ருக்மணி அருண்டேலின் ஆன்மா மன்னிக்குமா?! ருக்மணி அருண்டேலின் ஆன்மா மன்னிக்குமா?!
கலா ஷேத்ரா என்றால் கலைகளின் ஷேத்திரம் என்று அர்த்தம். கலைகளின் உன்னத கோயிலாக விளங்கும் பெருமை கொண்ட கலாஷேத்திரா ருக்மினி தேவி (1904-1986) என்ற பரத கலைஞரால் ஜனவரி 1936ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.... ருக்மணி அருண்டேலின் ஆன்மா மன்னிக்குமா?!

கலா ஷேத்ரா என்றால் கலைகளின் ஷேத்திரம் என்று அர்த்தம். கலைகளின் உன்னத கோயிலாக விளங்கும் பெருமை கொண்ட கலாஷேத்திரா ருக்மினி தேவி (1904-1986) என்ற பரத கலைஞரால் ஜனவரி 1936ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

பரத கலைஞர் ருக்மணியின் ஆளுமையை பற்றி நாம் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு ஒர் உதாரணம் அன்றைய மத்திய அரசின் பிரதமராக இருந்த மொரார் ஜி தேசாயின் அழைப்பு தான்.

பாரத நாட்டின் அதிபராக பதவியேற்க கலைஞர் ருக்மணி அருண்டேலை பிரதமர் அழைத்தார். ஆனால் ருக்மணி தேவியோ கலையே என் மூச்சு என் கலை பயிற்றுவிக்கும் இந்த கலாஷேத்திராவிலிருந்து நான் வர இயலாது என்று நன்றியோடு தெரிவித்து விட்டார்.

இந்தியாவின் பாரம்பரியம்
இந்திய கலைகளின் உறைவிடமாகவே கலாஷேத்ராவை நாம் பார்க்க வேண்டும். குடும்ப பெண்கள் பரதம் பயில வேண்டும். அதில் கவுர குறைவு இல்லை. பெருமிதம் உள்ளது என்று உணர வைத்தவர் ருக்மணி அவர்கள்.April magazine-47 - Copy
பரத நாட்டிய கலைக்கு புத்துயிர் அளித்தவர் ருக்மணி தேவி என்றால் மிகையில்லை. பரத நாட்டியம், கதகளி, இதர நாட்டிய சாஸ்திரங்கள் மற்றும், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் என பல இசைக் கருவி தேர்ச்சிகளையும் பயிற்றுவித்து, பல லட்சம் கலைஞர்களை உருவாக்கி வருகிறது கலாஷேத்ரா.
கலாஷேத்ரா பாணி
கலைஞர் ருக்மணி தேவி முதலில் இருந்த பந்தநல்லூர் பாணியிலிருந்து, மாறி, புதிதாக கலாஷேத்ரா பாணி ஒன்றை தோற்றுவித்தார். இந்த பாணியில் அடவுகள், மற்றும் முத்திரைகள் நேர் கோணங்களில், முதுகில் இடுப்பில், உடம்பில் வளைவுகள் இல்லாமல், இருக்கும்.

இந்த பாணி உலகெங்கும் பிரசித்தம் பெற்றுள்ளது.
லீலா சாம்சன்
காங்கிரஸ் அரசின் 10 வருட ஆட்சி (2004-2014) இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் சீர் குலைக்கவில்லை.April magazine-47
இந்திய நாட்டின் கலை, கலாச்சாரத்தையும் சீர்குலைக்க முயன்றுள்ளது.
மன்மோகன்சிங் தான் பிரதமர் என்றாலும், காங்கிரஸின் ஒரே தலைவர் சோனியா தான் என்பது சிதம்பர ரகசியம்.
சோனியாவின் தோழி

சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் நடன ஆசிரியராக இருந்தவர் லீலா சாம்சன் எனும் கிறிஸ்துவ பெண்மணி. இவரைத்தான், கலாச்சார அமைச்சரின் சார்பில், கலாஷேத்திராவின் தலைவராக சோனியா அறிவித்தார்.
முறைகேடு
லீலா சாம்சன் பணி நியமனத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஒருவரை எப்படி அரசு பரிந்துரைத்தது!! அரசு கலாஷேத்திராவில் பணி புரிபவர்களில் ஒருவரை தலைவராக நியமித்தால் மட்டுமே, பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை லீலா சாம்சன் போன்ற வெளி ஆட்களுக்கு பயன்படுத்தியது ஏன் என்ற கேள்விகளும் எழுந்தன. இருந்தும் காங்கிரஸ் அரசு அதனை புறந்தள்ளி, லீலா சாம்சனின் தலைமையை உறுதி செய்தது.
புற்று நோயாக…
உலக புகழ் பெற்ற பாரம்பரிய கலை கூடமான கலாஷேத்ராவில், ஒரு புற்றுநோயாக நுழைந்த லீலா சாம்சன், முதலில் செய்த காரியம், கலாஷேத்ரா என்பது எந்த மதமும் சாராத ஒரு கலைக்கூடமாக திகழ வேண்டும் என்று அறிவித்தது தான்.
இது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. இந்திய பாரம்பரிய அரிய கலைகளின் உறைவிடமே இந்து மதம் தானே என்று அங்கிருந்த, கலை ஆசிரியர்கள் மேலும் கலாஷேத்ராவின் நிர்வாக இயக்குநர்கள் போர்கொடி தூக்கினர்.

April magazine-47 - Copy (2)

கூத்தம்பலம்
ருக்மணி தேவியின் மிகப் பெரிய கனவு, தனது கலை பீடமாகிய கூத்தம்பலத்தில் பல லட்சம் இளங்கலைஞர்கள் பயில வேண்டும் என்பதே.
1970களில் அரசு அளித்த 99 ஏக்கரில், கலாஷேத்திரா தனது கலைப்பணியை தொடர்ந்து, உலகளவில் பிரசித்தி பெற தொடங்கியது.
ருக்மணி தேவி, தனது மாணவச் செல்வங்களுக்காக, பிரத்யேகமாக, பல இயற்கை வசதிகள். வாஸ்து உள்ளிட்ட சம்பிரதாயங்களை உள்ளடக்கிய இந்த கூத்தம்பலத்தை உருவாக்கினார்.
இங்கு தான் அனைத்து கலை பயிற்சிகளும் நடக்கும். கலை படைப்புகள் அரங்கேறும். ருக்மணி தேவி மறைந்ததும் இந்த கூத்தம்பலத்தின் வாயிலில் அவரது நினைவாக அவரது உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரது ஆன்மாவே அங்கு உறைவதாக, கலைஞர்களும், மாணவர்களும் உணர்கின்றனர்.
லீலா சாம்சனின் கலைத் துரோகம்
தனது வாழ்நாளை எந்த கலைக்காக அர்ப்பணித்தாரோ அந்த கலையின் இதயமாக கூத்தலம்பத்தை நிறுவிய ருக்மணி தேவியின் ஆன்மாவிற்க்கு லீலா சாம்சன் செய்த மாபெரும் துரோகம் இது.
புதுமைபடுத்த போகிறேன் என்று சொல்லி கூத்தம் பலத்தை இடித்து விட்டார் லீலா சாம்சன். ருக்மணி தேவி யின் சிலையையும் அப்புறப்படுத்தி விட்டார். வெகுண்ட கலைஞர்கள் சட்டரீதியாக, உணர்வு பூர்வமாக மோத தொடங்கினர்.
தன்னுடைய சிலையை செய்யச் சொல்லி மாமல்லபுர சிற்ப கலைகாரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டுள்ளார் லீலா சாம்சன் என்ற புகாரும் உள்ளது.
ஒய்வு வயது
மத்திய அரசின் ஒய்வு வயது 60 என்றாலும், லீலா சாம்சன் ஒய்வு பெற மறுத்தார். மத்திய அரசு 2012ம் ஆண்டில் அவரது பணியை நீட்டித்து ஒப்பந்தம் செய் தாலும், கலாஷேத்ர நிர்வாகிகள் சட்ட பூர்வமாக அதனை எதிர்த்து வென்றார்கள். இறுதியில் லீலா சாம்சன் தனது பதவியை விட்டு விலகினார்.
ஆனால் அவர் உலகளவில் பிரசித்தி பெற்ற ஒரு பாரம்பரிய கலை கூடத்திற்கு எவ்வளவு சேதம் விளைவிக்க முடியுமோ அவ்வளவும் செய்து முடித்து விட்டார். இனியாவது நமது அரசு கொள்கை பிடிப்பு, சமயம் சார்ந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இத்தகைய பதவிகளை வழங்க வேண்டும் என்கின்ற சட்டத்தினை கொண்டு வரவேண்டும்.
லீலா சாம்சனின் நிதி மோசடி
கலாஷேத்ரா புதுப்பிக்கும் திட்டம் தொடர்பான செலவுகளில் பல அத்து மீறல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.April magazine-48 - Copy (2) சுமார் 7 கோடிகள் செலவு செய்தும் இன்னமும் கூத்தம் பலம் முடிக்கப்படாமலேயே இருக்கிறது. இதற்கான கணக்குகளில் ஏக குளறுபடிகள் உள்ளன. வரையறுக்கப்படாத ஒப்பந்தகாரர்கள், தொழில் அனுபவம் இல்லாத ஆலோசகர்கள் என அடுக்கி கொண்டே போகிறது புகார்கள்.
பணி ஒப்பந்தங்கள்
கலாஷேத்ராவில் தொடர்ந்து பல காலம் பணி புரிந்து வருபவர்களை தவிர்த்து, லீலா சாம்சன் பணி ஒப்பந்தம் பல்வேறு அனுபவமற்ற, வெளி நபர்களை அமர்த்தி உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இத்தனைக்கும் பல பிரபலங்கள் கலாஷேத்ராவின் தலைமை நிர்வாக அமைப்பில் இயக்குநர்களாகவும் இருந் துள்ளனர். நீதிபதி மோகன் மத்திய அரசிற்கே கூட தனது கண்டத்தினை பதிவு செய்துள்ளார். ஆனால் காந்தியின் பேரன் கோபால்தாஸ் காந்தி மட்டும் மௌனிக்கிறார். கலாஷேத்ரா தனது பணியை தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்பதே. உலக கலைஞர்களின் ஒரே  வேண்டுகோள்.

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *