாஜகவின் ஆட்சியில் இப்போதும் நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமே ஒற்றுமை அல்ல, மேலும் ஒரு முக்கிய ஒற்றுமை... மோடியின் இரண்டாண்டு ஆட்சி! ஈடில்லா சாதனைகளின் ஆட்சி!!

மோடியின் இரண்டாண்டு ஆட்சி!

ஈடில்லா சாதனைகளின் ஆட்சி!!

காங்கிரஸ் ஆட்சியின் போதும் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது, பாஜகவின் ஆட்சியில் இப்போதும் நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமே ஒற்றுமை அல்ல, மேலும் ஒரு முக்கிய ஒற்றுமை உள்ளது.

 

காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் ஆகியவை காரணமாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டது, தற்போதைய பாஜக ஆட்சியில் காங்கிரஸின் ஊழல்களான நேஷனல் ஹெரால்ட் வழக்கு, அகஸ்டா ஹெலிக்காப்டர் வழக்கு, வாசன் ஐ கேர் வழக்கு போன்ற ஊழல்களால் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது, ஆக, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் காங்கிரஸின் ஊழல்களால்தான் நாடாளுமன்ற முடக்கங்கள் நடைபெறுகின்றன.

நம்பி நாராயணன் 

இதுதான் காங்கிரஸின் சாதனை என்றால் மோடி அரசின் இரண்டாண்டு சாதனை ஊழல் இல்லா ஆட்சி என்பதுதான். பொழுது போய் பொழுது விடிந்தால் புதுப்புது ஊழல்கள் உதித்துக் கொண்டிருந்த காலம் போய் ஊழல் காணமற்போன காலமாக ஆகிவிட்டது மோடியின் ஆட்சியின் சாதனை.

ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 1.1 லட்சம் கோடி வருமானம், நிலக்கரி ஏலத்தில் 3,44 லட்சம் கோடி வருமானம். ஏலங்கள் எல்லாம் வெளிப்படைதன்மையாக நடந்தது என்பது மோடி அரசின் மற்றொரு சாதனை. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை என்பதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்..! நேர்மை இல்லாமல் எப்படி அது சாத்தியமாகும்? சாத்தியமாக்கியது மோடியின் அரசு.

இந்த அரசின் கவனத்தை கவரவேண்டுமானால் ஒரு “டிவிட் “ போதும் என்கிறார் அமித் ஷா. ஆம் டிவிட்டர் மற்றும் முகநூல் மூலம் இந்த அரசு ஒவ்வொரு புகாருக்கும் பதிலளித்தது மட்டுமல்ல, பல்வேறு பிரச்சினைகளை எளிமையாக தீர்த்து வைத்துள்ளது. நள்ளிரவில் கூட டிவிட்டருக்கு பதில் தரும் சுஷ்மா ஸ்வராஜ், எப்போதும் பயணிகள் கூடவே தொடர்பில் இருக்கும் சுரேஷ் பிரபு, தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்து மின்புரட்சி செய்துவரும் பியூஷ் கோயல், கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்திவரும் ஸ்ம்ருதி இரானி உட்பட பல அமைச்சர்கள் எப்போதும் மக்கள் தொடர்பில். இதை விட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நிர்வாகம் எதுவாக இருக்க முடியும் ? உதாரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 8 லட்சம் புகார்கள் இணையம் மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் பிரதமர் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட்டு, அதில் 80% புகார்கள் புகார் பெறப்பட்டு மூன்றே வாரத்தில் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் செயல்பாடு மற்ற அலுவலகத்தை நியாயமான போட்டிக்கு அழைத்துள்ளது என்பதே உண்மை.

கடந்த இரண்டே ஆண்டுகளில் 1053 பழமையான, தேவையற்ற நடைமுறைகள் கொண்ட சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன என்றால் நம்பவா முடிகிறது? ஆனால் இப்படியும் ஓர் அமைதிப் புரட்சி நடந்துள்ளது. உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று: மாணவர்கள் கெஸட்டட் அதிகாரியிடம் மேலொப்பம் (ணீttமீstணீtவீஷீஸீ) வாங்க வேண்டிய அவசியம் இல்லை, தாங்களே மேலோப்பம் செய்து கொண்டு உரிய நேரத்தில் அசல் சான்றிதழைக் காட்டினால் போதுமானது என்பது. சிறிய விஷயம், ஆனால் பெரிய மாற்றம்..!

சுத்தமான பாரதத்தை நோக்கிய பயணத்தில் பொது வெளியிலும், ஏழைமக்கள் வீடுகளிலும் 1.71 லட்சம் கழிப்பறைகள் கட்டபட்டுள்ளன என்பதும் பள்ளி வளாகங்களில் மட்டும் 4.17 லட்சம் கழிப்பறைகள் கட்டபட்டுள்ளன என்பது இமாலய சாதனை என்றாலும் அதைவிடக் கூடிய மனித நேயம் மிக்க சாதனை ஒன்று உள்ளது. கடந்த 163 ஆண்டுகால வரலாற்றில் இல்லாமல் ரயில்களில் கழிப்பறை வசதியோடு கூடிய இன்ஜின்கள் இப்போதுதான் வந்துள்ளது. இதற்குக் கூட இத்தனை ஆண்டா என்று நீங்கள் வியப்பது புரிகிறது.

குப்பைக் கூடங்களாய் காட்சி அளித்த பல ரெயில் நிலையங்கள் என்று தூய்மையின் உருவாய் காட்சிதருவதற்குக் காரணம் மோடி அரசின்

“ஸ்வஸ் பாரத்“ திட்டம் ஒவ்வொரு பயணியாளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நிரூபிக்கிறது.

முன்னாள் ராணுவத்தினருக்கு முதன் முறையாக சமச்சீர் பென்ஷன் ( ளிஸிளிறி ) வழங்கப்பட்டுள்ளது. நாற்பது ஆண்டுகால வரலாற்றுச் சாதனை இது.

பொருளாதாரத்தைப் பொருத்தவரை, இரண் டாண்டிற்கு முன் 4.5% ஆகத் தொய்ந்து போய் இருந்த வளர்ச்சி 7.6% ஆக உயர்ந்திருக்கிறது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2014-இல் 1.7% ஆக இருந்தது, 2016-இல் 12.6% ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பு இதுவரை இல்லாத அளவில் 363.12 பில்லியன் டாலரை (ரூ.23,59,500 கோடி) எட்டியிருக்கிறது.

கடந்த 2004 – 2014 ஆண்டுகளில் புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட்ட கிராமங்கள் 200 ஐ தாண்டவில்லை. இன்னமும் 18,000 மின் இணைப்ற்ற கிராமங்கள் இந்தியாவில் உள்ளன என்ற நிலையில் பாஜக அரசு கடந்த இரண்டே ஆண்டுகளில் 7,760 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கிவிட்டது. இன்னம் இரண்டே ஆண்டுகளில் அனைத்து கிராமங்களும் மின் இணைப்பு வழங்கப்பட்டு மின்சாரம் இல்லா இந்தியா உருவாகும் என்கிறது அரசு. அதுமட்டுமல்ல, தடையற்ற மின்விநியோகத்தையும் உறுதி செய்வோம் என்கிறது. உஜ்லா திட்டம் மூலம் 77 கோடி குழல்பல்புகள் எல்.யி.டி பல்புகளாக மாற்றப்பட்டு மின்சார சேமிப்பில் வரலாறு படைக்கப்படுகிறது.

 

2013-14இல் தேசிய நெடுஞ்சாலை அமைத்தல் 3,500 கி.மீ. இருந்தது. இப்போது 10,000 கி.மீ.ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதிலும் சரி, எரிசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் சரி, ராணுவத்தை நவீனப்படுத்துவதிலும் சரி நரேந்திர மோடி அரசின் இரண்டாண்டு சாதனைகள், முந்தைய 10 ஆண்டுகளில் நடைபெறாத அளவிலான சாதனைகள் என்பதுதான்

கிராம மக்கள் ஜீரோ கையிருப்பில் வங்கிக் கணக்கு உருவாக்க துவங்கப்பட்ட ஜன்தன் யோஜனா திட்டத்தில் 28 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டது. அதுமட்டுமல்ல, இடைத்தரகு இல்லா நிலையில், போலிகள் கண்டறியப்பட்டு, நேரடி மானியம் வழங்குவதன் மூலம் 36,500 கோடி பணவிரயம் தடுக்கப்பட்டுள்ளது.

அரசின் அழைப்பை ஏற்று எல்,பி.ஜி. மானியத்தை விட்டுக் கொடுத்தவர்கள் எண்ணிக்கை 1.1 கோடி நபர்கள். இதன்காரணமாக மானிய விலை சிலிண்டர்களுக்கும் மானிய மற்ற வர்த்தக சிலிண்டருக்கும் உள்ள விலை வேறுபாடு குறுகியது மட்டுமல்லாமல், 5 கோடி ஏழை மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்க முடிந்துள்ளது. ஒரு அரசின் சலுகை யாருக்குப் போய் சேர வேண்டுமோ அவர்களுக்குப் போய் சேர வேண்டும் என்பதில் இந்த அரசு காட்டும் அக்கரைக்கு கேஸ் விநியோகம் ஒரு எடுத்துக்காட்டு. பகல் திட்டத்தில் 3.5 கோடி போலி அட்டைகளை விலக்கியதன் மூலம் 14,600 கோடி பணவிரயம் தடுக்கப்பட்டுள்ளது.

 

அடல் ஓய்வூதியத் திட்டம், பிரதமர் கிராமப்புற வீடுகட்டும் திட்டம், திறன்மிகு இந்தியா திட்டம், எழுக இந்தியா திட்டம், செயல்படு இந்தியா திட்டம், முத்ரா வங்கி திட்டம், எளிய தவணையில் இன்சுரன்ஸ் திட்டங்கள். செல்வமகள் திட்டம்,  இந்தியாவில் தயாரிப்பு என்று பல நல்ல திட்டங்களை மோடி அரசு தொடர்ந்து அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது. ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு நல்ல பலனைத் தந்து கொண்டிருக்கிறது.

பகைவர்களாக மாற்றி விட்ட அருகையாமையில் உள்ளவர்களைக் கூட காங்கிரசுக்கும் தூரத்தில் இருப்பவர்களைக் கூட நட்பு நாடாகா மாற்றிவிட்ட மோடி அரசுக்கும் உள்ள வெளிவிவாகார செயல்பாட்டை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர் விடுதலை, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த செவிலியர்கள் மீட்கப்பட்டது, பாதிரியார் அலெக்ஸ் ஆப்கானில் இருந்து மீட்கப்பட்டது என்பவை மோடி அரசால் தமிழ்கம் நேரில் கண்ட பலன்கள்.

 

தமிழின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் செய்யாததை மோடி அரசு செய்துள்ளது. 16 இந்திய மொழிகளில் திருக்குறள் வரவிருக்கிறது. தமிழகம் தாண்டி நாடெங்கும் திருக்குறள் கொண்டாடப்படுகிறது. பாரதியார் போற்றப்படுகிறார்.

இவை அனைத்தும் மோடி அரசின் சாதனைகளில் சிலமட்டுமே. 50 ஆண்டுகால காங்கிரஸின் தவறுகளை இரண்டே ஆண்டுகளில் மோடியின் தலைமையில் சரிசெய்து விடலாம் என் நம்புகிறவர்கள் கொஞ்சம் அதிருப்தி அடைந்திருக்கலாம். எதிர்கட்சிகள் குற்றம் கண்டு பிடிக்க வேண்டும் என்று கண்டு பிடிக்கலாம். மற்றபடி  மோடி அரசு இன்னமும் 70 விழுக்காடு மக்களின் பேராதரவை பெற்ற அரசாகத்தான் இருக்கிறது என்பதே மிகப்பெரிய சாதனை. ” ஆப் கி பார் மோடி சர்க்கார் “ மட்டுமல்லாமல் எப்போதுமே மோடி சர்க்கார் என்பதில் ஐயமில்லை.

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *