ஒரு ஜாலி ட்ரிப் சைக்கிள்ல போலாமா… ஒரு ஜாலி ட்ரிப் சைக்கிள்ல போலாமா…
ஒரு ஜாலி ட்ரிப் சைக்கிள்ல போலாமா… குழந்தைகளாக நாம் சைக்கிள் ஒட்டும் போது. தார் சாலைகள் வழுக்கி கொண்டே போகுமே!!! காற்று நம் மேல் வீச, புத்துணர்ச்சி பிறக்குமே… ஞாபகம் இருக்கிறதா!!  ... ஒரு ஜாலி ட்ரிப் சைக்கிள்ல போலாமா…

ஒரு ஜாலி ட்ரிப் சைக்கிள்ல போலாமா…

குழந்தைகளாக நாம் சைக்கிள் ஒட்டும் போது. தார் சாலைகள் வழுக்கி கொண்டே போகுமே!!! காற்று நம் மேல் வீச, புத்துணர்ச்சி பிறக்குமே… ஞாபகம் இருக்கிறதா!!

 

நீங்கள் வயதானபின் சைக்கிள் ஒட்டினாலும்’’ அந்த சுதந்திரம்!! அந்த உற்சாகம் சைக்கிள் ஒட்டும் போது, நிச்சயம் வரும்.
மருத்துவர்கள் சொல்லுகிறார்கள் சைக்கிள் செய்தால் வாழ்நாள் கூடும் என்று. என் மனம் சொல்லுகிறது எனது வாழ்கையில் உற்சாகம் கூடுகிறது நான் சைக்கிள் செய்தால் என்று.
இரண்டுமே எனக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் தேவையான ஒன்று தானே!!

வாங்க ஒரு ஜாலி சைக்கிள் டிரிப்…
விஜயவாடா வரைக்குமா- பிரியா என்னது?? விஜயவாடா வரைக்கும் சைக்கிள்ல போறதா… சென்னைக்கு மறுபடியும் வருவது எப்படி? என்று கேட்டால், சைக்கிள்ல தான் என்று அசால்ட்டாக சொல்லி நம்மை அசத்துகிறார் பத்ம பிரியா.
தலை சுத்துறதுப்பா.. சைக்கிள்ல இவ்வளவு தூரம் போக முடியுமா? அதாவது சாதாரண மனுஷங்க.. நீங்க பெரிய பொறுப்பான பதவியில இருக்கீங்க. குடும்பம் இருக்கு. அதயும் பாக்கனும் பின் எப்படி சைக்கிளிங்…
சைக்கிளிங் பண்றதுக்கு முதல்ல நானும் ரொம்ப தயங்கினேன். சொன்னா தயவு செஞ்சு நம்புங்க. நான் சைக்கிள் கற்றுக் கொண்டு ஒட்டத் தொடங்கி 3 ஆண்டுகள் தான் ஆகிறது.
சைக்கிள் ஒட்ட தொடங்க வேண்டும் என்றால் வயது வரம்பு உண்டா??
அப்படி எதுவும் இல்லை. எனக்கு இப்போது 40 வயது ஆகிறது. எனது பையனின் பள்ளித் தோழனின் தந்தைதான் கிரேசியன் கோவிஸ் என்ற எனது பயிற்சியாளர். தற்செயலாகத் தான் சந்தித்து பேசினேன். சைக்கிளிங் மனதுக்கு, உடலுக்கும் நல்லது. வாருங்கள் என்று பல முறை என்னை கூப்பிட்டுள்ளார்.
நான் தயங்கினேன். ஒரு நாள் எனது சைக்கிள் உங்கள் வீட்டுக்கருகில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் தான் உள்ளது. அதனை கொஞ்சம் ஒட்டிக் கொண்டு வர முடியுமா என கேட்டார்.
அன்று தொடங்கியது என் சைக்கிள் பயணம். 3 வருடங்களில் நான் படிபடியாக நீண்ட தூரம் சைக்கிளில் செல்ல என்னை தயார் செய்து கொண்டு விட்டேன்.
வாங்களேன் ஜாலியா விஜயவாடா போய்விட்டு வந்துடலாம் என்கிறார் குறும்பாக.

சைக்கிளில் இவ்வளவு தூரம் செல்ல, சிறப்பு பயிற்சி, சிறப்பு அம்சங்கள் கொண்ட சைக்கிள், ஸ்பெஷல் டயட் இதெல்லாம் தேவை தானே?

நிச்சயமாக! இவை எல்லாமே தேவை தான். முதலில் சைக்கிளில் நெடுந்தூரம் செல்ல முறையான பயிற்சி தேவை. அதற்காக ஜிம் செல்வது போல இல்லை இது.

ஸ்டாமினா எனப்படும் தொடர்ந்து சைக்கிள் செய்யும் வலுவை சீர் செய்து கொள்ள பயிற்சி தேவை. அதற்கு தொடர்ந்து காலை, மாலை ஒரு மணி நேரம் சைக்கிள் ஒட்டி செல்ல வேண்டும்.
தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சி தினமும் செய்து வர வேண்டும்.
உணவைப் பொறுத்தவரை நான் சைவம் என்பதால், முளைவிட்டபயிறு, புரத சத்து நிரம்பிய உணவுகள், மற்ற அனைத்து உணவுகளையும் எடுத்துக் கொள்வேன்.
சைக்கிளில் நெடுந்தூரம் செல்லும் போது, நீரில் கொஞ்சம் உப்பு மற்றும் தேன் கலந்து குடித்து வர, களைப்பு அகன்று புத்துணர்ச்சி தரும்.
சைக்கிளின் விலை பற்றி கேட்டிங்கன்னா கொஞ்சம் ஆடித்தான் போயிடுவீங்க. பத்தாயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை சைக்கிள் விலை எகிறும்.
சைக்கிள் எடை குறைவாக இருந்தால் ஒட்டுவது சுலபம். மேலும் சைக்கிளின் வடிவமைப்பும் முக்கியம்.

எப்படி இருந்தது உங்கள் முதல் சைக்கிள் சவாரி?
சூப்பர்! வானில் பறப்பது போல ஒரு சுதந்திர உணர்வு, அது ஒன்று தான் சைக்கிள் பிரியர்களை சாலைகளோடு எப்போதும் இணைக்கிறது என்று நினைக்கிறேன்.
முதலில் 50 கி.மி, பிறகு மகாபலிபுரம் போய் திரும்பி வருவது என்று தொடங்கி இன்று விஜயவாடா வரை போய் வந்துவிட்டேன். இந்த வாரம் 1000 கி.மி இலக்கை நிர்ணயித்துள்ளோம். வாழ்க்கையும் இப்படியே உற்சாகமாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது. என் சைக்கிள் பயணம் என் மனதையும் என் உடலையும் நலமாக வைத்திருக்கிறது.வாங்களேன் என் சைக்கிளை காட்டுகிறேன் என்றவுடன் எனக்கு ஷாக்!!

எப்படி சைக்கிள் இங்கே என்று கேட்க, நான் தினமும் எனது அலுவலகத்திற்கு சைக்கிளில் தான் வருவேன். வேளச்சேரியில் இருந்து ராயப்பேட் தான். பிறகு இங்கிருந்து மாலை மரினாவில் தினமும் 1 1/2 மணி நேரம் உடற்பயிற்சி, பிறகு சைக்கிளில் வீட்டிற்க்கு பயணம். என்று சொல்லி நம்மை ஆச்சர்யபட வைக்கிறார் பிரியா.இவர் 2014-2015ம் ஆண்டு தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

எனக்கு ENDURANCE எனும் தொலை தூரம் செல்லும் சைக்கிள் பயண போட்டி கள், பயணங்களில் தான் ஆர்வம் எனும் பிரியா, சைக்கிள் ஒட்டுவதை எல்லோரும் தொடர வேண்டும் என்பதே தனது விருப் பம் என்றும் தெரிவித்தார்.
வாழ்த்துகள் பத்மபிரியா. அமெரிக்கா வின் 3000 மைல்கள் (ஸிகிவி) (ஸிணீநீமீ கிரீணீவீஸீst கினீமீக்ஷீவீநீணீ) பந்தயத்தில் நீங்கள் பங்கேற்று அதிலும் வெற்றி பெற எங்கள் உளமார்ந்த வாழ்த்துகள்.

பயிற்சியாளருடன்

பத்ம பிரியாவின் சைக்கிள் பயிற்சியாளர் திரு. கிரெஹம் கோவிஸ் அவர்களுடன் பேசிய போது சில அரிய தகவல்களையும் கூறியுள்ளார்.

பள்ளி பருவத்திலே

குழந்தையாக இருக்கும் போதே நாம் பிள்ளைகளுக்கு சைக்கிள் ஒட்ட கற்றுக் கொடுப்பதுடன், அவர்களை சைக்கிள் ஒட்டும் இடங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும்,அதனால் தான் மனைவிமார்கள் சைக்கிள் ஒட்ட வேண்டும். அவர்கள் தாயாக இருந்தால் மட்டுமே இந்த சைக்கிள் பயிற்சியின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க முடியும்.

பள்ளிகளும் கல்லூரிகளும்

தமிழ் நாட்டை பொறுத்தவரை அரசே பல மாணவர்களுக்கு சைக்கிளை கொடுத்து வருகிறது. சைக்கிளில் வரும் மாணவர் களுக்கு ஏதாவது சிறப்பு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை அதே போல கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இனி சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதில் ஆபத்தும் இல்லை.
சாலை வசதிகள்

நமது ரோடுகளில் நடப்பவர்களுக்கு கூடத்தான் பாதுகாப்பில்லை. நடந்து தானே செல்கிறோம். சில இடஙகளில் நாம் கவனமாக செல்ல வேண்டி உள்ளது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.சைக்கிளில் நிதானமாக செல்வது மிக அவசியம். கிரிக்கெட் மட்டும் தான் நமது விளையாட்டு என்றாகி விட்டது. ஏனென்றால் அதனை எடுத்து நடத்த ஒரு தனியார் சங்கம் வந்ததால் தான். மற்றபடி தமிழக அரசு விளையாட்டில் அக்கறை அதிகம் செலுத்துவது இல்லை.

எனது ஒரு மாணவருக்கு அமெரிக்காவின் பிரபலமான சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள ஆசை. ஆனால் பயிற்சிக்கு ஒரு சைக்கிள், மற்றும் அங்கு ஒட்டுவதற்கு ஒரு சைக்கிள் மற்றும் இதர செலவுகள் சேர்ந்து சுமார் 5 லட்சம் தேவைபடும். நான் அமைச்சர் முதல் அதிகாரி வரை கேட்டும் பயனில்லை. பின்னர் தமிழ்நாடு எப்படி பதக்கம் பெறும்.

பீச் தான் சிறந்த ஜிம்

காசு கொடுத்து ஜிம் செல்லும் இன்றைய இளைய சமுதாயம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். ஜிம் என்பது கல்லூரி நாட்களில் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் சைக்கிளிங்கில் அப்படி அல்ல. வாழ்நாளின் பெரும்பகுதி சைக்கிளிங் செய்யலாம். இல்லையென்றால் வீட்டில் கூட சைக்கிள் செய்யலாம், உடற்பயிற்சிக்காக! மேலும் சைக்கிள் செய்து வந்தால் உடல் நலம், கெடாது என்பது தான் இங்கு முக்கியம். அதிகமான ரசாயன புரோட்டின், ஹார்மோன் மருந்து என்று இல்லாமல், இயற்கையாக உடம்பு நலம் பெறும்! திடமாகும், வலு பெறும்.
சைக்கிள் ஒட்டலாம் எல்லோரும் வாங்க…

சைக்கிள் ஒட்டுவதால் என்ன நன்மை
சைக்கிள் ஒட்டுவதால் முதலில் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும்.

சைக்கிள் தொடர்ந்து ஒட்டுவதால், உடம்பில் உள்ள தசைகள் வலுவடையும், உறுதிப்படும்.

சைக்கிள் ஒட்டுவதால் மூட்டுகள் எளிதாக வளைந்து கொடுக்கும்.

இதயம் வலுப்படும்.

மன உளைச்சல் போய்விடும். உற்சாகம் பிறக்கும்

உடல் எடை குறையும்.

எலும்புகள் வலுவடையும்.

பத்து வயது குறையும், அதாவது உங்கள் உடல் நலனில்!!

சைக்கிள் ஒட்டுவதால், மூட்டுகளில் அதிக அழுத்தம் இருக்காது. ஒடுவது அதிக அழுத்தம் தரும் என்பது உண்மை.

சைக்கிள் ஒட்டுவதை நீங்கள் எங்கிருந் தாலும் எளிதாக செய்யலாம்.

வார நாட்களில் இரண்டு முறை சைக்கிள் ஒட்டுவதும், வார இறுதியில் சற்று தொலைவு சென்று வருவதும்,

வாழ் நாள் முழுவதும் நமக்கு நன்மை தரும்.

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *