ராக்கெட் விடுவதனால் என்ன  கிடைத்துவிடும்? ராக்கெட் விடுவதனால் என்ன  கிடைத்துவிடும்?
ராக்கெட் விடுவதனால் என்ன கிடைத்து விடும்? அதனை தூக்கி வீசவேண்டும், நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன – நடிகர் சிவகுமார் நிரம்ப படிப்பவர், அடக்கமானவர், பல இடங்களில் மாணவர்களுக்கு போதிப்பவர் என நடிகர்... ராக்கெட் விடுவதனால் என்ன  கிடைத்துவிடும்?

ராக்கெட் விடுவதனால் என்ன கிடைத்து விடும்? அதனை தூக்கி வீசவேண்டும், நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன
– நடிகர் சிவகுமார்
நிரம்ப படிப்பவர், அடக்கமானவர், பல இடங்களில் மாணவர்களுக்கு போதிப்பவர் என நடிகர் சிவகுமார் மீது மக்கள் மரியாதை வைத்துள்ளனர்.
உலக நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு தேசமும் மாற வேண்டும், மாறியே தீரவேண்டும், இல்லை என்றால் போட்டு சாத்துவார்கள்.
ராக்கெட் விடுவது என்பது விளையாட அல்ல, அந்த அனுபவத்தில் தான் ஏவுகனைகள் செய்ய முடியும், அந்த செயற்கைகோள்களை நிறுத்துவதால் தான் நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், தொலைகாட்சி, தொலை தொடர்பு என சகலத்தையும் இயக்கமுடியும்
மொத்தத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக வானத்தி லிருந்து பூமியினை விஞ்ஞான ரீதியாக இயக்குபவை இந்த செயற்கைகோள்கள், அவற்றை நிறுத்த செய்வது இந்த ராக்கெட்டுகள்
விண்வெளியில் ஒரு நாடு அடையும் வெற்றியும் அனுபவமே அவற்றை ராணுவ ரீதியாக பலமடைய செய்யும். அவை அன்றி ஒன்றும் செய்யமுடியாது
இன்னொன்று 104 செயற்கைகோளை ஏவியிருக் கின்றோமே, இவற்றால் எவ்வளவு வருமானம் தெரி யுமா? அவை இந்த தேசத்தின் அந்நிய செலாவணி அல்லவா?
பாதுகாப்பு, வருமானம், உலக அரங்கில் மதிப்பு என எவ்வளவு சாதனைகளை செய்திருக்கும் காரியத்தினை இப்படியா விமர்சிப்பார்?
சினிமா இந்த சமூகத்தினை சீரழிக்கின்றது, இந்த தமிழக சீரழிவுக்கு காரணமே சினிமா என இவர் ஏன் சொல்லவில்லை? பாகுபலியும், எந்திரனும் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா?
இவர் தானொரு நடிகர் மட்டுமே என்பதை நிரூபித்து விட்டார்
ஒரு மாபெரும் சாதனையினை, அமெரிக்காவும் பிரான்சும், ரஷ்யாவும் வரவேற்கும் பெரும் சாதனை யினை கொச்சைப்படுத்தி விட்டார்!
விக்ரம் சாராபாய், சதிஷ் தவான், அப்துல் கலாம் என எத்தனை மேதைகள் தங்கள் வாழ்வினை அர்ப்பணித்து பெற்ற வெற்றி இது
எத்தனை வல்லரசுகள் தடுத்தும், மிரட்டியும், ஏளனம் செய்தாலும் அதனையும் மீறி இந்த பாமர தேசம் சாதித்த சாதனை அது
எவ்வளவு அவமானபட்டிருக்கின்றோம், எவ்வளவு இழந்திருக்கின்றோம்?
எப்படிபட்ட பெரும் போராட்டம் போராடி இதனை சாதித்திருக்கின்றோம்
சிவகுமார் என்ற நடிகருக்கு ராக்கெட் விஞ்ஞானம் எப்படி புரியும்?
கல்வி நிலையங்களே நீங்கள் யோசியுங்கள்!
தண்ணீர் பஞ்சம் உள்ள நாட்டில் இப்படி பணங்களை வீணடிக்க கூடாதாம், அன்னாருக்கு வேதனை
இனிமேலாவது நடிகர் சிவகுமார் தனக்கு தெரிந்த சில கதைகளை இலக்கியம் என்ற பெயரில் முதியவர்களுக்கு கூறட்டும். இளம் உள்ளங்களின் மனதில் குழப்
பத்தை உண்டு பண்ண வேண்டாம்!

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *