ஹலோ  ஒரு நிமிடம்… ஹலோ  ஒரு நிமிடம்…

உலகெங்கும் புத்தாண்டு பூத்து உள்ள இந்த தருணத்திலே தமிழகத்திற்கு ஒரு புதுயுகம் பிறந்துள்ளது. வாழ்த்துகள்.
முதல் முறையாக இந்த 50 வருடங்களில் தமிழகத்தில் ஒரு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் 7 கோடி மக்களின் மனதிலும் ஒரே கேள்வி தான் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
இனி ஆளப்போவது யார்??? நமது நலன் காக்கும் தலைவர் யார்?? ஒரு தலைவனின் தகுதிகள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. மகிழ்ச்சி!
1967ம் ஆண்டு, தமிழர் நலம் காண என்று கூறி, அடுக்கு மொழி பேசி, அரியணை ஏறிய திராவிட கட்சி, 50 ஆண்டுகளில், சாதித்தது என்று என்று இன்னமும் நாம் ஆராய துணியவில்லை.
திராவிட கட்சி, பிரிந்து, ஜாதிக் கட்சிகளாக வளர்ந்து தமிழ் நாட்டை இன்னமும் சூறையாடிக் கொண்டு தான் இருக்கிறது.
இதில் முண்ணணி வகித்த திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து, தமிழ் நாட்டின் வளங்களை அழித்து, தமிழர்களை பிச்சைகாரர்களாக்கி, தமிழகத்தையே ஒரு கையேந்தி பவனாக மாற்றியுள்ளது.
சொந்த நாட்டில் அகதிகள் போல, இலவசங்களை நம்பித்தான் வாழ்க்கை!!!
மறைந்த முன்னாள் முதல்வர், அதிமுக வின் தலைவர் ஜெயலலிதாவின் மறைவும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் முதுமையால் வீழ்ச்சியும் தமிழகத்திற்கு ஒரு விடியலை சாத்தியமாக்கி இருக்கிறது.
இனியாவது ஒரு கணம் சிந்திப்போமா??
ஒரு புதிய தலைமையை ஏற்றுக் கொள்ள போகும் இந்த சமயத்தில், 50 வருடங்கள் நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்போமா??? தமிழகத்தின் இன்றைய நிலையை ஆராய்வோமா???
தரமான அரசு கல்விகூடங்கள் எங்கே? அங்கே தானே சமத்துவம் தொடங்க முடியும்??
மக்களின் நலன் காக்கும் தரமான அரசு மருத்துவ மனைகள் எங்கே???
மாறி மாறி வாக்களித்த விசுவாசமிக்க தமிழக வாக்காளர்களுக்கு இந்த திராவிட கட்சிகள் தந்தது தான் என்ன??
பன்றிக் கூட்டம் போல ஒரு குப்பை மேட்டில், கழிவு நீரின் ஒரத்தில், தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாலைகள் எப்படி உள்ளது?? மின்சாரம், குடிநீர் கேட்டை பற்றி என்ன சொல்ல??
நமது நீரை, அயல் நாட்டுகாரன் உறிஞ்சி எடுத்து, பாட்டிலில் நமக்கே விற்கும் அவலம்!!
எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்! அரசியல் வாதிகளின் பதவி வெறியால், ஜாதிகளின் அமோக வளர்ச்சி!! தடி எடுத்தவன் தண்டல் காரன்!! போதும் சகோதர… சகோதரிகளே! போதும்!!
நமது தலைமையை இனி நாம் சற்று கவனமுடன் தேர்ந்தெடுப்போம்!! சினிமா வசனங்களை நம்பி மோசம் போக வேண்டாம்! அடுக்கு மொழி அரசியல் நமக்கு தேவையில்லை. சினிமா வசனங்களை எழுதும் வசன கர்த்தாக்களுக்கு வேண்டுமளவுக்கு விருது கொடுங்கள்!!
நமக்கு தேவை நமது சந்ததியினரின் வருங்காலத்தை பற்றி கவலை பட கூடிய ஒரு தலைவர் தான்.
எல்லா வளங்களையும் கொண்ட தமிழ்நாடு… வல்லவர்களை கொண்ட தமிழ் நாடு….
வந்தோரை வாழ வைக்கும் நல் உள்ளம் கொண்ட நம் தமிழ்நாடு… 50 வருடங்கள் தேங்கி விட்டது
இந்த புத்தாண்டில் ஒரு புது உறுதி கொள்வோம். தலைவராக என்ன தகுதி இருக்கு?? என்ற கேள்வி பிறந்து விட்டது!! அது போதும் எனக்கு…
இனிய விடியல் பிறக்கட்டும்! தமிழன் நலமாக வளமாக வாழட்டும்.
பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்