ஹலோ ஒரு  நிமிடம்…  may 2017 ஹலோ ஒரு  நிமிடம்…  may 2017
சித்திரையில் பூத்துள்ள புதிய ஹேவிளம்பி வருடம் மக்களுக்கு உற்சாகத்தையும், புதிய பாதைகளையும், கொடுக்க இருக்கிறதாம். என் இனிய தமிழ் மக்களே… ஒரே ஒரு நிமிடம் யோசித்து பார்ப்போமா?? கடந்த 50 வருடங்களில் நம்மை... ஹலோ ஒரு  நிமிடம்…  may 2017

சித்திரையில் பூத்துள்ள புதிய ஹேவிளம்பி வருடம் மக்களுக்கு உற்சாகத்தையும், புதிய பாதைகளையும், கொடுக்க இருக்கிறதாம்.
என் இனிய தமிழ் மக்களே… ஒரே ஒரு நிமிடம் யோசித்து பார்ப்போமா??
கடந்த 50 வருடங்களில் நம்மை ஆண்ட இந்த திராவிட அரசுகள் சாதித்தது தான் என்ன?? ஆரியம், திராவிடம் என்ற பொய்யிலே விதைத்து, வெறுப்பு அரசியலால் வளர்க்கப்பட்ட திராவிட கட்சிகள், நமது தமிழுக்காக, நமது தமிழ் மண்ணிற்காக, நமது தமிழரின் நலனுக்காக இதுவரை என்ன தான் செய்திருக்கிறது??
பொன் விளையும் இந்த பூமியில் ஒடிய லட்சக்கணக்கான ஆறுகளையும், நதிகளையும் வற்ற செய்து அந்த நிலங்களை பங்கு போட்டு கொண்ட மண்ணின் நச்சு செடிகள் அல்லவா இந்த திராவிட கட்சியினர்.
விவசாயிகள் வறுமையினால் வீதிக்கு வந்தது இந்த திராவிட கட்சிகளால் தானே.
தரமான கல்வி என்றாலே தமிழ் நாடு தான் என்று இருந்த நிலைமை மாறி, தமிழ் நாட்டின் கல்வி தரம் உலகளவில் ஆக தாழ்ந்தது என்று பட்டம் பெற செய்துள்ளது இந்த திராவிட கட்சிகள் தான்.
தொழில் துறையில் முண்ணனியில் இருந்த தமிழ்நாடு இன்று காணாமலே போனதும் இவர்களால் தானே.
ஆழ்வார்களும், நாயன்மார்களும் நடந்த இந்த பூமியில் போலி நாத்திகம் பேசி, இன்று தமிழகமே கண்ணியம் கெட்டு, கடமை மறந்து இலவசங்களுக்கு கையேந்தி, போதையில் தள்ளாடுகிறது!!
உங்கள் தாய் மொழிக்கு ஆபத்து என்று மீண்டும் கிளப்ப பார்க்கிறார்கள், இந்த கலைஞரின் பகுத்தறிவு பாசறையின் எச்சில் இலைகள்.
தமிழ் என்ற நமது மொழி, 50 வருட இடைவெளியில் ‘‘தமில் ஆகிவிட்டது’’ எந்த இளைய தலைமுறையினருக்கும், குறளும் தெரியாது. இலக்கிய இலக்கணமும் தெரியாது. இது தான் உண்மை நிலை. இதற்கு மேலும் என்ன ஆபத்து வந்து விட போகிறது??
இந்தி மொழியை படித்துவிட கூடாதாம்!! ஆங்கிலமும் தேவையில்லை!! தமிழ்மொழி என்று கிள்ளிவிட்டு, தமிழகத்தை இன்னுமொரு ஸ்ரீலங்காவாக மாற்ற பல தீய சக்திகள் பிணந்தின்னி கழுகுகளாக வட்டமிடுகின்றன.
இந்தியா வீறு கொண்டு வளர்ந்து வருவதை சீனா பொறுக்காது என்பதால் இந்த கம்யூனிஸ தீய சக்திகளுக்கு அது உதவும் என்பது திண்ணம்.
தமிழர்கள் வளம் கண்டு விட்டால், மதம் மாற்றுவது எளிதல்ல என்பதால் அந்நிய நிதி உதவியும் இந்த தீய சக்திகளுக்கு தான்.
இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான்!! முழு உதவியும் கொடுத்து தீவீரவாதத்தை பரப்ப…
மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில், இஸ்லாமிய தீவீரவாதம் வெடிக்கும் என்று ஆருடம் கூறியவர்கள், ஏமாந்து நிற்கின்றனர்.
உ.பியில் பெரும்பான்மை இஸ்லாமியர் வாழ்ந்த தொகுதியில் உள்ள 92 இடங்களில் 84 இடங்களை மோடி வென்று விட்டார் மிக அண்மையில்.
பாஜக வின் ஆட்சியில் மோடி வாக்குறுதி அளித்தது போல எல்லோருக்கும் வளர்ச்சி!! எல்லோருக்கும் முன்னேற்றம்! ‘‘என்பதை மக்கள் கண் கூடாக பார்க்கின்றனர்.
தமிழ்நாடு மீண்டும் இழந்த பெருமையை மீட்டு பொலிவடைய ஒன்றுபடுவோம்! தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வோம். வலிமையான பாரதம்!! பெருமையான தமிழகம்!

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *