மேனகா காந்திக்கு தாய்மார்களின் வீரவணக்கம்! மேனகா காந்திக்கு தாய்மார்களின் வீரவணக்கம்!
‘‘தாயினும் சால பரிந்து’’ என்று கடவுளின் கருணைக்கும் அன்பிற்கும் ஒப்பீடாக பேசப்படுவதும் ஒரு தாயின் அன்பே. ஐயோ பாவம்!! தாயில்லாத பிள்ளைகள் என்று மக்கள் பரிதாப படுவதை கேட்கிறோம். ஏன் தாயின் அன்பை... மேனகா காந்திக்கு தாய்மார்களின் வீரவணக்கம்!

‘‘தாயினும் சால பரிந்து’’ என்று கடவுளின் கருணைக்கும் அன்பிற்கும் ஒப்பீடாக பேசப்படுவதும் ஒரு தாயின் அன்பே. ஐயோ பாவம்!! தாயில்லாத பிள்ளைகள் என்று மக்கள் பரிதாப படுவதை கேட்கிறோம். ஏன் தாயின் அன்பை பற்றி சொல்ல வருகிறேன் என்றால், இன்று இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் சுமார் 5 கோடி மக்கள் ஆவார்.
சீரும் சிறப்பு
கல்வி பயில சென்று, வேலை தேடிக் கொண்டு வெளிநாடுகளிலேயே தங்கி விட்ட இந்தியர்கள் தான் பெரும்பாலும்!! இவர்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு, அந்த நாட்டின் குடிமகன்களாகவும் மாறி விடும் சூழ்நிலை தவிர்க்க முடியாததாகி விட்டது.

சட்டத்தின் பிடியில்

அப்படியென்றால் இந்த இந்தியர்களின் பிரச்சினைகள் அயல்நாட்டு சட்டங்களின் மூலமாகவே தீர்க்கப்படும் சூழல் உருவாகிறது. பொதுவாகவே தனிநபர் சட்டங்கள், வாழ்வியல் சட்டங்கள் கூட இந்த வளைவிற்குள் வரும் போது தான், அந்நிய கலாச்சாரத்தின் வேற்றுமைகள் கவலை தருகின்றன.
உதாரணங்கள் பல உள்ளன. அந்திய நாட்டில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி பிள்ளைகள். சில சமயங்களில் வழி மாறி செல்லும் போது, அவர்களுக்கு அளிக்கபடும் அரசு சார்ந்த ஆலோசனைகள், நமது வாழ்வியல் முறைகளுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாததாகவே இருக்கும்.
என் தனிமையை என் தாத்தா, பாட்டி, மற்றும் உறவுகள் பாதிக்கின்றனர் என்று பிள்ளைகள் இந்த ‘ஆலோசகர்களிடம்’’ கூறினால், அந்த பெரியவர்களுக்கு ‘கல்தா’ தான்!!

உயிர் குடித்த அயர்லாந்து கொள்கை

அயர்லாந்தில் வசிக்கும் ஒருவரை திருமணம் செய்து அங்கே மகிழ்ச்சியுடன் வாழ வந்த இளம் பெண் ஒரு பல மருத்துவர்! கர்ப்பம் ஆன 3 மாதங்களில் ஒரு நாள் இரவு அவர் அயர்லாந்தின் மருத்துவமனைக்கு கணவருடன் வந்து, என்னை காப்பாற்றுங்கள். என் கரு கலைந்து விட்டது. எனக்கு கடுமையான ‘‘செப்டிசேமியா’’ நோய தொற்று வந்து இறந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே முறையாக கருவை கலைத்து, சுத்தம் செய்யுங்கள் என்று மன்றாடியும், அந்த மருத்துவமனை, மறுத்துவிட்டது. அயர்லாந்து ஒரு தீவிர கிறிஸ்துவ நாடு, இங்கு அபார்ஷனுக்கு அனுமதி கிடையாது. எனவே கரு கலைய தொடங்கி விட்டது. முழுவதுமாக கலையட்டும் பிறகு சுத்தப்படுத்துகிறோம் என்று கூறி விட்டனர்.
அன்று நள்ளிரவே அந்த இளம் பெண் தொற்று ஏற்பட்டு இறந்து விட்டாள். உலகமே கொந்தளித்து விட்டது, இறுதியில் அயர்லாநதில், சட்டம் மாற்றப்பட்டது. ஆனால் அங்கும் ஒரு தாய் இறந்து விட்டாள் என்பதே உண்மை.
இப்படி பல உதாரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போனாலும், நமது வாழ்வியல் முறையை அச்சுறுத்தும் ஒவ்வொரு உதாரணத்திலும், பாதிக்கப்படுவது பெரும்பான்மை, தாய்மார்கள் தான் என்பதே உண்மை.

ஹேக் மாநாடு கொள்கை

நெசர்லேண்ட்ஸ் எனும் ஐரோப்பிய தேசத்தில் தான் முதலில், பல ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் கூட்டு முயற்சியில், இந்த ஹேக் மாநாட்டு கொள்கைகள் அலசப்பட்டன. வர்த்தகம் சட்டம் அரசியல் சாசனம் என பல பிரிவுகள் இருந்தாலும் மிக முக்கியமாக குழந்தைகள் நல உரிமையும் இங்கே அலசப்பட்டது.

மைய கருத்து
பல நாடுகளின் ஒத்துழைப்பும், கையொப்பமும் இந்த ஹேக் மாநாட்டு கொள்கைகளுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகள் மிக முனைப்புடன் இந்த மாநாட்டுக்கு மெம்பர் நாடுகளை சேர்க்க அதிக முயற்சி எடுத்து வருகிறது.

துவக்கம்
1980ம் ஆண்டு அக்டோபர் 25ம் நாள் இந்த மாநாட்டு கொள்கைகள் உறுதிபட்டாலும், 1983ம் ஆண்டு டிசம்பர் 1ம் நாள் தான் இந்த சட்டங்கள் அமுலுக்கு வந்தது. இதுவரை 97 நாடுகள் உலகளவில் இந்த ஹேக் மாநாட்டு கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து, கையொப்பமிட்டு, உறுப்பினர்கள் ஆகியுள்ளன.

ஹேக் குழந்தைகள் நலன் மாநாட்டு கொள்கை
ஹேக் மாநாட்டு கொள்கைபடி, ஒரு பெற்றோர் குழந்தை அல்லது குழந்தைகளை, வாழ்ந்து வரும் இடத்திலிருந்து, எடுத்து செல்வது ஆள் கடத்தலுக்கு சமமான செயல். எனவே ஹேக் ஆள் கடத்தல் வழக்கு என்றே இதனை பதிவு செய்துள்ளது.

ஆள் கடத்தல் வழக்கின் முடிவு
ஒரு பெற்றோர் குழந்தையை எடுத்துக் கொண்டு வேறு நாட்டிற்கோ, அல்லது ஊருக்கோ சென்றுவிட்டால், மற்றொரு பெற்றோர் வழக்கமான தங்கும் இடத்திலிருந்து கொண்டு, வக்கீல் மூலமாக குழந்தை இருக்கும் இடத்தின் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யலாம்.

ஹேக் மாநாட்டின் வலிமை
இந்த ஹேக் மாநாட்டு கொள்கையின் கீழ் வழக்கு பதிவு செய்தால் 3 அல்லது 6 மாதங்களில், குழந்தை, திருப்பி அனுப்பி வைக்கபட வேண்டும் என்பதே ஒட்டியே இந்த ஹேக் கொள்கையின் வலிமை.

இறையாண்மை
இதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம். இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் அதன் கலாசாரம், வாழ்கை முறையை ஒட்டியே உள்ளது. ஒரு நாட்டின் இறையாண்மை அதன் சட்டங்களில் பரிமளிக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் எப்போது ஒரு நாடு இந்த ஹேக் மாநாட்டு கொள்கையில் உறுப்பினர் ஆகிறதோ, அப்போதே அது தன் நாட்டு சட்டதிட்டங்களை தள்ளி வைத்து விட ஒப்புக் கொள்கிறது. தனது நாட்டின் உயரிய சட்டத் தினை புறக்கணித்து விட கட்டாயப்படுத்தபடுகிறது.
ஹேக் மாநாட்டு கொள்கை என்ன?
ஒரு தாய் தனது கணவரிடமிருந்து ஏதோ காரணங்களுக்காக, குழந்தைகளை கூட்டிக் கொண்டு பெற்றோர் வீட்டிற்க்கு வருவது, ஆள் கடத்தல் என்று கூறுவது முறையாகுமா??
எந்த காரணங்களுக்காக அப்படி ஒரு முடிவை ஒரு தாய் எடுத்தாள் என்பதை இந்த ஹேக் நீதிமன்றம் பார்ப்பதில்லை. மீண்டும் அந்த தாய் மற்றும் குழந்தைகளை, கணவன் வாழும் நாட்டிற்க்கு ஒரு குற்றவாளியாகவே அனுப்பி வைக்கிறது.
அந்த நாட்டின் சட்டப்படி வழக்கு தொடரப்பட்டு, ஆள் கடத்திய நபர் என்ற முத்திரையோடு, பலவித பண இழப்பீடுகளை சந்திக்க வேண்டிய துர்பாக்ய நிலைக்கு தான் ஒரு தாய் தளளப்படுகிறாள்.
சவால்கள்
நாம் இந்த சட்டத்தின் ஒட்டைகளை கவனித்து பார்க்க வேண்டும். ஒரு தாய் தான் குழந்தைகளின் முதல் பாதுகாவலர் என்பதை யாரும் மறுக்க முடியாது. தந்தையின் பங்கு குறைவானது அல்ல. தந்தை வீட்டை கட்டி காக்க பொருள் தருபவர்.
அப்படியென்றால் ஒரு தாய் ஆனவள், குழந்தையை பராமரிக்கும் பொருட்டு, பொருள் ஈட்ட முழுவதும் முனையாமல்?? இருந்து விடுகிறாள். ஆனால் ஏதோ காரணங்களுக்காக வீட்டை துறக்க முடிவு செய்து, தஞ்சம் புகும் போது, அவளிடம் குழந்தைகளை தவிர ஏதும் இல்லை என்பதே உண்மை.
இந்த வழக்குகளை சமாளிக்க ஏது பணம்
மேலும் இந்த வழக்கில் சிறைத்தண்டனை கூட உண்டு. அப்படியென்றால் இந்த தாய், எப்படி தைரியமாக உதவி கேட்டு கணவனிடம் வாதாட முடியும்!! அப்படியென்றால் வேறு நாட்டில் இந்த தாயின் கதி தான் என்ன?? குழந்தைகளையும் பறிகொடுத்துவிட்டு, வீட்டையும் துறந்து, பணமும் இன்றி பரிதவிப்பது தான் இந்த ஹேக் மாநாட்டின் கொள்கையா… இதனை ஏற்க இந்திய அரசு மறுத்து விட்டது தான் நியாயம்.
மறுத்த மேனகா காந்தி
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் காக்கும் அமைச்சின் மந்திரியான மேனகா காந்தி, இந்த ஹேக் மாநாட்டு கொள்கையை ஏற்க மறுத்து விட்டார். 2016ம் ஆண்டு நவம்பரில் தில்லியில், ஹேக் மாநாட்டு கொள்கை உறுப்பினர்கள் திரண்டு வந்து ஆதரவு கேட்டும் இந்திய அரசு மறுத்து விட்டது.

நமது சட்டம் என்ன சொல்கிறது
நமது சட்டம் ஒரு குழந்தைக்கு தாயும், தந்தையும் இயற்கையான பாதுகாவலர்கள். குழந்தையின் பால பருவத்தில் தாயின் அரவணைப்பு மிக முக்கியமானது. தந்தையினை பார்க்க கூடாது என்றோ, தாயினை பார்க்க கூடாது என்றோ சொல்ல உரிமை இல்லை.

கலாச்சாரம்
திருமணமான பின் சிறு சச்சரவு என்றால், மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீடு செல்வது வாடிக்கை. பெரியவர்கள் பார்த்து சரி செய்து அனுப்பி வைப்பார்கள்.
ஒரு மனைவி, கணவனை பிரிய முடிவு செய்வது என்பது நமது கலாச்சாரத்தில் எளிமையானது அல்ல. அப்படி இருக்கும் போது ஒரு தாய் தனது குழந்தைகளோடு, தாய் வீடு வருவது என்பது யோசிக்க வேண்டிய ஒரு நிகழ்வு.
அவளின் எதிர்காலம், குழந்தைகளின் நலன் என பலவற்றை அவளின் குடும்பம் முன்னிறுத்தி, முடிவு எடுக்கும்.
இதில் சட்டம் எப்போது வரும் என்றால், விவாகரத்து முடிவாகிவிட்டது. குழந்தைகளை பார்க்கவும், அவர் களின் பராமரிப்பில் பங்கேற்கவும் உரிமை கோரும் போது மட்டுமே சட்டம் தேவைபடலாம்.

“இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் அதன் கலாசாரம், வாழ்கை முறையை ஒட்டியே உள்ளது. ஒரு நாட்டின் இறையாண்மை அதன் சட்டங்களில் பரிமளிக்கிறது என்பதை மறுக்க முடியாது. “

இந்திய சட்ட திட்டங்கள்
நமது இந்திய சட்ட திட்டங்களில் போதிய பாதுகாப்பு குழந்தைகளுக்கு உள்ளது. தாய் மற்றும் தந்தையரின் உரிமைகளும் பாதுகாக்க சட்டங்கள் உள்ளது. பால பருவம் தாண்டிய பிறகு குழந்தைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு குழந்தைகளின் வாழ்கை முறை சீரமைக்கப்படும்.
இப்படி நமது சட்டங்கள் நமது சமூக வாழ்கையோடு ஒட்டிவருவதால், இந்த குடும்ப பிரச்சினைகளின் தீர்வுகள் பெரும்பாலும் சுமூகமாகவே முடிவாகின்றன.
ஹேக் மாநாட்டு கொள்கையில் ஆள் கடத்தல், கிரிமினல் வழக்குகள், இழப்பீடு, அநாதரவான நிலை என்று பல வகைகளில் ஒரு தாய் அலக்கழிக்கப்படுகிறாள். குழந்தைகளின் மனநலனும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

தாய்மார்களே அதிகம்
இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில் சுமார் 75% தாய்மார்களே குழந்தைகளுடன் தங்கள் தாய் வீட்டிற்க்கு செல்லுவதாக கூறுகின்றன.
இதில் 85% முதல் 90% வரை இந்த தாய்மார்களே இந்த குழந்தைகளின் முதன்மை பாதுகாவலர்களாகவும் உள்ளன. இவர்கள் ஏன் வந்தார்கள், காரணங்கள், என்ன தந்தையின் உரிமைகள் என அனைத்தையும் விசாரிக்கும் நேர்த்தியான சட்டங்கள் எங்களிடம் உள்ளன.
இந்தியா ஒரு மிகப் பெரிய மாட்சிமை மிக்க நாடு, எங்கள் குடும்ப விரிசல்களை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.
இன்றும், எங்களிடம் பல குடும்ப நல வழக்கு மன்றங்கள் உள்ளன. அவற்றின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நாங்கள் வழக்குகளை தீர்த்து வைக்கவே விரும்புகிறோம் என்று மேனகா காந்தி உறுதியாக தெரிவித்து விட்டார்.

கவனம் தேவை
நமது பெண்களுக்கும் சரி, ஆண்டுகளுக்கும் சரி இனி சர்வதேச எல்லைகளை தாண்டும் போது சட்டசிக்கல்களை புரிந்து கொண்டு தான் செயல்பட வேண்டும். இங்குள்ள மாதர் சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், குடும்ப நல வாரியங்கள் ஒன்று பட்டு ஆலோசனைகளை வழங்கி குடும்ப நல வழக்குகளை கூடிய விரைவில் சுமூகமாக முடிக்க வேண்டும்.
ஹேக் மாநாட்டு கொள்கை வழக்குகள் பெரும்பாலும், 6 மாதம் முதல் ஒரு வருஷத்தில் முடிவுக்கு வரும். நமது நாட்டு வழக்கும் அந்த கால வரையறைக்குள் முடிக்குமாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்நிய அரசுகளின் ஆதிக்க பிடியில் இருந்து, நமது குடும்பங்களை காப்பாற்ற ஒன்றிணைந்து முயற்சி செய்தால் மட்டுமே முடியும் அந்நிய சக்திகளுக்கு அடிபணியாமல் நிமிர்ந்து நின்று பதிலடி கொடுத்த நம் குல வீர பெண் சிங்கம் மேனகா காந்திக்கு வீர வணக்கம் சொல்வோம்… தாய்மார்கள் சார்பாக…

இந்திய சட்டம் என்ன சொல்கிறது??
– வழக்கறிஞர் கலிங்கா…
kalingaமுதலில் இந்திய சட்டம் ‘‘கடத்தல்’’ என்ற வார்த்தையை உபயோகிக்காது! ஒரு குழந்தையின் இயற்கையான பாதுகாவலர்கள் தாய் தந்தை தான்! அவர்களையே குற்றம் சொல்வது சரியாகாது.
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து மனைவி குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்க்கு போவது என்பது வெகு சாதாரணம். இதனை ஒரு கிரிமினல் குற்றமாக வழக்கு பதிவு செய்து மனக் கசப்பு, வெறுப்பு அதிகரிக்கும் வகையில் வழக்காடுவது, குழந்தைகளின் ஆரோக்கியமான சூழ்நிலைக்கு கேடாக முடியும்! மேலும் பெற்றோர்கள் ஒன்று சேரும் வாய்ப்பை கூட அறவே கெடுக்கும்!!
மாறாக தாயிடம் தான்சிறு குழந்தைகள் இருக்க வேண்டும் என்றும் நமது சட்டம் பரிந்துரைக்கிறது. தாயும் தந்தை இருவருமே குழந்தைக்கு தேவை என்பதால், இருவருமே குழந்தையின் நலனில் அக்கறை கொண்டு, பராமரிக்க வேண்டும்.
இந்திய சட்டம் தாயும், தந்தையும் குழந்தைக்கு தேவை என்றே, கருதுவதால், குழந்தையை பார்க்காமல் தடுப்ப்து போன்ற செயல்களை ஏற்றுக் கொள்வதில்லை.
ஹேக் கொள்கையை விட, நமது கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு குழந்தையின் நலனை பொறுத்தே நமது சட்டங்கள் முடிவெடுக்கின்றன.
ஒரு தந்தை தனது குழந்தையை எடுத்துக் கொண்டு, தனது மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டாள். தனக்கு குழந்தையை பார்க்கும் உரிமை தேவை என்று வழக்கு தொடுத்தால், குழந்தையை பார்க்கும் வாய்ப்பு உடனே கொடுக்கப்படும்.
குழந்தையின் பொறுப்பு யாருக்கு என்பதில் மட்டுமே, நீதிமன்றம் தலையிடும். குழந்தையின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு, குழந்தைகள் தாயிடமோ, அல்லது தந்தையிடமோ தலைமை பாதுகாவலராக ஒப்படைக்கப்படும்.
குழந்தை 9 வயது ஆனவுடன், குழந்தையின் விருப்பம் கேட்கபடலாம். தாயும் தந்தையும் தொடர்ந்து குழந்தையின் நலனுக்கு மட்டுமே பாடுபட வேண்டும் என்று பரிந்துறை செய்யப்படும். குடும்ப நல ஆலோசகர்கள் மூலமாகவே பெரும்பான்மை வழக்குகளின் சிக்கல்கள் தீர்க்கபடுகிறது.
பாவம் இந்த குழந்தைகள் சூட்கேஸ் குழந்தைகளாக மாறிவிடும்…
கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தாம். மேலும் இன்று பல அந்நிய கலாச்சார நுகர்வுகளால், என் உரிமை என்று தாயும், தந்தையும் உரிமை போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் குழந்தையின் நலனை பார்க்கிறார்களா என்று புரியவில்லை.
மேலை நாடுகளில் குழந்தைகள் அம்மா வீட்டில் 4 நாள், அப்பா வீட்டில் 3 நாள் என்று அலைக்கழிக்கப் படுகின்றனர். இப்ப்டி வாராவாரம் அலைந்து அந்த குழந்தைகளுக்கு தன் வீடு என்ற எண்ணமே வருவதில்லை. நிம்மதியின்றி தவிக்க தொடங்குகிறது. இந்த குழந்தைகள் சூட்கேஸ் குழந்தைகளாகவே வளர்கின்றனர்.
16 வயதானவுடன் போதும்டா சாமி என்று உறவுகளை கசந்து, தனித்து போய்விடும் அபாயம் உள்ளது.
என் சோக கதை
இந்த ஹேக் மாநாட்டு கொள்கை என்பது ஒரு கொடிய நச்சுக்கொடி என்றால் அது மிகையில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சட்டதிட்டங்கள் உள்ளன. அதன்படியே தான், நீதிமன்றம் பாதை வகுத்து கொடுக்கிறது.
ஒரு சில நாடுகளில் போதை மருந்து வைத்திருந்தால் மரண தண்டனை தான். பல நாடுகளில் வெறும் சிறை தண்டனை தான். ஆனால் இந்த ஹேக் மாநாட்டு கொள்கை, அனைத்து உலக நாடுகளும், தங்களுடைய சட்டங்களை புறந்தள்ளி, பொதுவான ஒரு சட்டத்தை மட்டுமே ‘கையாள வேண்டும் என்று கூறுகிறது.
சம்மதம்
ஒரு தம்பதியினர் இருவரும் சம்மதித்து, வேறு ஒரு இடத்திற்கோ அல்லது ஊருக்கோ குழந்தையுடன் செல்ல முடிவு எடுப்பது, சம்மதம் என்று அறியபடுகிறது.
சில சமயங்களில் வேலை நிமித்தமாகவோ அல்லது உடன்பட்டோ வேறு ஒரு ஊரில், ஒரு வருடத்திற்கு மேல் இருந்து விட்டாலும் அதுவும் சம்மதம் என்றே எடுத்துக் கொள்ளபடுகிறது. ஆனால் பல சமயங்களில் இந்த சம்மதம் முறையாக பெறவில்லை. சம்மதம் மனப் பூர்வமானதல்ல என்று புகார் கூறப்படலாம்.
அப்போது நீதிமன்றம் எப்படி ஒரு கணவன் மனைவியின் அன்றாட உரையாடலில் நடந்த உண்மைகளை கணித்து சரியான நியாயத்தை நிலை நாட்ட முடியும்.
மேலும் இன்று சுமார் 97 நாடுகள் இந்த ஹேக் மாநாட்டு கொள்கையில் ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட வரைமுறைகளை வகுக்க இயலாத போது, எப்படி இந்த அனைத்து நாடுகளும் ஒரே நோக்கில், தங்களுடைய பாரம்பர்யமான சட்டங்களை புறந்தள்ளி, அந்நிய சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்க முடியும்.

சிங்கப்பூரில் அண்மையில் நடந்த ஒரு ஹேக் வழக்கில், தாய் மற்றும் தந்தை 2 ஆண்டுகள் குறைந்த பட்சம் சிங்கப்பூரில் பணி புரிய சம்மதித்து, அமெரிக்காவிலிருந்து வந்தனர். வந்த 6 மாதங்களில் அவர்களிடையே தகராறு வந்து பிரிந்து விட்டனர். தந்தை அமெரிக்கா சென்று ஹேக் வழக்கில், தாயை ஆள் கடத்தல் குற்றம் சாட்டி வழக்கு பதிந்திட, பண விரயம், கால விரயம் என்று சுமார் 8 மாதங்கள் வழக்கு நடந்தது. சிங்கப்பூர் குடும்ப நீதிமன்றம், வழக்கை தீர விசாரித்து, தாய் முழு சம்மதம் பெற்றுதான், தந்தையோடு வந்துள்ளார். எனவே இந்த வழக்கு பொய் வழக்கு என்று சொல்லி தள்ளுபடி செய்தது.
ஆனால் தந்தை மீண்டும் அப்பீல் செய்ய, இந்த வழக்கு சிங்கப்பூரின் முதல் ஹேக் வழக்காக, உச்சநீதி மன்ற நீதிபதியின் தலைமையில் நடைபெற்றது.
சம்மதம் என்பதை பற்றியே பேசாது, ‘‘தந்தை சம்மதம் கூறியிருக்கலாம்’’ ஒரு குடும்பமாக இரப்போம் என்று நம்பிக்கையில் தான் வந்திருக்க வேண்டும். எனவே அந்த நம்பிக்கை நிறைவேறவில்லை என்பதால் இந்த தாய் குற்றவாளி என்று தீர்ப்பு கூறியுள்ளது. மறுபடியும் அப்பீல் செய்யவும் முடியாது என்று கூறியது. எனவே சம்மதம் உண்டா இல்லையா என்பது பெரிய கேள்வி குறியே. எந்த நாட்டின் குடியுரிமை உள்ளதோ அங்கு செல்வதே சரி என்று சட்டத்தை மாற்றுவதே சரி, நேமும் பொருளும் மிச்சப்படும். இதுவே என் சொந்த கதை.

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *