இந்து சொந்தங்களே சத்குருவிற்க்கு தோள் கொடுப்போம் இந்து சொந்தங்களே சத்குருவிற்க்கு தோள் கொடுப்போம்
இந்து சொந்தங்களே சத்குருவிற்க்கு தோள் கொடுப்போம் ஐரோப்பா தனது பாரம்பரிய வேர்களான கிறிஸ்துவத்தை மறந்துவிட்டதால் தான் இன்று கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் அதிகரித்து விட்டதாகவும், மதசார்பின்மை என்ற போர்வையில் வேற்று மதங்கள் வேரூன்ற... இந்து சொந்தங்களே சத்குருவிற்க்கு தோள் கொடுப்போம்
இந்து சொந்தங்களே சத்குருவிற்க்கு தோள் கொடுப்போம்
ஐரோப்பா தனது பாரம்பரிய வேர்களான கிறிஸ்துவத்தை மறந்துவிட்டதால் தான் இன்று கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் அதிகரித்து விட்டதாகவும், மதசார்பின்மை என்ற போர்வையில் வேற்று மதங்கள் வேரூன்ற தொடங்கியுள்ளன என்று பல அரசியல் தலைவர்களும், வேடிகனின் மத குருமார்களும் கூறி வருகின்றனர்.
ஆனால் நாம் சரித்திரத்தை புரட்டி பார்க்கும் போது, ஐரோப்பா உண்மையில் பாரம்பரியமான கிறிஸ்துவ நாடா என்றால் இல்லை என்பதே பதில்.
ஐரோப்பாவின் பாரம்பரியமான மதம், இந்துக்களின் வேதகாலத்தை ஒட்டியே இருந்தன என்பதற்கான பல சான்றுகள் உள்ளன. ரோம் நாட்டின் தேசிய தேவாலயம் என்றழைக்கப்படும் ‘‘பேகன் கோவில்’’ உண்மையில் ஒரு சூரியனார் கோவில். ஆச்சர்யத்தக்க வகையில் அதன் சில வேலைபாடுகள் கொனாரக் கோவில் போலவே இருக்கும். கோபுரம் உடைக்கப்பட்டு, சதுரமாக்கப்பட்டு, சூரிய கடவுளை அப்புறப்படுத்தி, அங்கு கிறிஸ்துவ கடவுளை வைத்திருப்பதை காணலாம்.
முதலில் ஐரோப்பா என்று நாம் அழைக்கும் இந்த நாட்டின் பெயர் காரணமே இதற்கு முதல் சான்று.
ஐரோப்பியா என்ற இளவரசி ‘‘டையர்’’ நாட்டின் அரசர் அகினோரின் மகள் இவள் ‘யோ’ என்ற தேவதையின் சந்ததி ஆவாள். ஸியஸ் என்ற தேவன் இவளை கண்டு விருப்பமுற, அவன் ஒரு வெள்ளை எருதாக உருமாறி, ஸியஸின் எல்லைக்குள் நுழைந்து, ஐரோப்பியாவை தூக்கி கொண்டு கடல் வழியே கிரிட் நகருக்கு சென்று அந்த நாட்டின் மகாராணியாக்கினான்.அவளது பேரே அந்த நாட்டின் பெயராகி விட்டது. இது தான் ஐரோப்பா பெயர் காரணம்.
அன்று இருந்த சுதந்திரமான மத கருத்துகளை வேரறுக்க, கிறிஸ்துவ மத குருமார்களால் முடியவில்லை. முதலில் அந்த பாரம்பரிய மதகுருமார்களை அவமதித்து, அவர்களின் நம்பகத்தன்மையை உருக்குலைக்க தொடங்கினர்.
சிந்தனையாளர்கள், மத குருமார்கள், நம்பிக்கை கொண்டவர்கள், ஆசான்கள் என லட்சக்கணக்கானவர்களை வெட்டி சாய்த்தனர். எங்களின் ஒரு கடவுளைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை என்றே கூறி மூளைச்சலவை செய்யப்பட்ட பல இளைஞர்கள் எங்கும் பரவி மிச்சம் இருந்த, பாரம்பரிய சிந்தனையாளர்களை வெட்டிச் சாய்த்தனர். இந்துக்களின் வழக்கம் போல பாரம்பரிய ஐரோப்பியர்கள் டிசம்பர் 25ம் தேதி, காலத்தின் மாற்றத்தை கொண்டாடிய தேதியை தான் அப்படியே ஏசுவின் பிறந்த நாளாக கொண்டாட தொடங்கினர்.
1000 ஆண்டுகள் அந்நியர் ஆட்சியில் அடிமையாக இருந்த போதும், ஆனால் இன்று அந்த வலிமை எங்கே போய்விட்டது?? இந்து தர்மத்தை விட்டு கொடுக்காமல் கட்டி காத்துள்ளோம் என்பதே நமது வெற்றி.
சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளான பின்னும் ஏன் இந்து மதம் இன்றும் தனக்குரிய பீடத்தில் கம்பீரமாக உட்காராமல், படிகளை கடக்க போராடி வருகிறது.
 ஏன் நமது வழிபாடுகள், செயல் முறைகள், மதகுருமார்களை அவமதித்தல் தொடர்கிறது. தெய்வ நிந்தனைகள் தொடர்கிறது??
 நமது காப்பியங்களும், புராணங்களும் ஏனோ மாயா ஜாலமாக்கப்பட்டு விட்டன?
 அந்நிய மத கடவுள்களும் அவர்களின் கதைகளும் மட்டுமே நிஜமானது!!!
உலகத்தையே தன் வசத்தில் கொண்டு வரக் கூடிய உயர்ந்த தத்துவங்களை கொண்ட நமது இந்து மதத்தின்.
துரோகிகள் யார்??
பிரபஞ்சமே லிங்க வடிவத்தில் உள்ளது என்று இப்போது தான் ஜெர்மன் ஆய்வகம் கண்டு பிடித்துள்ளது. உலகமே சும்மா ஒரு மாயை அப்படியென்று சொல் வழக்கில் உள்ள நமது சொலவடை இன்று ஆய்வாளர்களால், உண்மை என்று கொண்டாடப்படுகிறது.
பிரும்மம் ஒன்றே! அதன் பெயர்கள் வேறு என்ற பேரூண்மையை கூறும் நமது சனாதன தர்மத்தை இழிவுபடுத்த துடிக்கும் புல்லுருவிகள் யார்??
 அந்நிய நாட்டினரின் கல்வியை படித்து, அடிமையாகி விட்ட நமது அறிவு ஜீவிகளையா? சந்தர்ப்பவாதிகளான நமது  அரசியல் தலைவர்களையா!! வெளிநாட்டு நன்கொடையில் நிலங்களை வளைத்து கொழிக்கும் மதவியாபாரிகளையா?? விலை போன ஊடகங்களையா?இல்லை… மக்களாக இல்லாமல், மாக்களாகி விட்ட இந்து பெரும்பான்மையையா?? யாரை நாம் குற்றம் சொல்ல…
  ஜூன் 21ம் நாள் உலகெங்கும் யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் யோகாவும், தியானமும் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பரவி உள்ளது.  21ம் நூற்றாண்டின் வேகத்தில் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில், மக்களின் மனங்கள் ஊளச்சலில் சிக்கி தவிக்கின்றது. மக்கள் நிம்மதி, அமைதி, சாந்தி தேடி அலைகின்றனர்.
வளர்ந்து வரும் சில ஏழ்மை நாடுகளில் காசை எறிந்தால் மதத்தை தூக்கியெறிந்து வரமக்கள் தயாராக இருக்கலாம்!!
ஆனால் வளர்ந்து விட்ட, அதாவது பொருளாதாரத்தில் வளர்ந்து விட்ட சுதந்திர நாட்டு மக்கள், பணம் இருந்தும் தங்கள் தேடுதலுக்கான பதில்கள், தங்கள் மதத்தில் இல்லை என்பதால் ஆன்ம வேட்கையால் அவதியுறுகின்றனர்.
 அப்போது தான் கிழக்கின் ஆன்மீக கருத்துக்களை தரும் மதகுருமார்களை நாடுகிறார்கள். இதனை தடுக்க பத்து குழுக்கள் இந்த மதகுருமார்களை அடக்க துடிக்கின்றனஉள் நாட்டிலே. அப்படி இன்று இந்த மத வியாபாரிகளிடம் சிக்கியிருப்பது உலக புகழ் பெற்ற இந்து மதகுரு ஐக்கி வாசுதேவ். இந்த ஈஷா யோகா நிலையம் 1992ம் ஆண்டு கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடங்கப்பட்டது.         வாசுதேவ் அவர்களின் வார்த்தைகளில் அவரது குறிக்கோளை கேளுங்கள்.
 எனக்கென்று ஒரு காரியமும் இல்லை. ஆனால் எனக்கு ஒரு கனவு உண்டு. ஒரு நாள், ஒரு பொழுதில், நான் இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்து சென்றாலும், நான் சந்திக்கும் மனிதர்கள், தங்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த பூஉலகிற்கு அதுவே வரமாக அமையும்.
கடவுள் எனக்கு அளித்துள்ள இந்த பிறவியின் பயன், சக மனிதர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை ஏற்படுத்தவும் அந்த பேரானந்தத்தை அவர்கள் வெளிப்படுத்தவுமே ஆகும். ஆன்மீகத்தால் வரும் பேரானந்தத்தை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே என் வாழ்கை!!!
 சத்குரு ஐக்கி வாசுதேவ்
மைசூரை சேர்ந்த சத்குரு ஐக்கி வாசுதேவ் குழந்தை முதலே வித்தியாசமானவர். தனது இளமை பருவத்தை பற்றி கூறுகையில், தனது கண்களில் எப்போதும் தெரியும் பிம்பம், மலைகள், தான் என்றும் எல்லோருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று தான் நினைத்ததாகவும் கூறி உள்ளார். ஆனால் அவரது தேடலுக்கு உண்மையில் விடை எளிதில் கிடைக்கவில்லை. இந்தியாவின் பல இடங்களுக்கு அவர் சுற்றியும் அவரது தேடல் முடியவில்லை. ஆனாலும் செப் 23ந் தேதி, 1982ம் ஆண்டு, சாமுண்டி மலையில், கண்களை மூடி தியானத்தில் இருந்த அவருக்கு திடிரென வசப்பட்டது பேரானந்தம்! தானும் சுற்றியுள்ள சூழலும் ஒன்றாகி, மணி துளிகள் ஒடி மறைய, சுமார் 4 மணி நேரம் கழித்து, அவர் விடுபட்டபோது, ஆனந்த கண்ணீரால் அவர் நனைந்திருந்தாராம்!!
அந்த ஆனந்தம்! அந்த அமைதி! அந்த சாந்தி! இதை உலக மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது தான் தனது வாழ்வின் கடமை! என்று முடிவெடுத்தவர் தான் சத்குரு ஐக்கி வாசுதேவ்!!
வெள்ளியங்கிரி
 அலைந்து திரிந்தும் காணக்கிடைக்காத அவரது கனவு மலை, அதிர்ஷ்டவசத்தால் சட்டென ஒரு நாள் வசப்பட்டது! அது தான் கோவையின் வெள்ளியங்கிரி மலை. தென்னகத்து கைலாயம் என்பர்.
ஈஷா தொடங்கியது
பொது ஜனம் கொண்டாடும் பெரும் கோவிலாக ஈஷா மையம் கடந்த 25 ஆண்டுகளாக பெருகி வளர்ந்து விட்டது.
ஈஷாவின் யோகா, ஈஷாவின் மனதை அறியும் நுணுக்க வகுப்புகள், தியான வகுப்புகள், கோடிக்கணக்கானவர்களுக்கு மன சாந்தியையும், சந்தோஷமாக வாழும் வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்துள்ளது.
தியானலிங்கம், ஒரு பெரும் சக்தியாக, அங்கு வருபவர்களுக்கு, மனவலிமையை கொடுத்து வருகிறது.
ஈஷா செயல்பாடுகள்
ஆன்மீகம், யோகா, தியானம், மனவலிமை தவிர, ஈஷா அறக்கட்டளை ஈஷா வித்யா என்ற பெயரில் பள்ளிகள், மற்றும் ஒரு கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச் சூழலை காப்பாற்ற பெரிதும் முயற்சித்து வருகின்றது.
சத்குரு ஐக்கி வாசுதேவ் நிகழ்ச்சிகள்
பெரும்பான்மை இந்து ஜனங்களின் கேள்விகள். இந்து மதத்தின் அடிப்படை கொள்கைகள், தங்களின் மனநிம்மதி, ஏன்? எதற்காக? என்றே இருக்கும்!! அந்த கேள்விகள், சே! மிகவும் அடிப்படையானது என்று ஒதுக்கி விடாமல், நிதானமாக, சரியான உதாரணங்களோடு விளக்கி சொல்லும் திறன் கொண்டவர் சத்குரு ஐக்கி வாசுதேவ்.
எவ்வளவு விதமான கேள்விகளானும் சரி! எவ்வளவு கடினமான, எவ்வளவு இக்கட்டான கேள்விகளானாலும், குருவின் பதில்களில் அதே இனிமை! அதே நிதானம்! அதே நிறைவு! இது தான் அவரது தனித்தன்மை.
கேள்விகளை கேட்டு பயந்து ஒடாதவர் இவர். இவரது பதில்களால் தான்! இவரது ஆன்மீக விளக்கங்களால் தான்! மக்கள் பெருந்திரளாக வருகின்றனர்.
பல கோடி பக்தர்கள் இவருக்கு உண்டு. மிகவும் முக்கியமாக, இவரால் கோவையில் அதிகமான மதமாற்றங்களை நடத்த முடியவில்லை என்ற எரிச்சலும் உண்டு.
                                       —————————————————————————————————————–
இந்துக்கள் வீதியில் இரங்கி வர வேண்டும்
                                                                    – எச். ராஜா
 
மத மாற்றம் தடைபட்டுள்ளதால் ஈஷா மீது அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஈஷா மட்டும் அல்லாது இதே போல வாழும் கலை ஸ்ரீரவிஷங்கர் குருஜி, அமிர்தானந்தமயி இவர்கள் மிதும் அவதூறு பிச்சாரம் செய்வதே வேலையாக கொண்டுள்ளனர்.இது போன்ற சமயத்தில் இந்துக்கள் ஒன்று சேர்ந்து உணர்வை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது. வீதிக்கு வரவேண்டும்.
பல நூறு ஏக்கர் நிலங்களை ஆக்ரமித்து மாருதி கார் வழங்கி மதமாற்று நிகழ்வு கோவையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சத்துரு அவர்கள் தியானம் யோகா மூலமாக உயர்ந்த நிலையை அடைய சீறிய முறையில் ஆன்மீக பணி மற்றும் சமூகபணி ஆற்றி வருவதால் மத மாற்றம் பெருமளவு தடைபட்டுள்ளது. இதை பொருத்து கொள்ள முடியாத மதமாற்ற சக்திகள் அவர்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.
 ஊடகம்
இந்து மதமாற்றத்திற்கு எதிரான மற்றும் மதமாற்றம் சக்திகளுக்கு ஆதரவாக எந்த செய்தி வந்தாலும் அதை பதிவு செய்வது தற்போது ஒரு டிரென்டாகவே மாறிவருவது மிகவும் வருத்தமான விஷயம்.
 இரண்டு பெண் சன்யாசிகளின் பெற்றோர் புகாருக்கு பின்புலமாக மதமாற்று சக்தி உள்ளது.
நான் இதுவரை 5 முறை ஈஷா வந்துள்ளேன். ஈஷா அமைப்பை நன்கு அறிவேன்.
5000 பேருக்கு கிட்னி காணவில்லை என குற்றம் சொல்கின்றனர்.
அதை போல் ஒரு நிகழ்வை காட்ட சொல்லுங்கள்.
இங்கு அனைத்து செயல்களும் அனைவரும் அறியும் வண்ணமே வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருகிறது என்றார்.
                                                                               ————————————————————————————-
காருண்யா பல்கலைகழகம்
ஈஷா யோகா மையத்தில் இருந்து 12கி.மி தூரத்தில் தான் 750 ஏக்கர் பரப்பில் காரூண்யா கிறிஸ்துவ பல்கலைகழகம் உள்ளது.
ஈஷா யோகா மையத்தின் இன்றைய சச்சரவில் இவர்களின் பங்கு உள்ளது என்று கோவை ஈஷா மையத்தின் ஆதரவாளர்கள்,கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
விவகாரம்
காமராஜ் என்பவர் ஒரு பேராசிரியர் ஒய்வு பெற்றவர். இவரும் இவரது மனைவி சத்யஜோதி மற்றும் செந்தில், விலசன் என்பவர்களும், காவல் துறைக்கு கொடுத்துள்ள புகாரில், காமராஜ், சத்யஜோதியின் இரு மகள்களை ஈஷா மையம், பிடித்து வைத்துக் கொண்டுள்ளதாகவும், அவர்களை துறவியாக்கி விட்டதாகவும், தங்களை பார்க்க ஒருவருடமாக அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
பெண்களின் வயது 32 மற்றும் 30 அவர்களை பேட்டி எடுத்துள்ள பல தொலைகாட்சியில், அந்த இரு பெண்களும் கூறியவை நம்மை சிந்திக்க வைக்கின்றன.
நாங்கள் சிறுவயதிலிருந்தே இங்கே வருவோம். எங்கள் அப்பா, அம்மா, தான் கூட்டி வருவார்கள். கடந்த 7 வருடங்களாக நாங்கள் இங்கே துறவிகளாக இங்கே தங்கி வருகிறோம். இது தான் எங்கள் விருப்பம். இது தான் எங்களுக்கு
சந்தோஷம்.
நாங்கள் இருவரும் பொறியியல் படித்து வேலை பார்த்தவர்கள்
எங்கள் தாய் தந்தையை யாரே தூண்டி விடுகிறார்கள் என்று மட்டுமே தெரிகிறது. என் அப்பா இது போல, தரம் இல்லாமல், ஒரு மகளிடம் பேசக் கூடாததை எல்லாம் பேச கூடியவராக ஆக்கியவர்கள் யார் என்றே தெரியவில்லை.
ஜூலை 13ந் தேதி கூட எங்களை  பார்க்க வந்தார்கள்! எங்களிடம் இருந்து ஈஷா மையம் எந்த சொத்தையும் கேட்கவில்லை! பெறவில்லை!
ஈஷா யோகாவில் ஒரிரு வாரங்கள் வந்து நிம்மதி அடையும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு எங்களைப் போல ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். எங்களுக்கு கடவுள் அருளால் கிடைத்த வரம் இது!! என்று பேட்டி கொடுத்துள்ளனர்.
 ஊடகங்கள்
ஒவ்வொரு ஊடகமும், பத்திரிகையும், இந்த செய்திகளை போட்டு, பக்கங்களை நிரப்பியுள்ளது. ஈஷா பள்ளி குழந்தைகள் 5000 பேர்களுக்கு போதை மருந்து கொடுக்கப்படுகிறதா என்று ஒரு தொலைகாட்சி நிருபர், நடிகர் எஸ்.வி. சேகரை கேட்கிறார்.
என்ன ஆயிற்று இந்த ஊடக சிந்தனையாளர்களுக்கு??
ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளை குறித்து கனவு காணும் உரிமை உள்ளது என்று இந்தியாவில் நம்புகிறோம். ஆனாலும் 18 வயதிற்கு பிறகு, சுயமாக முடிவெடிக்கும் உரிமையை அரசு கொடுக்கிறது. தார்மீக உரிமையோடு பிள்ளைகளுடன் வாதாடி அவர்களை மாற்றுவதற்கு முயற்சிக்க பெற்றோர்களுக்கு முழு உரிமை உள்ளது.
ஆனால் அதற்காக பல கோடி மக்களுக்கு நிம்மதி தரும் ஒரு தெய்வ சந்நிதியை கொச்சைப்படுத்தும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தது.
யார் கொடுக்கும் தைரியத்தில் இவர்கள் இப்படி வசைபாடுகிறார்கள்??
 ஊடகங்களுக்கு ஒரு கேள்வி
ஊட்டி கிறிஸ்துவ பாதிரியர் ஜெயபால், அமெரிக்காவின் மினியசோட்டா மாநகரில் இரு சிறு பெண்களை கற்பழித்த குற்றத்திற்காக அமெரிக்க சிறையில் இருந்து, பல கோடிகளை நஷ்ட ஈடாக கொடுத்து கொடுத்து, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்க அரசு, கன்னியாஸ்திரி ஆக விரும்பிய இரு 14 வயது சிறுமியரை கற்பழித்த பாதிரியாருக்கு ஒரே ஒரு வருடம் தண்டனை கொடுத்துள்ளது. அமெரிக்க சர்ச்சுகள், டாலர்களை கொடுத்து பாதிக்கப்பட்டவர்களிடத்தில் சமரசம் செய்து கொண்டன.
இந்தியா வந்த பாதிரி ஜெயபால், ஊட்டியில் டீச்சர் பள்ளியின் மேலாளர் என்றவுடன், அமெரிக்காவில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். வேடிகன் பாதிரியாரின் உரிமத்தை மீட்டு கொடுத்து, மீண்டும் அவர் பேராயர் என்றவுடன், கொதித்தெழுந்த அந்த அமெரிக்க சிறுமி, இப்போது மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளாள்.
தேவாலயத்தின் புனிதமான இடங்களில் என்னை கற்பழித்த இந்த பாதிரியாரை நம்பி, பல இளம் பெண்கள் பலி ஆக கூடும் அதை நான் தடுப்பேன் என்று சபதம் செய்துள்ளார்.
எங்கே ஊடகங்கள்
இவ்வளவு நடந்துள்ளது! நடந்து கொண்டிருக்கிறது ஆனாலும் பாருங்கள் இவை அனைத்தும் எவ்வளவு ரகசியமானவையாக இருக்கின்றன.
ஏன் எந்த ஊடகமும், அந்த அமெரிக்க பெண்களிடம் பேட்டி எடுக்கவில்லை.
 ஏன் எந்த ஊடகமும் அமெரிக்காவின் இந்த அநியாய, ஒரு வருட தண்டனையை எதிர்க்கவில்லை. ஏன்? ஏன்?? ஏன்??
ஏனென்றால் அவர்களுக்கு தேவையானது கிடைக்காது! கிடைத்தது நின்று விடும்.
ஆனால் இந்து சமய வழிபாடுகளோ? இந்து சமய நம்பிக்கைகளோ? இந்து மத குருமார்களோ? இருந்து விட்டால் போதும், இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு ஊடகங்களும் சேர்ந்து கொண்டு ஊளையிடும்.
இந்துக்கள் இனி இந்த செய்திகளை புறந்தள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
புறந்தள்ளுவது மட்டுமல்லாமல், இனி அந்த பத்திரிகைகளை காசு கொடுத்து வாங்க கூடாது. மானமுள்ள இந்துக்கள், இனி இந்த பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் கொடுக்க கூடாது.
ஐரோப்பாவின் வீழ்ச்சி இப்படித்தான் தொடங்கி இருக்கும் என்றே எண்ணுகிறேன். பொறுத்தது போதும் எம் சொந்தங்களே… என்றும் அழியாத, சுதந்திரமான தர்மத்திற்காக குரல் கொடுப்போம்!! சத்குரு ஐக்கி வாசுதேவுக்கு தோள் கொடுப்போம்!!

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *