ஹலோ ஒரு  நிமிடம்… july 2017 ஹலோ ஒரு  நிமிடம்… july 2017
உயிரினும் மேலான எனது பாரத மாதாவிற்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றேன். பாராளுமன்றமே எனது கோயில். இந்திய சட்டமே எனது வேதம் என்று பாராளுமன்ற படிகளை பணிந்து, பதவி ஏற்றவர் நமது பாரத... ஹலோ ஒரு  நிமிடம்… july 2017
உயிரினும் மேலான எனது பாரத மாதாவிற்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றேன். பாராளுமன்றமே எனது கோயில். இந்திய சட்டமே எனது வேதம் என்று பாராளுமன்ற படிகளை பணிந்து, பதவி ஏற்றவர் நமது பாரத பிரதமர் மோடி!!
குஜராத்தின் முதல்வராக பதவி எடுத்த நாள் முதலாக, சுமார் இந்த 16 வருடங்களில், அவர்மேல் ஒரு ஊழல் குற்றச் சாட்டும் கிடையாது. ஒரு நாள் கூட விடுமுறை என்று எடுத்தது கிடையாது. தம் மக்கள் நல்வாழ்வு பெற வேண்டும். இல்லை என்ற சொல்லை, இல்லாதவர்களின் ஏடுகளில் இருந்து எடுக்க வேண்டும் என்ற அந்த ஒற்றை இலக்கே, பிரதமர் மோடியின் உந்து சக்தி எனலாம்.
ஏனென்றால் 7 வயதிலிருந்தே தேசிய சிந்தனையில் தன்னை பிண்ணி பிணைத்துக் கொண்டவர் அவர். வறுமையின் நிறத்தை அறிந்தவர்!!
பாரத பிரதமர் என்று மட்டும் இல்லாமல், இன்று உலக நாடுகளில் உயர்ந்து நிற்கும் மாபெரும் ஆளுமை கொண்டவர்.
தேசிய நலன் மட்டுமே மூச்சாக கொண்டவர். இருந்தும் ஏன் அவருக்கு எதிர்ப்புகள் என்று பொது மக்கள் சிந்திக்க வேண்டும்.
பிரதமர் மோடியை எதிர்ப்பவர்கள் யார்??
வியாபாரத்தில் கோடிகளை சம்பாதித்தாலும், பொய் கணக்கு காட்டி, வரி ஏய்ப்பு செய்பவர்கள்.
கள்ளச் சந்தையில் வியாபாரம் செய்தவர்கள்
அரசியலில் நேர்மையற்ற முறையில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள்.
ஹவாலா தொழில் செய்பவர்கள்.
வெளிநாட்டு நிதியை பெற்றுக் கொண்டு, நமது நாட்டின் வளர்ச்சி திட்டங்களை முடக்குபவர்கள்.
வெளிநாட்டு நிதியால் தொண்டு நிறுவனங்களை நடத்தி மதம் மாற்று வியாபாரிகள்.
14,000 லட்சம் கோடி பணப்புழக்கத்தை 9000 ஆயிரம் கோடிகளாக குறைத்துள்ள போதிலும் பணத்தட்டுபாடு     இல்லை?? எப்படி?? பணம் மதிப்பிழந்த கோவத்தில் தான் கறுப்பு பண முதலைகள் எதிர்க்கின்றனர்!!
எஜமான விசுவாசத்தோடு வக்காலத்து வாங்கும் ஊடகங்கள்!!
அரசின் திட்டங்கள், பயனாளிகளுக்கு நேரடியாக சென்று சேராமல் தடுத்து, கமிஷன் அடிப்பவர்கள்.
நூறு நாள் வேலை திட்ட பயனாளிகளும், அதன் மூலம் கமிஷன் அடிக்கும் நிர்வாகிகள் கூட்டம்…
இந்த பட்டியல் முடியாது. நீண்டுகொண்டே தான் போகும். மொத்தத்தில் தேச துரோகிகளுக்கு, இன துரோகிகளுக்கு மோடியை பிடிக்காது.
துரோகிகளின் மெகா கூட்டணி திட்டத்தின் நோக்கம் ஒன்று தான். ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி என்று முழுவதுமாக இந்தியா மாறிவிட்டால், எப்படி நாமும் நமது வருங்கால சந்ததியினரும் கொள்ளையடிப்பது?? என்பது தான்??
இந்த துரோகிகள் தங்களை மறைத்து கொள்ள உதவும் முகமூடிகள்… சிறுபான்மை, பகுத்தறிவு, மொழி அரசியல், பிராந்திய வாதம், இன அரசியல், சாதி அரசியல், மதச்சார்பற்ற தன்மை, பொதுவுடைமை, அறிவு ஜீவி…
பாரத மக்கள் நாம் தான் இவர்களை இனம் கண்டு ஒதுக்கித் தள்ள வேண்டும்.
பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனும் நலமாக வாழ வேண்டும். ஒரே மக்கள்! ஒரே தேசம்! உன்னத பாரதம்! எனும் பிரதமர் மோடியின் கனவை நனவாக்க வேண்டும். ஒன்று படுவோம்! பாடுபடுவோம்!!

Thanks &  Regards

T.C.Murali Krishnan
95001 27709 / 95513 94455

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *