3 ஆண்டுகால மோடி அரசின்   சாதனைகள்… 3 ஆண்டுகால மோடி அரசின்   சாதனைகள்…
60 ஆண்டுகாலம் எல்லா வளழும் மிக்க இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு இந்தியாவின் வளர்ச்சி யைக் குட்டிச் சுவராக்கி விட்டது. குறிப்பாக கலாச்சாரம், பொருளாதாரம், விவசாயம், கல்வி ஆகியவற்றில் இந்தியாவை உலக அளவில்... 3 ஆண்டுகால மோடி அரசின்   சாதனைகள்…

60 ஆண்டுகாலம் எல்லா வளழும் மிக்க இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு இந்தியாவின் வளர்ச்சி யைக் குட்டிச் சுவராக்கி விட்டது. குறிப்பாக கலாச்சாரம், பொருளாதாரம், விவசாயம், கல்வி ஆகியவற்றில் இந்தியாவை உலக அளவில் மிகவும் பின் தங்கிய நிலைக்கு தள்ளிவிட்டது. இதையெல்லாம் சரிசெய்து பிரதமர் திரு. மோடிக்கு 5 ஆண்டுகாலம் பத்தாது. இருப்பினும் தனது கடுமையான உழைப்பினாலும், தேசத்தின் மீது கொண்ட பற்றினாலும், இந்தியாவை பல துறைகளிலும் காலக் கெடு நிர்ணயம் செய்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதில் பெருமளவு வெற்றியும் பெற்று இருக்கிறார்.
உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும், ‘‘ஞிமீனீஷீஸீவீtவீsணீtவீஷீஸீ’’ போன்ற கடுமையான நடவடிக்கைக்கு பிறகும் இந்தியா 2016-17ல் சீனாவை (6%) பின் தள்ளி 7.2% விகித வளர்ச்சி கண்டிருக்கிறது. வளர்ச்சி விகிதத்தில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மோடி அரசு அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. அவற்றை எழுத பக்கங்கள் பத்தாது என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ஊழலற்ற ஆட்சி

எதிர் கட்சிகள் தோண்டித்துளாவி பார்த்தும் ஒரு மந்திரி மீது கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியவில்லை. அந்த அளவிற்கு வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடக்கிறது. அனைத்து டெண்டர்களும் ளிறீவீஸீமீ மூலமாகவே விடப்படுகின்றன. இதனால் கால விரயமும் ஊழலும் தவிர்க்கப்படுகிறது.

Jan-Dhanகாஸ் மான்யம், பென்ஷன், 100 நாள் வேலை திட்டக்கூலி, மகப்பேது உதவி, வறட்சி நிவாரணம், திருமண உதவி, உர மான்யங்கள் ஆகியவை இடைத்தரகர் இன்றி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

5 லட்சம் கோடிக்குமேல் நேரடியாக வங்கிக் கணக்கு களில் செலுத்தப்பட்டுள்ளது.

இதனால் காஸ் கனெக்ஷன், ரேஷன் கார்டு, மான்யங்கள் வகையில் போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டு அரசுக்கு 50,000 கோடி ரூபாய்க்கு மேல் மக்களின் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது.

உசதி படைத்தவர்கள் காஸ் மான்யத்தை விட்டுத்தர கோரியதால் 1.5 கோடி பேர் காஸ் மான்யம் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

கிராமப்ப்புற ஏழைகள் விறகடுப்பூதி கஷ்டப்படக்கூடாது என்று வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2.4 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வெள்ளத்தாலும், வறட்சியாலும் பாதிக்கக் கூடாது என்று வெறும் 2% பிரீமியத் தொகையில் பயிர் காப்பீடு. இதன் மூலம் இதுவரை 45,000 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.

வேம்பு தடவிய உரங்கள் விதைகள் மூலம் விவசாயத்திற்கு தேவையான மலிவு விலையில் தட்டு பாடின்றி கிடைக்க வழி செய்துள்ளது. இதன் மூலமாக கள்ள மார்கெட்டில் விற்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

இது வரை மின்சாரமே பா£த்திராத 18,500 கிராமங்களில் 13,450 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. 2018க்குள் அனைத்து கிராமங்களும் மின் இணைப்பு கொடுக்க கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்
கருப்புப்பணத்தை வெளிக் கொணரும் வகையில் தானாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்தின் மூலம் 65,000 கோடி ரூபாய் வரி வருமானம் வந்துள்ளது.

Beti-Bachao-Beti-Padao-Yojanaநவம்பர் 8, 2016 அன்று 500,1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததின் மூலம் அரசு 4 லட்சம் கோடி ரூபாய் வரை கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது.

முறைகேடாக லஞ்சம், ஊழல் செய்து சம்பாதித்த பணம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மாற்ற முடியாமல் போனதால், மத்திய அரசுக்கு அந்த பணத்தை மீண்டும் ஜீக்ஷீவீஸீt செய்து எடுத்துக் கொள்ள வழிகிடைத்துள்ளது.

கள்ளப்பணம், கருப்பு பணம், தடுக்கப்பட்டதால் பணவீக்கம் 4% கீழாக குறைந்துள்ளது.

500,1000 நோட்டு பணமதிப்பிழப்பினால் 91 லட்சம் பேர் வருமான வரி வலைக்குள் வந்துள்ளனர்.

வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் வந்ததால் வீட்டுக்கடன் வட்டி மற்றும் புதிய தொழில் தொடங்கும் கடன் வட்டி 9% கீழாக குறைந்துள்ளது.

பிரதமரின் ‘‘முத்ரா’’ வங்கிக் கடன் திட்டத்தின் மூலம் 7.45 லட்சம் பயணாளிகளுக்கு 3 லட்சத்து எட்டாயிரம் கோடி,(3,08 **) ரூபாய் புதிதாக தொழில் தொடங்க கடனாக வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரம்

தமிழ்நாடு இன்று மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் கடும் வெய்யிலை சமாளிக்கிறார்கள் என்றால் அது மோடி அரசின் புதிய மின் திட்டங்களினால் கிடைத்த உபரி மின்சாரமே காரணம்.

மூன்று வருடங்களில் இந்தியா மின் தட்டுப்பாடு இல்லாத நாடாக மாறியுள்ளது. 60 வருடங்களில் மின்சார தயாரிப்பு 1.90 லட்சம் மெகாவாட் இருந்தது 3 வருடத்தில் 3 லட்சம் மெகாவாட் உற்பத்தி திறனை அடைந்து சாதனை படைத்துள்ளது. 3 வருடங்களில் 1.15 லட்சம் மெகாவாட் அளவிற்கு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு மின் மிகை நாடாக மாறியுள்ளது.

இன்னும் 3 வருடங்களுக்கு உண்டான உற்பத்தி திறன் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.

கடந்த மூன்று வருடங்களில் சூரிய சக்தி, காற்றாலை சக்திகளின் மூலமாக மட்டுமே 93.5 சிக்ஷீஷீஷ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு மின்சார இழப்பை தடுப்பதற்கு 5000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் 5% இழப்பு சேமிக்கப்பட்டு தமிழக மின் துறைக்கு 4,500 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 3,97,45,000 (சுமார் 4 கோடி) வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது.

3 வருடங்களில் 12 கோடி லிணிஞி பல்புகள் வழங்கப் பட்டு 22,800 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

* 200 நிலக்கரி சுரங்கம் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்தது காங்கிரஸ் அரசு. ஆனால் மோடி அரசு அதை தடுத்து 82 சுரங்கங்களை மறு ஏலம் விட்டதில் 3.94 லட்சம் கோடி வருவாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி உற்பத்தி 550 டன்னாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

சுகாதாரம்

கிராம சுகாதாரத்தை மேம்படுத்த, திறந்த வெளியில் மல, மூத்திரம் கழிப்பதை தடுக்க 3.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 1.5 கோடி கழிப்பளைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராமப் புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்க 1,78,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இதுவரை 50 லட்சம் வீடுகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளது.

1500 ரயில் நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கபடுகின்றன.

1300 ரயில் நிலையங்களில் WIFI  வசதி செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளில் 2855 KM  இருப்புப் பாதை அகலப்பாதையாக மாற்றப்பட் டுள்ளது.

2014 வரை 5118 KM  ரயில் பாதை மின் வசதியடைந்தது ஆனால் மூன்று வருடங்களில் 3257 KM புதிய மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

900 ரயில் நிலையங்களில் CCTV கேமரா பொருத்தப் பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பெண்கள் பெட்டிகளில் PRF போலீஸ் போடப்பட்டுள்ளது.

சுற்றுலா துறையில் உலகத்தில் 65ம் இடத்தில் இருந்து 40ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தொழில் – எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் 130 இடத்திலிருந்து 12ம் இடத்திற்கு முன் னேறியுள்ளது.

திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 25 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2.43 லட்சபேர் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் சேவையில் அரசின் செயல்பாடுகளை விரைவுபடுத்த 669 சேவையில் மக்களின் சுய ஒப்புதலே (SELF DECLARATION IN THE PLAFE OF CERTIFACTES)  போதுமானது என்று அறிவித்து மக்களின் அலைச்சலை குறைத்துள்ளது.

மக்களுக்கு அருகாமையில் வங்கி சேவை கிடைத்திட அனைத்து தபால் நிலையங்களிலும் வங்கி சேவை தொடங்கி 27,730 தபால் நிலையங்கள் வளைதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையங்கள் மூலம் 2.03 கோடி கிஸான் விகாஸ் பத்திரம் மூலம் கிராமப்புறங்களில் 18,366 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 81 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு 3,750 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளும் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் ‘‘சுரக்ஷ’’ பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 12 ரூபாயில் 2 லட்ச ரூபாய் விபத்து காப்பீடும், 330 ரூபாயில் உயிர் காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.

2G ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர்களின் ஊழல் நிர்வாகத்தினால் கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஙிஷிழிலி நிறுவனம் கடந்த வருடம் 672 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

32 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு 98.2% சதவிகித நிலுவைத் தொகை தரப்பட்டுள்ளது.

2 லட்ச ரூபாய் விபத்து காப்பீடு வெறும் 12 ரூபாயில் மோடியின் நிர்வாகத் திறமையால்!!

3 லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு மேல் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் ஐடி மற்றும் எலக்டிரானிக் துறையில் மட்டும் 1,40,000 கோடி ரூபாய் மூதலீடு செய்யப்பட்டுள்ளது.

2014ல் 375 டாலராக இருந்த அந்நிய செலாவளி கையிருப்பு தற்போது 4,036 மிலிலியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் ஒரு வருட ஏற்றுமதிக்கு போதுமானதாகும்.

சாலை மேம்பாடு

மத்திய நெடுஞ்சாலைத்துறை தற்போது நாளொன்று 100 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கின்றது. இது 2014ல் 60ரிவி ஆக இருந்தது

3.50 லட்சம் கோடிக்கும் மேல் புதிய சாலைகள் மற்றும் அகலப்படுத்தும் பணிகளும், மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

6000 கிலோ மீட்டருக்கும் மேல் நீளம் கொண்ட 70 மாநில சாலைகள் தேசிய நெடுச்சாலையாக அறிவிக்கப் பட்டுள்ளன.

சாலை விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட் டுள்ளளன.

விபத்து நடந்தவுடன் மருத்துவ உடனே கிடைத்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலவச சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க கலப்பு மாதிரி (HYBRID MODEL)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து நடந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு செல்ல ரூபாய் 30,000 வழங்கப்படுகிறது.

24 மணி நேர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

பசுமையை பாதுகாக்க 30,000 ரிவி க்கு மரம் நடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் சுமார் பல துறைகளின் மூலமாக 85,000 கோடி அளவு பணிகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு கொள்கை

வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை கொண்டு வர புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீன வர்கள் பேச்சு வார்த்தையின் மூலம் இலங்கை யிலிருந்து மீட்கப்பட்டனர்.

சிரியாவில் தீவீரவாதிகளால் கடத்தப்பட்ட 14 நர்சு கள் மற்றும் பாதிரியார் மீட்கப்பட்டனர்.

சொல்லில் அடங்கா இன்னும் பல சாதனைகள் படைத்துள்ள சரித்திர நாயகர் பாரத பிரதமர் திரு. மோடி இவர்களை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும்.
ஒவ்வொரு இந்தியனும் இப்போது பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்க ஒரே காரணம் பிரதமர் மோடி என்றால் மிகையில்லை. 3 ஆண்டில் நூறாண்டு சாதனை.
vl

V/.L.நரசிம்மன்

தேசிய பொதுக்குழு உறுப்பினர், பாஜக

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *