ராகு&-கேது பெயர்ச்சி பலன்கள்! – பிரும்மஸ்ரீ பாலக்காடு ஸ்ரீ சூர்யன் நம்பூதிரி  M.A.,(Astro) M.Phil.,(Astro) ராகு&-கேது பெயர்ச்சி பலன்கள்! – பிரும்மஸ்ரீ பாலக்காடு ஸ்ரீ சூர்யன் நம்பூதிரி  M.A.,(Astro) M.Phil.,(Astro)
ஹேவிளிம்பி வருடம் ஆடி மாதம் 11ம் தேதி (27.7.2017) வியாழனன்று, பிற்பகல் 12-.37க்கு கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். அதன் பலா பலன்கள் சுருக்கமாக ராசிபடி கூறப்பட்டு உள்ளது.... ராகு&-கேது பெயர்ச்சி பலன்கள்! – பிரும்மஸ்ரீ பாலக்காடு ஸ்ரீ சூர்யன் நம்பூதிரி  M.A.,(Astro) M.Phil.,(Astro)

ஹேவிளிம்பி வருடம் ஆடி மாதம் 11ம் தேதி (27.7.2017) வியாழனன்று, பிற்பகல் 12-.37க்கு கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.
அதன் பலா பலன்கள் சுருக்கமாக ராசிபடி கூறப்பட்டு உள்ளது. ஜென்ம ஜாதகத்தில் அவரவர் ஜாதகப்படி ராகு – கேது இருக்கும் கிரகத்தின் வீட்டிற்கு பலன் கொடுப்பார்கள்.
மேஷம்

mesham
27 ஜூலை முதல் உங்கள் ராசிக்கு, 4ம் இடமான சுக, வித்யா, மாத்ரு ஸ்தானத்தில் ராகுவும், ஜீவன, கர்ம, தொழில் ஞானத்தினை அளிக்ககூடிய கேந்திர ஸ்தானமான 10ம் இடத்தில் கேதுவும் வருகை தர இருக்கிறார்கள். உழைப்பிற்கு ஏற்ற பலன்களை தருவார்கள். தாயின் உடல் நலன் பேணுதல் நலம்.
பூர்வீக சொத்துகளை பாதுகாத்து வரவும். வாக்கு வாதங்களை தவிர்த்தல் நலன்! பொருள் வரவும், தன வரவும், தேவையான அளவிற்கு இருக்கும்.
ரரகு சந்திரனின் வீட்டில் இருப்பதால், சதா சர்வகாலம் ஏதேனும் சிந்தித்து கொண்டே இருப்பீர்கள். அனாதை, வயாதானவர்களுக்கு உதவி செய்து வாருங்கள்.

பரிகாரம்: ஸ்ரீ காளகஸ்தி சென்று வாருங்கள். ராகுகால துர்க்கை வழிபாடும், எமகண்டத்தில் விநாயகர் வழிபாடும் நன்மை பயக்கும்.

ரிஷபம்

rishabam
27 ஜூலை முதல் உங்கள் ராசிக்கு தைர்ய, போக, சகோதர ஸ்தானமாகிய 3ம் இடத்தில் ராகுவும், பிதுர், பாக்ய, தர்ம, பயண இறையருள், குருவருள் ஸ்தானமான 9ம் இடத்திற்கு கேதுவும் வருகை தர இருக்கிறார்கள். ராகுவிற்கு கடகம் பகை வீடு, கேதுவிற்கு மகரம் நட்பு வீடாகும்.
உங்களுக்கு ஏற்றமான வாழ்வு தருவார்கள். ராகு – கேது இருந்த போதிலும் சகோதர – சகோதரிகளிடத்து உறவினை தாமரை இலை தண்ணீராய் பட்டும், படாமலும் இருந்திடுங்கள். கவனம் எச்சரிக்கை தேவை.
பார்க்கும் பணியில் வருமானம் போதுமான அளவு இருக்கும். பாக்ய ஸ்தான கேதுவினால், திடிர் பண வரவு உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டால் நன்மை பயக்கும். டிசம்பர் முதல் கட்டம சனி காலம் ஆரம்பிப்பதால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலமிது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தாய் வழி உதவியில் கவனவம் தேவை.
பரிகாரம்: ராகு கால துர்க்கை வழிபாடும். வியாழனில் குரு, ஆஞ்சநேயர் வழிபாடும், சனி கிழமையில் சனி பகவான் வழிபாடும் சிறப்பு!!

மிதுனம்

mithunam - Copy27 ஜூலை முதல் உங்கள் ராசிக்கு, தன குடும்ப வாக்கு ஸ்தானமான 2ம் இடத்தில் ராகுவும், ஆயுள், ஆரோக்ய ஸ்தானமான 8ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி வருகிறார்கள்.
பல சோதனைகளை கடந்து, சாதனை படைக்கும் காலமிது. ராசியாதிபதி புதன் என்பதனால் நிதானமும், புத்தி கூர்மையுடன் செயல்படும் மிதுன ராசிகாரர்களுக்கு 2மிடத்து ராகு வருகை சாதுர்யமாக செயல்பட்டால் தனவரவு தரும். குடும்பத்தில் குழப்பத்தினை தவிர்க்க அனாவசிய தர்க்கத்தினை தவிர்க்கவும்.
உடல் ஆரோக்யம் கவனமாக இருக்கவும். எதிரிகளை எளிதில் இனம் கண்டு கொண்டு கவனமாக இருப்பீர்கள். சமயத்தில் நினைத்தது நடக்கவில்லை என மனம் கஷ்டபடும் மனோ குழப்பத்தினை போக்க தெய்வீக வழிபாடு அவசியம் தேவை.

பரிகாரம்: சோம வாரத்தில் சிவ வழிபாடு சீலம் நிறைந்தது வாழ்வை தருவார். அலைபாயும் மனதினை அடக்க சிவநாமத்தினை உச்சரிக்கவும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபட சங்கடங்கள் தீரும்.
கடகம்

27 ஜூலை முதல் உங்கள் ராசிக்கு, ஜென்மத்தில் ராகுவும், சத சப்தம் ஸ்தானமும், களத்திர ஸ்தானமும் ஆகிய 7ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி வருகை புரிகிறார்கள்.
ஜென்ம ராகுவினை கண்டு அஞ்ச வேண்டாம்! முன் கோபத்தினை மட்டும் மூட்டை கட்டி வைத்துவிட்டால், உங்களை போல் திறமைசாலி யாரும் இல்லை. அன்பு, சாந்தம், பொறுமை, உங்களுக்கு +பாயிண்ட் ஜன்ம ராகு, சளி (கபம்) தொல்லை, தலைவலி, சிலர் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் உபாதை சிறிய அளவில் இருந்தாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனை செய்வது நலம்.
கணவன் – மனைவிக்குள் கருத்து வேற்றுமை வராமல் இருக்க விட்டு கொடுத்து போக வேண்டும். அனாவசிய தர்க்கத்தினை தவிர்க்கவும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும், அங்கேயே தங்கியிருக்கவும் நேரிடும். அன்னிய மொழி பேசுவர்களால் ஆதரவு கிடைக்கும். சில சமயங்களில் பண நஷ்டம் ஏற்படும். கவனம் தேவை, பிராயணங்கள் மூலம் விரயம் ஏற்படும்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு வெள்ளி கிழமையில் செய்திட மங்களம் உண்டாகும். ராகு காலத்தில் துர்காஷ்டகம் படித்திட மனம் அமைதி பெரும். காளி வழிபாடு செவ்வாயில் செய்திட கஷ்டங்கள் விலகிடம்.

சிம்மம்

simmam27 ஜூலை முதல் உங்கள் ராசிக்கு, மோட்ச மற்றும் விரய ஸ்தானமான 12ம் இடத்தில் ராகுவும், ருண, ரோக சத்ரு ஸ்தானமான 6மிடத்தில் கேதுவும் வருகை தர இருக்கின்றார்கள்.
புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள், உங்கள் வாழ்க்கையில் புதிய அனுபவங்கள் ஏற்படும். சிம்மத்திற்குரிய கோப, பிடிவாதத்தினை விட்டு சாந்த வழியில் செயல்பட்டால் சங்கடங்கள் விலகி சந்தோஷம் கிடைக்கும். நிதானம், நிலையான அந்தஸ்தையும், புகழினையும் தரும். இக்கால கட்டத்தில் கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் அந்தஸ்தை நிலை நாட்டி கொள்ள வீண் தர்க்கங்களை விட்டு சாந்த மனதோடு அணுகினால், சர்வ கார்யம் கைகூடும்.
சரியான தூக்கம் இருக்காது. பயணங்களால் உடல் களைப்பு, பொருள் இழப்பும் ஏற்படும். ஜாக்கிரதை. மரைமுக எதிரிகளால் தொந்திரவு உண்டு கவனம் தேவை. ஆன்மீகத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய தருணமிது. புதிய படிகாத மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: சாட்சிகாரன் காலில் விழுவதை விட, சன்டைகாரனான ராகுவிடத்திலும், கேதுவிடமும் சரணாகதி அடைய நன்மையளிக்கும். விநாயகர் வழிபாடும், நாகராஜர் வழிபாடும் நல்ல வாழ்வு கொடுக்கும்.
கன்னி

kanni27 ஜூலை முதல் உங்கள் ராசிக்கு, 11ம் வீடாகிய லாப ஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் இடத்தில் கேதுவும் வருகை தர உள்ளார்கள். இரண்டு வீடுகளுமே சுப வீடுகளே! ராகுவை போல் கொடுப்பார் இல்லை என்பது பழமொழி, 11ம் வீட்டில் ராகு கொடுப்பார். எதிலும் வெற்றி கிட்டும். யூக வாணிபத்தில் வெற்றி கிட்டும். புகழும், அந்தஸ்தும் கிட்டும்.
சிலர் நீண்ட காலமாக விடுபட்டு இருந்த குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வர்கள். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்லுங்கள். வண்டி, வாகன யோகம் ஏற்படும்.
தொழிலில் அதிக கவனம் இருந்தால் நல்ல லாபம் உண்டாகும். பணியில் மாறுதல், பாராட்டும், புகழும் கிடைக்கும். இந்த காலகட்டம் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகமாகும் நேரமாகும்.
உடல் நலனில் அக்கறை காட்டவும். வருமானத்தினை சேமிக்கும் காலமும் இதுதான்.

பரிகாரம்: எமகண்ட நேரத்தில் விநாயகர் வழிபாடும், சங்கடஹர சதுர்த்தியில் மாலையில் விநாயகர் வழிபாடும் சந்தோஷத்தினை கொடுக்கும்.

துலாம்

thulam27 ஜூலை முதல் உங்கள் ராசிக்கு 10ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் ராகுவும், 4ம் இடமான மாத்ரு ஸ்தானத்தில் கேது வருகை புரிய இருக்கின்றார்.
உங்கள் திறமை மூலம் நீங்கள் ஜொலிக்க கூடிய நேரமிது. கடின உழைப்பின் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். மதிப்பு, மரியாதை தேடி வரும். உங்கள் திடத்தினால் கூட உங்கள் எதிராளி கருத்தினை அனுசரித்து போக கூடிய நேரமிது. பயணங்கள் அதிகமாக மேற்கொள்ளும் நேரமிது. ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.
பொருளாதாரம் திருப்திகரமாக அமையும். உறவினர்களிடம் மனஸ்தாபம் ஏற்படாமல் பார்த்து கொள்ளவும். சிக்கனம் கடைபிடித்தல் அவசியம். வீண் செலவுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. பெண்களிடம் ஜாக்கிரதையாக பழகவும். ரகசியங்களை சொந்தகாரர்களிடமும், நண்பர்களிடமும், பகிர வேண்டாம்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு துன்பத்தினை போக்கும். ஆன்மீக நாட்டம். திருப்தியை தரும். தியானம் செய்ய, மனம் உறுதிபடும். ஆஞ்சநேயர் வழிபாடும் ஆறுதல் அளிக்கும்.

விருச்சிகம்

viruch27 ஜூலை முதல் உங்கள் ராசிக்கு, தர்ம, பாக்ய, பித்ரு ஸ்தானமான 9ம் இடத்திலும், தைர்ய, வீர்ய, சகோதர ஸ்தானமான 3ம் இடத்தில் கேதுவும் வருகை புரிய இருக்கின்றார்கள்.
உங்கள் வாழ்க்கையில் நல்ல மாறுதல் ஏற்பட போகிறது! ராகு – கேது முற்பகுதியை காட்டிலும் பிற்பகுதி மிகுந்த நன்மையளிக்கும்.
உங்களுடைய காலம் தாழ்த்தும் குணத்தினால் மட்டுமே உடனடி முன்னேற்றம் தடைபடும். பராமரிப்பு, சில சுப விரய செலவுகளும் ஏற்படும். உறவினர்களிடம் மனஸ்தாபத்தினை வளர்க்காது நல்ல முறையில் உறவினை பேணவும். புதிய பொருட்கள் வாங்குதல், புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வேலை, தொழில் சிறக்கும்.
வீண் தர்க்கத்தினை தவிர்க்கவும். பிள்ளைகளை உங்கள் கட்டுபாட்டில் வைத்து கொள்வது நலம். பூர்வீக சொத்துகளை கையாள்வதில் கவனம் தேவை. நண்பர்களிடத்தில் நல்ல நட்பை பேணவும். கணவன் – மனைவிக்குள் நல்ல இணக்கமான சூழ்நிலை ஏற்படும். எதனையும் சாதிக்கலாம், தான் கூறுவதே வேதவாக்கு என்ற எண்ணத்தினை கைவிட்டால், வெற்றி பெறலாம்.

பரிகாரம்: அம்பாள் வழிபாடு ஆனந்தம் அளிக்கும். சர்ப்பகிரகத்தினை சாந்தபடுத்தினால் சந்தோஷம் கிடைக்கும். ஊனமுடையவர்களுக்கு அன்னதானமும், வஸ்திரதானமும் நலம்.

தனுசு

thanusu27 ஜூலை முதல் உங்கள் ராசிக்கு 8மிடமாகிய ஆயுள், வியாதி ஸ்தானத்திலும், 2ம் இடமாகிய தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் கேதுவும், வர இருக்கிறார்கள். சனியின் வீட்டில், கேது வருவது நலமில்லை என்றாலும் கோட்சாரத்தில் குரு 11ம் பாவத்தில் செப்டம்பர் முதல் வருகை புரிவதாலும், குருவின் ராசியாக தனுர் இருப்பதால் கவலை வேண்டாம்!
வேலை, தொழில் கஷ்டப்பட்டுதான் பலன் கிடைக்கும், அனைவரிடமும் அனுசரித்து செல்வது, பிரச்சனையற்ற வாழ்வுதனை கொடுக்கும்.
புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். புத்ர, புத்ரிகளால் அனாவசிய அலைச்சலும், பண விரயமும் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபட்டாலும், கடைசியில் கருத்து ஒத்து போவார்கள். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும், பயணங்கள் போது பாதுகாப்பு தேவை. பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு, கவனம் தேவை. பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும். இல்லையேல் தண்ட செலவுகள் ஏற்படும்.

பரிகாரம்: ராகு கால துர்க்கை வழிபாடு, துன்பத்தினை போக்கும். கணபதி வழிபாடு கஷ்டங்கள் விலகிடும்.
ஆஞ்சநேயர் வழிபாடு ஆனந்தம் அளிக்கும்.
மகரம்

magaram27 ஜூலை முதல் உங்கள் ராசிக்கு, ஜென்ம ஸ்தானத்தில் கேதுவும், சத சப்தம் ஸ்தானமான களத்திர ஸ்தானத்தில் ராகுவும் வர இருக்கிறார்கள்.
ஜென்ம ஸ்தானத்தில் கேது வருவதால் ஆன்மீக (தெய்வீகம்) விஷயத்தில் நாட்டமும், ஸ்தல யாத்திரையும் மேற்கொள்வீர்கள். தங்களை தேடி அந்தஸ்து, புகழ், தனம் வந்து சேரும்.
உங்களின் பணிவு, உங்களின் உயர்வு, கணவன் – மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்.
தொழில், வேலையில் சிறந்து விளங்குவீர்கள். தாயின் உடல் நலன் பேணவும்.
சிலர்க்கு பூர்வீக சொத்துகள் கிடைக்கும். கோபத்தினையும், பயணத்தினையும் தவிர்த்தல் நலம்.
சொப்பனத்தில், நாகம் அச்சுறுத்தும், திருப்பாம்பரம் சென்று ராகு – கேதுவினை வழிபட்டு வாருங்கள். டிசம்பரில் இருந்து 7 1/2 சனி கால ஆரம்பமாகின்றபடியால், உடலில் தளர்ச்சியும், சோர்வும், அதன் மூலம் சில கார்ய தடைகளும் மந்தகதியாக நடைபெறும். மொத்தத்தில் சாட்சிகாரன் காலில் விழுவதனை காட்டிலும், சண்டைக்காரனனா ராகு – கேதுவிடம் சரணகதி அடைய சங்கடங்கள் விலகிடும்.

பரிகாரம்: ஸ்ரீ காளகஸ்தி சென்று வரவும்

கும்பம்

kumbam27 ஜூலை முதல் உங்கள் ராசிக்கு 6ம் பாவத்தில் ராகுவும், 12ம் பாவத்தில் கேதுவும் வர இருக்கிறார்கள்.
இந்த பெயர்ச்சி உங்களுக்கும் ஒரு புதுவிதமான சூழலை அனுபவிக்க இருக்கிறீர்கள்.
நிதானித்து செயல்படும் போது தாங்கள் சிறந்த நிர்வாகியாக திகழ்வீர்கள்! மோட்ச ஸ்தான (தெய்வீக) கேதுவினால் ஆன்மீக பயணங்கள் ஏற்படும். தெய்வீகத்தில் நாட்டம் அதிகமாகி நற்சிந்தனையோடு இருப்பீர்கள்.
பொருள், தன வரவு, திருப்தியளிக்கும் விதத்தில் இருக்கும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் இருக்கும். சமாளிப்பீர்கள்.
நட்பு வட்டாரத்தில் கவனமாக செயல்படவும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குது£கலம் ஏற்படும்.
பூர்வீக சொத்துகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மொத்தத்தில் அதிக உணர்ச்சி வசப்படாமல் இருந்தால் நினைத்ததை நிதானமாக சாதிக்கலாம்.

பரிகாரம்: விஷ்ணு துர்க்கை வழிபாடு மனநிறைவு கொடுக்கும். திருவக்கரை சென்று வாருங்கள்! திருப்பங்கள் ஏற்படும்! எமகண்ட நேர விநாயகர் வழிபாடு செய்ய எதிரி தொல்லை நீங்கும்.

மீனம்

meenam - Copyஜூலை 27 முதல் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5மிடத்தில் ராகுவும், 11பாவமாகிய லாப ஸ்தானத்தில் கேதுவும் வருகை புரிய இருக்கிறார்கள். இனி மகிழ்ச்சியான காலமே! ஆரோக்யத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொறுமை உங்கள் பிறவி குணம். பொறுத்தார் பூமியாழ்வார் என்பது போல இந்த ராகு கேது பெயர்ச்சி காலம் நன்மையளிக்கும். உறவினர்களிடம் நல்ல, மதிப்பும் மரியாதையும் இருக்கும். பூர்வீக சொத்துகளை கையாளுவதில் கனவம் தேவை.
பிள்ளைகளால் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கடின உழைப்பிற்கு ஏற்ற பலாபலன்கள் கிடைக்கும். தன வரவு தாரளமாக இருக்கும். சிலருக்கு சர்ஜரி நடைபெறுவதர்கான சந்தர்ப்பங்கள் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் காட்டுவார்கள். சிலர் கல்விக்காக வெளிநாடு செல்வார்கள். சிலர் ஆன்மீக சுற்றுலா செல்வதால் ஆத்ம பலம் கிடைக்கும்.

பரிகாரம்: புற்று கோவிலுக்கு பால் வார்த்து வரவும். குருவழிபாடு மேன்மேலும் மங்களங்களை வாழ்க்கையில் உண்டாக்கும்.

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *