ஹார்வர்ட்  தமிழ் இருக்கை எதற்காக! ஹார்வர்ட்  தமிழ் இருக்கை எதற்காக!
இன்றைய அமெரிக்கா, உலக நாடுகளில் ஒரு முன்னோடி யாக, அசுர பலத்தோடு விளங்குகிறது. இன்றைய அமெரிக்காவின் பொருளாதார கொள்கை, அரசியல் பின்புலம், சமூக கொள்கைகளின் அடிப்படை நோக்கம் என்ன என்று நாம் அறிந்து... ஹார்வர்ட்  தமிழ் இருக்கை எதற்காக!

இன்றைய அமெரிக்கா, உலக நாடுகளில் ஒரு முன்னோடி யாக, அசுர பலத்தோடு விளங்குகிறது. இன்றைய அமெரிக்காவின் பொருளாதார கொள்கை, அரசியல் பின்புலம், சமூக கொள்கைகளின் அடிப்படை நோக்கம் என்ன என்று நாம் அறிந்து கொள்வது மிக அவசியம்.

harvard-side

சாதிக்க நினைப்பது என்ன??

தமிழ் இருக்கையின் மூலம் நாம் சாதிக்க நினைப்பது என்ன?? இதனை பற்றிய தெளிவு இல்லாமல், இந்த சங்கம் தமிழ் இருக்கையால், தமிழ் மொழிக்கும் அதனால் தமிழர்களுக்கும் கிடைக்க கூடிய அறிவுச் செல்வம் எத்தகையது.
ஏன் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனில், பொதுவாகவே பல வெளிநாட்டு பல்கலை கழகங்களில் தமிழ் கற்றுக் கொடுக்கிறேன். தமிழ் இலக்கிய ஆராய்ச்சி என்றும் பல வகுப்புகளை நடத்தி கொண்டு தான் இருக்கின்றன. இவை தெற்காசிய மொழி என்ற அடிப்படையில் நடக்கும்.
இதில் தமிழ் அறிஞர்களை நியமிக்காது எழுத்து கூட்டி படித்து, அந்த வெளிநாட்டு பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கே, இந்த ஆசிரியர் வேலை அளிக்கப்படுகிறது.
தமிழ் சரளமாக பேசத்தெரியாத, எழுத தெரியாத, படிக்க தெரியாத ஒருவர் எப்படி நமக்கே தமிழ் கற்றுக் கொடுக்க முடியும். பெரும்பாலும் நமது தமிழ் அறிஞர்கள் அங்கு கற்றுக் கொடுக்க அழைக்கப்படுவதில்லை.

பக்தி இலக்கியம்

இன்று தமிழ் என்றாலே பிரிவினைவாதிகள் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது கண் கூடு. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நமது சங்க இலக்கியங்கள் தான்.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்ந்த நமது தமிழ்நாட்டில் தான், தமிழ் மொழிக்கு என்று எடுத்த மணி விழாவில் பக்தி இலக்கியம் புறக்கணிக்கபட்டு அவ்விழா நடந்தது தான் திராவிட கட்சிகளின் ஒரே சாதனை. முடிவில் தமிழ் இலக்கியங்கள் அழிந்தே போகும்.unnamed

பிரிவினைவாதத்தை ஊக்குவிக்குமா??

அப்படியென்றால் இந்த வெளிநாட்டு பல்கலை கழகங்கள் எப்படிபட்ட தமிழினை கற்றுக் கொடுக்க உள்ளது. எந்தவிதமான ஆராய்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் என்பதே மிக நெருடலான கேள்வி.

ஏன் நெருடல் என்றால் இந்த தமிழ் பிரிவினை வாதிகளுக்கு பெரும்பலத்தை கொடுப்பது அந்நிய தொண்டு நிறுவனங்களே.
நம் மண்ணில் இவ்வளவு பாதகம் செய்யும் தொண்டு நிறுவனங்கள், தங்கள் இடத்தில் என்னவெல்லாம் செய்யத் துணியும் என்பதே நெருடல்.
இதற்கு தான் நாம் கொஞ்சம் வரலாற்று பக்கங்களை திருப்பி பார்க்க வேண்டும்.

வரலாறு

harvard3
இங்கிலாந்து சர்ச்சுகளின் ஆதிக்க பிடியில் இருந்து தப்பி வந்து, சுதந்திரமாக ஏசுவை வணங்குவதற்காக நாடு துறந்து வந்த ‘‘பூயுரிட்டன்ஸ்’’ தான் இன்றைய அமெரிக்காவை புதிய உலகம் என்று குறிப்பிட்டனர்.
அதே நேரத்தில், இந்தியாவை அடைய கடல் மார்க்கமாக வழி தேட தன் பயணத்தை துவக்கிய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ், 1501ம் ஆண்டில் இன்றைய அமெரிக்க கண்டத்தின். கரீபியன் தீவுகளில் வந்து சேர்ந்தார். அங்கிருந்த பூர்வகுடி மக்களை கண்டு, அவர்களை ‘‘இண்டிஸ்’’ என்றே அழைத்தார். அந்த இடம் ‘இந்தியா’ என்றே நினைத்தார்.
இது புதிய கண்டம் என்று அறியப்பட்ட பின்னரே கொலம்பஸ், பல ஆயிரம் மக்களை கொண்டு வந்து புதிய கண்டத்தில் சேர்த்தார்.
கொலம்பஸ், அமெரிக்க வெஸ்புக்கி போன்றவர்கள் கடல் மார்க்கமான புதிய பாதையை கண்டுபிடித்தவுடன்.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்தும் இந்த புதிய உலகிற்கு, பல லட்சம் பேர்கள் குடியேறத் தொடங்கினர். அவர்கள் தங்கள் மதத்தை பரப்ப புதிய இடங்களை தேடியே இங்கு வந்தனர்.
1507ம் ஆண்டு இந்த புதிய கண்டத்திற்கு அமெரிக்கா என பெயரிடப்பட்டது.

பூர்வ குடியினரின் கதி என்ன??

பூர்வ குடி மக்கள் தொகை சுமார் 125 மில்லியன் இருந்தனர் என்று ஒரு அமெரிக்க ஆய்வு கூறியுள்ளது. அந்த மக்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டனர். 10% மட்டுமே உயிர் தப்பி வாழ்கின்றனர்.
பூர்வ குடி எழுத்தாளர் ‘‘வார்ட் சர்ச்சில்’’ என்பவர் எழுதியுள்ள ‘‘இன படுகொலை’’ என்ற புத்தகத்தை படித்தால், நமது கண்களில் வடிவது ரத்தமாகத் தான் இருக்கும்.

ஹார்வர்ட் பல்கலை துவக்கம்

18 வருடங்கள் கழித்து, புதிய நாடான அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலை கழகம் நிறுவப்பட்டது.  ஹார்வர்ட் பல்கலை நிறுவப்பட்டதன் காரணமே, கிறிஸ்த்துவ மதத்தின் வேர்களை உறுதிப்படுத்தவும், அவற்றின் கொள்கைகளை பரப்பவுமே ஆகும்.108 உயர்நிலை கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன. அவற்றின் 106 கல்வி நிலையங்கள் கிறிஸ்த்துவ மத கொள்கைகளுக்காகவே தொடங்கப்பட்டது.
‘‘நமது கடவுள் நம்மை புதிய இங்கிலாந்தில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்து விட்டார். நாம் வீடுகளை கட்டிக் கொண்டு விட்டோம். நமது வாழ்கைக்கு தேவையான சௌகரியங்களை செய்து கொண்டுள்ளோம். கடவுளை தொழுவதற்கு வசதியான இடங்களில் சர்ச்சுகளை கட்டிக் கொண்டுள்ளோம். உள்ளுர் ஆட்சியை கைப்பற்றி நமது ஆட்சியை ஏற்படுத்தி விட்டோம். அடுத்தது நம் மனம் ஏங்குவது, சமயம் சார்ந்த படிப்பே ஆகும்.

tamilchairநாம் அழைத்து வந்த பாதிரிகள் மண்ணில் புதைந்த பிறகு நமது கதி தான் என்ன?? எனவே கிறிஸ்த்துவ சமய போதனைகளை அடித்தளமாக கொண்ட பல்கலை கழகங்கள் மிக அவசியம்.’’
இவை ஹார்வர்ட் பல்கலையை நிறுவிய ஒருவரின் வார்த்தைகள்! கிறிஸ்த்துவ சமய நூலான பைபிளை அடித்தளமாக கொண்ட பல்கலை கழகங்களே அமெரிக்காவில் அதிகம். அதில் தலைவராக முன்பு இருந்தவர்கள் பெரும்பாலும் பாதிரியார்களே தான்.

இதில் என்ன தவறு இருக்க முடியும்

அவர்கள் ஆக்ரமித்த நாட்டில் அவர்கள் தங்கள் சமயம் சார்ந்த சிந்தனையோடு, செயல்பாடுகளோடு வாழ ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதோடு அமெரிக்கா நின்றதா…

உலகமே போர்களமானது எதனால்??

இந்த அமெரிக்கா தனது நாடு, தனது மக்களின் நல்வாழ்வு, தனது சமயம் என்று இருந்தால் இன்று உலகம் உண்மையில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்காவாக இருக்காதா?? ஆனால்…

4

ஏசுவின் ராஜ்ஜியம் ஒன்றே குறிக்கோள்..

உண்மையில் என்ன தான் பிரச்சினை இன்றுஉலகத்தில்??  ஏன் இவ்வளவு ரத்தமும் கண்ணிரும் சிந்துகிறோம்?? உலக நாடுகளில் மிகவும் முன்னேறிய நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் வளத்தை தங்கள் முன்னேற்றத்தை வைத்துக் கொண்டு சந்தோஷமாக தம் மக்களுடன் வாழ்ந்திருந்தால் இந்தளவு ரத்தம் மண்ணில் சிந்தியிருக்காது என்பதே உண்மை.

ஏசுவின் ராஜ்ஜியம் உலகெங்கும் பரவ வேண்டும் என்பதே இவர்களின் ஒற்றை வரி வேதம்! இதுவே இவர்களது அரசியல், சமூக பொருளாதார கொள்கைகளின் அடித்தளம்.
ஒரு பெரும் உண்மை இதில் மறைந்துள்ளது. இந்த ஏசுவின் புதல்வர்களுக்கோ, இல்லை அல்லாவின் சீடர்களுக்கோ, சொந்தமான பூமி என்று இல்லை. இவை இரண்டுமே ஜீடாயிசம் எனும் மதத்தில் இருந்து பிறந்தவை.
ஜென்ம பூமி, மாத்ருபூமி, பித்ரு பூமி என்று தெரியாதவர்கள்! நமது தேசம், தேசீயம், தேசத்தின் ஆன்மா, ஒரு தேசத்தின் கலாச்சாரம், பண்பாடு என எதுவுமே கிடைக்கப் பெறாதவர்கள். இவை தங்களுக்கு கிடைக்காத காரணத்தினால் இவை அனைத்தையும் பெற்றுள்ள பிற நாடுகளில் இந்த தேசியத்தை முற்றிலுமாக அழித்து தங்களின் ஏசுவின் ராஜ்ஜிய கனவுகளை விதைக்கின்றனர்.

ரத்த சுவடுகள்

இதனால் மட்டுமே இன்று உலகளவில் பல கோடி மக்கள் கொடும் விளைவுகளை சந்தித்து வருகின்றனர். இன்று உலகளவில் ஆகப்பெரிய மதங்களாக உருவெடுத்துள்ள கிறிஸ்த்துவமும், இஸ்லாமும் எப்படி பரவியது என்பதை நமது சரித்திரங்கள் முழுமையாக, கூறவில்லை.

ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி, தேசிய சிந்தனையை ஒழித்து கட்டி, கலவரத்தை மூட்டி குளிர் காய்ந்து தான் ஏசுவின் ராஜ்ஜியம் விஸ்தரிக்கப்பட்டது.

கல்விதுறை மூலமாக…

அன்று போர் மூலமாக, தங்களது ஏசுவின் ராஜ்ஜியத்தை நிலை நாட்டிய வெள்ளை சர்ச்சுகள் இன்று நயவஞ்சகமாக தனது பணியினை தொடர்கிறது.

மருத்துவதுறை, கல்வி, சமூக பணிகள், மனித உரிமைகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமை குரல்கள், சட்ட பாதுகாப்பு, அமைப்புகள் பெண்கள் பாதுகாப்பு, சிறார் இல்லங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொழிலாளர் பாதுகாப்பு என பல்வேறு அமைப்புகளை மற்ற நாடுகளில் அமைத்து அந்நாட்டின், அரசை அச்சுறுத்துகிறது.

கோடிக்கணக்கான டாலர்களை பிரதி வருடம் கொடுத்து ஏன் இவ்வளவு அமைப்புகளை கொம்பு சீவி வைத்துள்ளது இந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்.

35 லட்சம் தொண்டு நிறுவனங்கள்

unnamed
இந்தியாவில் பதிவு செய்யப் பட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் 35 லட்சம்!! அதாவது 400 இந்தியர்களுக்கு ஒரு தொண்டு நிறுவனம். நீங்கள் யார்? உங்கள் கொள்கை என்ன? உங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது? உங்கள் கணக்குகளை முறையாக ஏன் அரசிடம் காட்டவில்லை!! என்று தான் மோடி அரசு விளக்கம் கேட்டது.  கணக்கு காட்டிய தொண்டு நிறுவனங்கள் வெறும் 3 லட்சம் தான். மற்றவை? கணக்கு காட்டவில்லை என்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மோடி அரசு கண்டிப்பாக கூறியதுதான் மேலை நாடுகளின் கடும்கோவத்திற்கு காரணம்.

தனக்கொரு சட்டமா?

அமெரிக்கா தனது நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க பல கடுமையான சட்டங்களை இயற்றி உள்ளது. எந்த ஒரு தொண்டு நிறுவனமும், தனக்கு நிதி உதவி கிடைத்தவுடன் அமெரிக்க அரசிற்கு, எங்கிருந்து, எதற்காக வந்தது என்று தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் தண்டனை உள்ளது. தீவீரவாதத்திற்கு எதிரான போரின் காரணமாகவே இந்த கடும் நடவடிக்கை என்ற விளக்கமும் கொடுத்துள்ளது. ஆனால் இந்தியாவிற்க்கு அந்த உரிமையை மறுக்கிறது.

கல்வியில் களங்கம்

கல்விதுறையை போராட்ட களமாக மாற்றியமைத்து பல நூறு வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றும் நமக்கு இது புரியாமல் போனது தான் வேதனை. இந்தியா ஒற்றுமையாக இருந்தால் அதனை அடிமைப்படுத்த முடியாது. எனவே பிரிவினையை கொண்டு வர மதம் பயன்படுத்தப்பட்டது. இந்து மதத்தின் வேர்களை அசைத்து பார்க்க வேண்டும் என்றால் அதனை பிரித்து மேய ‘‘ஜாதி வேறுபாடுகள்’’ கொண்டு வரப்பட்டது. ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கபட்டது. அப்போது தானே இந்து மதத்தில் இருந்து அப்பாவி மக்களை விலக்கி, ஏசுவின் ராஜ்ஜியத்தை ஏற்படுத்த முடியும்.
இந்து தர்மத்தின் கோட்பாடுகள் திரித்து கூறப்பட்டன. பொய்புறைகள் குவிந்தன. ஒவ்வொன்றும் ஆவணங்களாயின.

வெள்ளை இன இந்து மத அறிஞர்கள்

நமது இந்து மதத்தின் வேர்களான வேதங்களை இன்றளவு விளக்கி எழுதியுள்ளது  இந்த வெள்ளை போலி ஆராய்ச்சியாளர்கள் தான்.
சரித்திரம், இலக்கியம், சாஸ்திரம் என இந்து நூல்களின் ஆங்கிலம் மொழி பெயர்ப்புகளை தங்களது கண்ணோட்டத்தில் படித்து, வக்கிரமாக திரித்து, அடிமைகளாக இருந்த நமக்கு பயிற்றுவித்தனர்.

ஆரிய திராவிட கதையும் இதுதான்.

ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அதற்கு முன்னோடியாக தங்கள் போர் வீரர்களுக்கு பதிலாக, கல்வி ஆராய்ச்சியாளர்களை, சரித்திர இலக்கிய ஆராய்ச்சியாளர்களை களத்தில் இறக்கி விடுகிறார்கள்.
இந்த கல்விதுறை ஆராய்ச்சியாளர்கள் அந்நிய நாட்டு பண பலத்தோடு, மக்களை பிரித்தாளும் அமைப்புகளை துவக்கி ஆள் சேர்க்கிறார்கள். சரித்திரங்களை திரித்து கூறி, சாஸ்திரங்களை பழித்து, கலவரத்தையும், பிரிவினையையும் மூட்டுவதே அவர்களின் நோக்கம்.

தமிழ் இருக்கையின் நோக்கம் என்ன??

6

 

 

 

தமிழ் நாடு என்பது உண்மையில் ஒரு தனி நாடே. இது திராவிட இனமான தமிழர்கள் வாழும் நாடே. ஆரிய வந்தேறிகளின் வேதங்களும், இந்து மத கடவுள்களுக்கும் தமிழ்நாட்டில் என்ன வேலை!!!

தமிழ் சமயம் என்பதே உண்மை. தேசியம், தேசிய சிந்தனை, இந்திய பண்பாடு, இந்திய கலாச்சாரம் என்பன எல்லாமே தமிழர்களை அடிமைகளாக்கும் ஆரிய சதி.

இதற்கு சரித்திர சான்றுகள் உள்ளன என்று பல பிரபல அந்நிய பல்கலைகழகங்களில் படித்து தேர்ந்துள்ள கல்விதுறை ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அரிய கண்டுபிடிப்புகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.

தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தோன்றி வரும் ஒரு சில அரசியல் கட்சிகள் இதற்கு விலை போகும். மக்களிடைய சச்சரவுகள் தோன்றி, ஜாதி சண்டைகள் பெருகி, கலவரம் மூளும்.
தமிழன், தனி தமிழ்நாடு, தமிழ் மொழி அரசியல் தலை தூக்கும்…   அப்போது இந்த கலவரம் தீவீரமடைய ஆயுத சப்ளை நிச்சயம் உண்டு.    அப்புறம் என்ன?? இன்னொரு ஸ்ரீலங்காவாக தமிழ்நாடு மாறிவிடும்.
மொத்தத்தில் அப்பாவி தமிழக மக்கள் செத்து மடிவார்கள்.

ஆரிய திராவிட புரட்டு

19ம் நூற்றாண்டு ஐரோப்பாவின் ராஜாங்கம் உலகளவு பெருகிய நேரம். இந்த ஐரோப்பியர்கள் உண்மையில் தாங்கள் வெள்ளை நிறத்தோடு இருப்பதால், தங்கள் ‘‘உன்னத மனித குலம்’’ என்று நினைத்தார்கள். அப்படித்தான் நினைத்து கறுப்பு இன மக்களை அடிமை படுத்தினர்.

தங்களது பாரம்பரிய ரோமானிய கலாசாரத்தை விட்டு, முழுவதும் கிறிஸ்துவ நாடாகி விட்டபடியால், கிறிஸ்துவ மதமே உலகில் சிறந்த மதம் என்றும் நம்பினர். உலகம் முழுவதும் கிறிஸ்துவம் பரவ வேண்டும் என்பதே அவர்களின் நாடு பிடிக்கும் நோக்கத்தின் முதலும் முக்கியமான அங்கமும் ஆகும்.

இந்தியா

இந்த ஐரோப்பியர்கள் இந்தியாவினை வஞ்சகமாக அடிமைபடுத்தி இந்திய நாட்டின் வளத்தை கொள்ளையடிக்க தொடங்கினர்.
இத்தனை பெரிய நாட்டை, ஆள வேண்டும் எனில், இந்தியாவிற்குள் கலவரத்தையும், பிரிவினையையும் விரைவில் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த பிரித்தாளும் சூழ்ச்சியால் மட்டுமே பிரிட்டிஷ் அரசு பல நாடுகளை ஆள முடிந்தது.

நிறம்

இந்தியா மிகப்பெரிய நாடு என்பதாலும், தட்ப வெப்பம் பல இடங்களில் மாறி இருப்பதாலும், இந்தியாவில் கறுப்பு, மாநிறம், கோதுமை நிறம், ஒரளவு வெள்ளை என்று பல நிறங்களில் மக்கள் இருந்தனர். மேலும் வடநாட்டு மொழியான சமஸ்கிருதம் இந்தி போன்ற மொழிகளோடு, ஐரோப்பிய மொழிகளுக்கு ஒரு சில தொடர்புகள் இருப்பதாகவும் நினைத்தனர்.

ஆரியர்

ஆரிய புத்திர! ஆரிய வம்சம் போன்ற வார்த்தைகள் நமது புராணங்களிலும், வேதங்களிலும் வருவது இது ஒரு மனிதனின் குணத்தையும், நல்ல சிந்தனைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் என்பதையும் குறிப்பது. ஆனால் ஐரோப்பிய அறிஞர்கள் இந்த வார்த்தையை கொண்டு, இந்தியாவில் இரண்டு இனம் உள்ளது. ஒன்று வெள்ளையாக இருக்கும் ஆரியர்கள் இரண்டு கறுப்பாக இருக்கும் திராவிடர்கள் என்று புரளியை கிளப்பி விட்டனர். 

மேக்ஸ் முல்லர்

image (6)இந்த புரளியை பொய்யான சான்றுகளோடு நிருபிக்க பிரிட்டன் நிர்வாகிகள் ஜெர்மன் நாட்டு அறிஞர் மேக்ஸ் முல்லரை அணுகினர்…
மேக்ஸ் முல்லர் கிறிஸ்த்துவ மதத்தை உள்நாட்டில் பரப்புவதற்கு, எப்படி இந்து மத நூல்களை உபயோகப்படுத்த முடியும் என்ற ஆராய்ந்து, ரிக் வேதத்தினை படித்து கொண்டிருந்த காலகட்டம்.
ஜெர்மன் நாட்டுகாரர் ஆனாலும் பிரிட்டனின் உதவியை பெற்றுக் கொண்டு, ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தொடங்கினார்.. கிறிஸ்த்துவ மதத்திற்கு நான் ஆற்றும் தொண்டு இது என்றே கூறினார்.

செய்த குற்றம்

ஆரியன் என்பது உன்னத குணத்தை கொண்டவர் என்பதே உண்மையான பொருள் என்று அறிந்திருந்தாலும், பிரிட்டிஷ் அரசு உதவியை நிறுத்தி விடுமோ என பயந்து, ஆரியன் என்பது ஒரு இனம் என்று பொய் சொன்னார்.

திராவிடம் என்பது இந்தியாவின் தெற்கே உள்ள இடங்கள் என்று மேக்ஸ் முல்லருக்கு தெரிந்திருந்தாலும், பொய்யாக, திராவிடம் என்பது ஒரு இனம் என்றார்.

ஜெர்மனி நாடு

இதில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு ஜெர்மனி தான். ஆரிய இனம் தான் மிக உயர்ந்த இனம் எனும் ஐரோப்பிய அகந்தையை முழுவதும் உள்வாங்கிய ஹட்லர், பிறகு தான் கொடூரமாக தனது ஜெர்மன் நாட்டில் வாழ்ந்த யூதர்களை கொன்று குவித்தான்.

மன்னிப்பு கேட்ட மேக்ஸ்முல்லர் 

ஆரியன் என்றால் இனமல்ல. திராவிடம் என்றால் இனம் அல்ல. மொழி தான் என்று ஜெர்மனியில் ஒரு அறிஞர் கூட்டத்தில் மேக்ஸ் முல்லர் பேசினார். 20 வருடங்கள் ஆரியர், திராவிடர் என்பது இரு வேறு இனம் என்ற புரட்டை பேசிய அதே மேக்ஸ் முல்லர், 30 வருடங்கள் ஆரிய திராவிடம் என்பது மொழி தான் என்று வக்காலத்து வாங்கினார்.

may layout final 1-16 - Copy

இதன் நோக்கம் தான் என்ன??

ஏசு ராஜ்ஜியம் தான் என்று சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஏன் ஏதோ பிதற்றல் என்று கூட நினைக்கலாம் ஆனால் இது மட்டுமே உண்மை.

தமிழ்நாட்டை தனியாக பிரித்து, தமிழகத்தை திராவிட மாயையில் புதைத்து, தேசியத்தை ஒதுக்கச் செய்து, மொழி வெறியை கொண்டு கலவரம் ஏற்படுத்தி, ரத்த பூமியாக்கி, அதற்குபின் மருத்துவம் செய்ய கிறிஸ்த்துவ பாதிரிகள் வருவார்கள். இது தான் அவர்களது நீண்ட கனவு.

இது நடக்குமா?? என்பது வேறு. ஆனால் இதுதான் அவர்களது இலக்கு. இந்த ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக்கும் நம்மிடையே பணம் வசூலிப்பது தான் காலத்தின் கொடுமை. தனது குழியை தானே வெட்டிக் கொள்ளும் கடமை மிக்கவர்கள் நாம் தான் போலும். உங்கள் ரொம்ப நல்லவங்கன்னு நாளைக்கு சரித்திரம் நிச்சயம் கூறாது எம் மக்களே………
image (5)

 

 

 

சிந்திப்போமா!

ஷெல்டன் போலக் என்பவர் சமஸ்கிருத முனைவர், ஆராய்ச்சியாளர் என பல பட்டங்களை அமெரிக்க பல்கலைக் கழகங்கள் அவருக்கு சூட்டியுள்ளன.

ஹிட்லர் சமஸ்கிருதம் பயின்ற காரணத்தினாலே தான் இத்தகைய கொலைவெறி கொண்டவனாகி விட்டான் என்பது தான் ஷெல்டன் போலக்கின் 30 வருட சமஸ்கிருத மொழி ஆராய்ச்சியின் அரிய கண்டுபிடிப்பு.இத்தோடு கதை முடிந்திருந்தால் அவரை பற்றிய குறிப்பே நமக்கு தேவையில்லை.

ஆனால் இன்போஸிஸ் நாராயணமூர்த்தியின் மூர்த்திஸ் பாரம்பரிய நூலகத்தின் தலைமை ஆசிரியராக இந்த ஷெல்டன் போலக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நூலகத்திற்காக அமெரிக்க பல்கலைக் கழகத் திற்கு 500 கோடிகளை நாராயணமூர்த்தி கொடுத்துள்ளார்.

இந்தியாவின் உள்ள பல ஆயிரம் சமஸ்கிருத மேதைகளை தவிர்த்து சரளமாக எந்த இந்திய மொழியையும் பேசத் தெரியாத ஒரு வெளிநாட்டவருக்கு ஒரு இதிகாச, புராண நூலக ஆசிரியர் தலைமை பணி கொடுக்கப்பட்டது எதனால். இதுதான் இந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் நிபந்தனையா!

இப்போதும் ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் கற்றுக் கொடுப்பவர் ஜொனாதன் ரிப்லி என்பவர் தான். சிறு கல் என்பதற்கும் பாறை என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழ் கற்றுக் கொடுக்கிறார். தமிழில் சரளமாக பேசத் தெரியாதவர்களை எதற்காக தமிழ் ஆசிரியர்களாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சிந்தியுங்கள் உங்களுக்கு ஒரு தமிழ் ஆராய்ச்சி மையம் அவசியம் என்றால் அதை ஆரம்பித்துக் கொள்ளலாமே!

உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள் வந்து குவிவார்கள் என்பது நிச்சயம்.

நம் கையால் நம் கண்களை குத்திக் கொள்வது தமிழுக்கும் பெருமையல்ல… தமிழருக்கும் பெருமை அல்ல…

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *