மியன்மரில்  நடப்பது என்ன?! மியன்மரில்  நடப்பது என்ன?!
புனித போர் என்று தான் வாழும் நாட்டின் மேல் போர் தொடுக்க உணர்ச்சியாளர்களை தூண்டிவிடுவது. சொந்த நாட்டு மக்களின் மேல் கடும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, அந்நிய தீய சக்திகளின் உதவியுடன் பயங்கரமான... மியன்மரில்  நடப்பது என்ன?!

புனித போர் என்று தான் வாழும் நாட்டின் மேல் போர் தொடுக்க உணர்ச்சியாளர்களை தூண்டிவிடுவது. சொந்த நாட்டு மக்களின் மேல் கடும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, அந்நிய தீய சக்திகளின் உதவியுடன் பயங்கரமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கொண்டு அரசு அமைப்புகளை சிதைப்பது.
அந்நாட்டு ராணுவம் என்ன செய்யும்?! தர்மம் என்று ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது. எங்கள் மக்களை காப்பாற்றும் பொருட்டு, எங்கள் ராணுவம் அமைதிக்காக போராடுகிறது. வன்முறையாளர்களிடமிருந்து எம் மக்களை காப்பாற்ற வன்முறையை தானே கையாள முடியும்.
வழக்கம் போல தோல்வி என்றவுடன் குழந்தைகள் படத்தை வெளியிட்டு அனுதாப ஆதரவு மூலம் தப்பிக்க பார்க்கிறார்கள் தீவிரவாதிகள். எப்படி மிஷிமிஷி தங்கள் அட்டுழியம் முடிவுக்கு வரும் போது சிரிய அகதிகள் முகத்தையும், குழந்தைகள் முகத்தையும் வெளியிட்டு உலக நாடுகள் ஆதரவை அனுதாபத்தை கொண்டு தப்பிக்க பார்த்தார்களோ அதே பார்முலா இங்கேயும் அரங்கேறுகிறது.
இதை நான் சொல்லவில்லை… அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இன்றைய மியன்மர் அரசின் தலைவர் ஆன் சான் சூ கீ மறைமுகமாக கூறுகிறார். அட இவர் 15வருடம் மேலாக வீட்டு சிறையில் இருந்தவர் – அகிம்சை வழியில், ஜனநாயகத்திற்காக போராடிய பொறுமையாக சிறையில் 15வருடம் இருந்த ஒரு பெண் இந்த ரொஹின்யா முஸ்லிம்கள் விசயத்தில் ஏன் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக நிற்கிறார்! ஏன்?

 

மியான்மரில் நடப்பது என்ன?

மியான்மரில் வட பகுதியில் அதிகம்jagadish

முஸ்லிம்கள் வாழும்இடங்களில் பாகிஸ்தான் துணையுடன் ஜிகாத் போராளிகள் முஜாகிதீன்களுக்கும் மியான்மர் அரசுக்கும் 1960களில் இருந்தே பிரச்சனை உண்டு. ஆனால் பெரிதாக இது வளரவில்லை.

அல்கொய்தா

சவுதி அரபியா என்று பின்லேடன் மூலம் அல்கைதா தீவிரவாத குழுவை ஆரம்பித்து – உலகம் முழுவதும் இந்தியாவில் காஷ்மீர் தொட்டு எங்கு எல்லாம் இஸ்லாமியர் பெரும்பான்மை உள்ளனரோ அங்கு எல்லாம் தனி நாடு கேட்டு போராட்டத்தை தூண்டிய நாள் முதல் இந்த மியான்மரில் ரொஹின்யா பகுதியில் ஒரு கூட்டம் தனி நாடு கோசத்துடன் ஸிமீளீலீவீஸீமீ ஷிtணீtமீ முன் வைத்து புனித போர் (வழக்கம் போல) என்று மத உணர்வை தூண்டி தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பம் ஆனது.

puthar
சரித்திரம்

ரோகிங்கியா முஸ்லீம்கள் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து அதாவது இன்றைய பாங்ளாதேசத்தில் உள்ள சிட்டகாங்கில் இருந்து பிழைப்பு தேடி பர்மாவுக்குள் எல்லையோறம் உள்ள அரக்கன் மாநிலத்திற்குள் நுழைந்தவர்கள். இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலத்திற்கு பிறகு தான் இவர்கள் பர்மாவுக்குள் பஞ்சம் பிழைக்க சென்றார்கள்.
ஏனென்றால் பர்மாவில் 1921ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியினரால் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்போது பர்மாவில் வாழ்ந்த இனங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுஇருந்தது. ஆனால் அவற்றில் ரொகிங்கியா என்ற சொல் எதுவும் இடம் பெறவே இல் லை. ஆர்.பி.ஸ்மார்ட் என்பவரால் தொகுக்கப்பட்ட பர்மா கெஸ்ட்டிலும் இவர்கள் பற் றிய எந்தக் குறிப்பும் இல்லை.

 

 

Myanmar's Rohingya ethnic minority members walk through rice fields after crossing over to the Bangladesh side of the border near Cox's Bazar's Teknaf area, Friday, Sept. 1, 2017. Myanmar's military says almost 400 people have died in recent violence in the western state of Rakhine triggered by attacks on security forces by insurgents from the Rohingya. Advocates for the Rohingya, an oppressed Muslim minority in overwhelmingly Buddhist Myanmar, say hundreds of Rohingya civilians have been killed by security forces. Thousands have fled into neighboring Bangladesh. (AP Photo/Bernat Armangue)

 

தனி மாநிலங்கள்

எப்படி இந்தியாவில் நேரு காலத்தில் மொழி வாரி மாநிலங்கள் கேட்டு போராட்டங்கள் உருவானதோ அதே மாதிரி 1960-62 களில்பர்மாவின் முதல் பிரதமரான யு நூ காலத்தில் பர்மிய இனங்களுக்கு தனித் தனியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டது.

பிரிவினை வாதம்

இதன் அடிப்படையில் மியன்மாரின் ராக்கின் இன மக்கள் வாழும் அராக்கன் மாநிலம் உருவானது. இந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளி இஸ்லாமியர்கள் எங்களுக்கும் தனி மாநிலம் தர வேண்டும் என்று கொடி பிடிக்க ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு கம்யூனிச போராளிகளும் உதவி இருக்கிறார்கள் இந்த வங்கா ளிகளுக்கு ரோகிங்கியா என்கிற பெயர் வைத்ததே கம்யூனிச போராளிகள்தான் என்கிறார் பர்மிய வரலாற்று ஆசிரியர்  யு தாங்க்.

தீவிரவாதம்

இப்பொழுது ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு பாகிஸ் தான் தீவிரவாத இயக்கங்கள் உடன் தொடர்பு இருக் கிறது என்று இந்தியா அவர்களை நாட்டைவிட்டு காலி செய்ய நினைக்கிறது அல்லவா. இதற்கு முக்கிய காரணம் இப்பொழுது அரக்கான் மாநிலத்தை வன் முறையால்; அழித்துக்கொண்டிருப்பது அரக்கான் ரோகிங்கியா சால்வேஷன் ஆர்மி என்கிற தீவிரவாத குரூப்.

 

Smoke rises from a burned house in Gawdu Zara village, northern Rakhine state, Myanmar Thursday, Sept. 7, 2017. Journalists saw new fires burning Thursday in the Myanmar village that had been abandoned by Rohingya Muslims, and where pages from Islamic texts were seen ripped and left on the ground. (AP Photo)

பாகிஸ்தான் உறவு

இதை உருவாக்கியவர் அட்டா உல்லா என்கிற பாகிஸ்தானி. இவர் தான் ரோகிங்கியா முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதம் அளித்து பவுத்தர்களை தாக்கி வருகிறார்கள். இந்த ரோகிங்கியா முஸ்லிம்கள் பாகிஸ்தானோடு தொடர்பில் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஏனென்றால் அவர்கள் அடிப்படையில் பாகிஸ்தான் முஸ்லிம்கள் தானே.
இப்பொழுது தான் அவர்கள் வங்காளதேச முஸ்லிம் கள். ஆனால் வங்காள தேசம் சுதந்திரம் அடைவதற் கு முன்பு 1971 வரை ரோகிங்கியாக்கள் பாகிஸ்தான் முஸ்லிம்களே. அதனால் தான் 50 வருஷத்துக்கு முன்பே இவர்கள் முஜாஹித்கள் என்கிற அமைப்பை மிர்காசிம் என்பவன் தலைமையில் உருவாக்கி இப்பொழுது இருக்கும் அரக்கான் மாநிலத்தை பாகிஸ்தானோடு இணைத்துவிட ஆயுதம் தூக்கினார்கள்.
பிறகு தான் பூர்வீக பர்மியர்களை தவிர மற்றவர்க ளை 1962 ம் ஆண்டு வெளியேற்ற ஆரம்பித்தார்க ள். இதில் பாதிக்கப்பட்டது என்னவோ ரங்கூனில் வாழ்ந்த பர்மாவை முன்னேற்றிய அப்பாவி தமிழ ர்களே. இன்றும் பர்மாவில் இருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் தமிழகம் வர வசதியில்லாதவர்கள் மணிப்பூர் மியான்மர் எல்லை கிராமமான மோரே வில் செட்டிலாகிவிட்டார்கள்.
சுமார் 150 வருடங்களாக பர்மாவில் வாழ்ந்து வள மாக்கிய தமிழர்களையே பர்மியர்கள் துரத்திவிட்ட பிறகு பர்மா நாட்டையே துண்டாக்கி பாகிஸ்தானோ டு இணைக்க ஆயுதம் தூக்கிய ரோகிங்கியா முஸ்லி ம் களை பர்மியர்கள் விட்டா வைப்பார்கள். அதுவும் 2012ல் ஒரு பவுத்த சிறுமியை ரோகிங்கியா இளை ஞர்கள் கற்பழித்திட வெகுண்டெழுந்த பவுத்தர்கள் புத்தம் சரணம் கச்சாமி என்பதை ஓரங்கட்டிவிட்டு யுத்தம் சரணம் கச்சாமி என்று போர் ஆரம்பித்து விட்டார்கள்.October Sudesi Magazine 2017-57

அரவணைத்த இந்தியா

நூறாண்டுகளுக்கு மேலாக இலங்கை மலையகத் தில் ரத்தம் சிந்தி காடுகளை சீராக்கி பணம் கொழி க்கும் தேயிலை தோட்டங்களாக மாற்றிய இந்திய தமிழர்களையே 1964ல் இலங்கை அரசு உங்க மக் களை தூக்கிட்டு போங்கள் என்று ஐந்தரைலட்சம் தமிழர்களை இந்தியாவுக்கு துரத்திவிட்ட பொழுது அவர்களை நம் முடைய மக்கள் என்று அரவணை த்து இந்தியா முழுவதும் கொண்டு போய்குடியம ர்த்தி வாழ வைத்திருக்கோம்.

அவர்களது தாய் நாடு எது?

அதனால் ரோகிங்கியா முஸ்லிம்களை அரவணைக்க வேண்டியது வங்காள தேசமும் பாகிஸ்தானும் தான் ஏனென்றால் அவர்கள் அங்கிருந்து தான் பர்மா வில் பஞ்சம் பிழைக்க சென்றார்கள்.. ஓன்று புரிந்து கொள்ளுங்கள் சட்ட விரோதமாகக் குடியேறும் எந்தவொரு மக்களையும் எந்தவொரு அரசும் குடி யுரிமை வழங்கிவிடாது.

உலக நாடுகளின் ஒருதலை ராகம்

ஜாஃபர் கவால் என்பவனால் உருவான ROHINGYA LIBERATION PARTY  – 1990களில் புனித போருக்கு அழைப்பு விடுத்தானே அப்போ எங்கே இருந்தது இந்த உலக நாடுகள்? ROHINGYA PARTIOTIC FRONT என்று பல குட்டி குட்டி தீவிரவாதிகள் எல்லாம் சேர்ந்து ROHINGYA SOILDARITY ORGANISATION என்று ஒன்று பட்டு இந்த மியான்மர் அரசு ராணுவத்தை எதிர்த்து புனித போர் அறிவித்த போது இவர்களுக்கு ஆதரவு கொடுத்த இஸ்லாமிய நாடுகளை எதிர்த்து எந்த நாடும் வாய் திறக்கவில்லையே??

மனித வெடிகுண்டு!

மிக முக்கியமாக உலக நாடுகள் கவனத்தை எப்போ இந்த ரோஹின்யா முஸ்லிம்கள் பிடித்தார்கள் தெரியுமா? இன்று அல்ல.. 2008களில் தொட்டே இவர்கள் கொஞ்சம் பிரபலம் எதற்கு தெரியுமா ? மனித வெடிகுண்டுக்கு…

ஆப்கனில் நடக்கும் பெரும்பாலான மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்த மியான்மர் முஸ்லிம்கள் தான் என்ற விவரம் வெளிவந்த போது தான் இவர்களை உலகம் முதலில் அறிந்தது.
அதாவது மனித தற்கொலை படைக்கு இந்த அரபிய ஆதரவு கொண்ட தீவிராவாத குழுக்கள் எல்லோருக்கும் தேவையான ஆட்கள் இங்த ஸிஷீலீவீஸீரீஹ்ணீ பகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி கூட்டி செல்கிறார்கள் என்ற உண்மை வெளி வந்த நாள் தான் இந்த ROHINGYA முஸ்லிம்கள் உலக நாடுகள் கவனத்தில் வந்தார்கள்.
இப்படி போகும் ஜிகாத் போராளிகளுக்கு சம்பளம் மாதம் 175 டாலர் முதல் 500டாலர் வரை கிடைக்கும். இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 3லட்சம் முதல் 4லட்சம் வரை நிதி வழங்கபடும். அதான் சும்மா சுற்றி திரிந்தவர்கள் எல்லாம் புனித போர் என்று ஆப்கனில் போய் அந்த நாட்டை நாசம் செய்தனர்.

பாகிஸ்தானின் உதவி!

வழக்கம் போல இந்த வேலையில் இடைத்தரகராக நம்ம பாகிஸ்தான் ராணுவம் முழு ஆதரவு அளித்தது. rakhine-fire-water_2245212kஆதாரம் வேண்டும் என்றால் சுவிடன் பத்திரிக்கையாளர் BERTIL LINTNER மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கயை முழுமையாக தேடி படிக்கவும். CNN பல ஆதாரங்களை வீடியோவாகவே வெளியிட்டது.

புனித போர்!

இவர்கள் முயற்சிக்கு உலக இஸ்லாமிய நாடுகள் செல்வந்தர்கள் நன்கொடை கிடைக்க ARAKN ROHINGYA SALVATION ARMY புனித போர் அறிவிக்கபட்டது 2016. வாங்க போருக்கு என்று மக்களின் உணர்வை தூண்டி அழைத்தவர்கள். மியன்மர் முழுவதும் நடக்கும் பெரும்பாலான தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் ROHINGYA SOLIDARITY ORGANIZATION  இயக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் தான்.
புனித போர் என்று கூப்பாடு போடவேண்டியது, தோல்வி ஆகும் நேரத்தில் மக்கள், அகதிகள், குழந்தைகள் என்று பரப்பிவிட்டு அனுதாபம் மூலம் தப்பிக்கும் வேலையில் இறங்குவது இந்த மனித தன்மை இல்லாத ஜிகாத் போராளிகளுக்கு ஒரு பொது பிழைப்பு ஆகிவிட்டது.

மொத்த மக்களும் தீவிரவாதிகளா?

ரோஹின்யா முஸ்லிம்கள் மூலம் மியான்மரில் நடந்த எந்த கலவரமும் இன்று விவாதமாக பேசுவது இல்லை. அவர்கள் 24போலிஸ் நிலையங்களை நாசமாக்கி அதில் 72பேர் கொலை செய்த அட்டுழியம் எதுவும் இன்று அப்படியே மறைக்கபடுவது தவறு. நேர்மையாக இருபக்க நியாயதர்மத்தை நாம் கேட்க வேண்டும் தானே… என்னமோ திடீர் என்று இந்த மக்கள் தாக்கபடுவதாக பேசுவது தவறு… அதே நேரம் அப்பாவி மக்கள் காக்கப்படவேண்டும்.

சௌதி ஏன் உதவுவது இல்லை?

50,000 குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் வறுமையில் சாகும் நிலையில் இருக்க, ஏறக்குறைய 29லட்சம் மக்கள் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் வறட்சியில் சிக்கிய போது அமெரிக்க அதன் நேச நாடுகள் தொட்டு இந்திய வரை அனைத்து நாடுகளும் உதவி கரம் நீட்டிய பொது பக்கத்து நாடான சவூதி அரபியா என்ன செய்தது? ஏன் செய்யவில்லை?DADB2E24-1C30-40F6-832E-315A23AC260D_w1080_h608
ISISஅதன் துணை ஜிகாத் போராளிகளுக்கு பணத்தை வாரி வழங்கிய இந்த சவூதி அரபியா அதன் கூட்டாளிகள் சிரியா நாட்டில் இருந்து ஏறக்குறைய 1கோடியே 30லட்சம் அகதிகள் வெளியேறிய போது ஒரே ஒரு அகதிக்காகவாது தன் நாட்டில் அனுமதித்ததா இந்த சவுதி அரபியா? ஒரே ஒரு அகதியையாது அடைக்கலம் கொடுக்குமா இந்த சவூதி ???? ஆனால் பல ஆயிரம் கோடிகளை இந்தியா ஆஸ்திரியா ஐரோப்பா என்று மதம் மாற்றவும் வகாபிசம் பரப்பவும் அனுப்புவதில் என்ன குறைந்த பட்ச நியாயம் இருக்கிறது?
ஒரு டஜன் நாடுகள் இருக்கும் போது, பக்கத்தில் பங்களாதேஷ் பாகிஸ்தான் இருக்கும் போது என்ன தேவைக்கு இந்தியா இந்தியா இந்தியா என்று கைகாட்டுகிறார்கள் இந்த ஊடகங்கள்?
‘‘உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உழைப்புக்கு உரிய மரியாதை; தன்னை விட தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும், கொஞ்சம் பொழுது போக்கு; அமைதிக்கு கொஞ்சம் கடவுள் வழிபாடு’’ என்று வாழ விரும்பும் இந்த இந்திய மண்ணில் பெரும்பான்மை ஹிந்து மக்கள் எளிமையாக சட்டத்தை ஏற்று கொள்ளும் போது, அதெல்லாம் முடியாது எனக்கு என் மதம் தான் முக்கியம்.
அந்த மதத்தை இங்கு நிலை நாட்டும் வரை புனிதப்போர் என்றால் அமைதி எப்படி தழைக்கும்.
பிரதமர் மோடியின் தலைமை யில் ஒரே இந்தியா ஒற்றுமை யான இந்தியா என்ற இலக்கு உள்ளது. இஸ்லாமிய மதம் ஒரு பிரச்சினை அல்ல. ஆஃப்கான் அகதிகள் சுமார் 40,000 அகதிகள் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்ற கோஷம் இல்லை. ஆஃப்கான் இஸ்லாமிய இந்தியாவில் அமைதியாக, இணக்கமாகவே வாழ விரும்புகின்றனர்.
ஆனால் கடும் போராளிகள் என்று பெயர் வாங்கியுள்ள ரோகிங்கியா இஸ்லாமியரின் இலக்கு வேறு. 10 வயது சிறுமி 60 வயதான ஒருவருக்கு நான்காவது தாரமாகி குழந்தையை பெற்றுக் கொள்ளும் அவலம். இந்திய மக்களை பாதுகாப்பதே இந்திய அரசின் தலையாய கடமை. இது மக்களின் எதிர்பார்ப்பு!

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *