போட்டி தேர்வு  என்றாலே அஞ்சும்  தமிழக மாணவர்கள்! போட்டி தேர்வு  என்றாலே அஞ்சும்  தமிழக மாணவர்கள்!
இன்றைய நிலையில் தமிழக மாணவர்கள் பற்றி எண்ணிப் பார்த்தால், ஐயோ! பாவம்! என்று தான் சொல்ல தோன்றுகிறது. தமிழகத்தின் கல்வி தரம் மிகவும் தாழ்ந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொறியியல் படிக்கும் 95%... போட்டி தேர்வு  என்றாலே அஞ்சும்  தமிழக மாணவர்கள்!

இன்றைய நிலையில் தமிழக மாணவர்கள் பற்றி எண்ணிப் பார்த்தால், ஐயோ! பாவம்! என்று தான் சொல்ல தோன்றுகிறது.
தமிழகத்தின் கல்வி தரம் மிகவும் தாழ்ந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொறியியல் படிக்கும் 95% மாணவர்களுக்கும் மேல், தான் என்ன படிக்கிறோம் என்ற புரிதலே இல்லை. அதனை தெரிந்து ஓரளவு படிக்கும் மாணவர்களின் சதவீதம் 3% தான்!
இதனால் தான் இன்று இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

September Sudesi Magazine 2017-8

ஏன் இந்த அவலம்?

இன்றைய நடப்பில் நமது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணர்களுக்கு முதல் தேர்வே பத்தாம் வகுப்பில்தான். அதுவரை சோதிக்கப்படாதவர்கள் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும்தான். அடுத்த தேர்வு 12ம் வகுப்பு தான். இதனால் ஒரு சில கேள்விகளை மட்டுமே உரு போட்டு தேர்வில் தேர்ச்சி பெற வைத்து, அரசின் கல்வி சலுகை கொள்கை மூலம் கல்லூரி சீட்டும் கிடைத்து விடுகிறது.

வேலை தான் பிரச்சினை!

கைவேலையும் தெரியாமல், படித்து முடித்த படிப்பும் முழுமையாக உணராமல் இந்த மாணவச் செல்வங்கள் வருங்காலத்தை கண்டு பயந்து நிற்கின்றன. இதுவே இன்றைய உண்மை நிலவரம்.

யார் காரணம்!

இதற்கு காரணம், இதற்கு முழு பொறுப்பு நமது அரசியல் தலைவர்கள் தான். ஒரு நாட்டினை கெடுக்க வேண்டும் என்றால் அணுகுண்டு வீசத் தேவையில்லை. அந்நாட்டு கல்வியின் தரத்தை குறைத்துவிட்டால் மட்டும் போதும். இனி வருங்காலத்தில் அந்த நாட்டில் எல்லாமே மதிப்பிழந்து விடும். நாடு சீர்குலைந்து விடும் என்பார்கள்.அதுதான் தமிழ்நாட்டிற்கு நடந்துள்ளது.

நமது படிப்பின் தரம் தாழ்த்தப்பட்டாலும், தரம் தேவையில்லை என்ற ஓட்டு வங்கி அரசியலும், தனியார் கல்வி துறையினரின் பேராசையும் அவர்களது அரசியல் பலமும் நமது அரசு பள்ளி மாணவர்களை பின்னோக்கி தள்ளிவிட்டது.
நமது கல்வி திட்டத்தை சீரமைத்து 10 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. எப்படி நாம் நீட் தேர்வை எழுத முடியும்?

கிராமப்புற மாணவர்களுக்கு எப்படி உதவலாம்?

அரசியல் கட்சிகள் ஜாதி பிரிவுகளை அதிகரித்து, பிளவுகளை உண்டு பண்ணி ஓட்டு அரசியலில் வெற்றி காண வழி தேடுகின்றனர். மாணவர்களின் வருங்கால தேவை என்ன என்று பார்க்கவில்லை. மழலை கல்வி முதல் கல்லூரி வரை ஏன் ஒவ்வொரு கிராமத்திலேயும் சிறப்பு பள்ளிகள் திறக்கக் கூடாது?
மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை ஏன் தமிழக அரசு அனுமதிக்கவில்லை! தனியார் பள்ளிகளிள் தடுத்ததாலா?
மாணவர்களே! திறமையை கற்க, போராட வேண்டிய தருணமிது. எவ்வளவு நாள் தான் நீங்கள் போட்டி தேர்வுகளை கண்டு ஓடி ஒளிவீர்கள்.
சிறந்த கல்வியை தருவோம் என்ற கட்சியை மட்டுமே இன்றைய இளைஞர்கள் போற்ற வேண்டும்.

போட்டித் தேர்வை கண்டு மண்டியிடுகிறார்களா…
தமிழக மாணவர்கள்!

கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பெருமை பெற்ற தமிழகத்தின் கல்வித்துறையின் இன்றைய நிலை என்ன?
நீட் தேர்வை கண்டு தமிழக மாணவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள்?
இந்த கிராமப்புற மாணவர்களின் இன்றைய நிலைக்கு யார் காரணம்?
நாம் அனைவரும் ஒற்றை விரலால் தமிழக அரசை தான் சுட்டிக்காட்டுவோம். அதில் தவறில்லை. அது உண்மைதான். ஆனால் அது மட்டுமே உண்மையாக காரணம் என்று கூறினால், அது முற்றிலும் தவறு. ஏனென்றால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவே இல்லை. அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப நம் கல்வி அதிகாரிகளும், கல்வி அமைச்சர்களும் பாடத்திட்டம் மாற்றம் குறித்து சிந்திக்கவே இல்லை.

அலைபேசியில் தான் எவ்வளவு முன்னேற்றம்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அலைபேசி அவுட் ஆஃப் பாஷன் (out of fasion) ஆகி புதிய ஆன்ராய்டு, உரசி பேசும் அலைபேசி… ஓசையில்லாமல்… ஓசி யிலும் நகரம், கிராமம், குக்கிராமம் என அனைவருடைய கைகளிலும் தவழ்கிறது. ஆனால் அலைபேசியில் மாற்றத்தை கொண்டு வந்த நாம் இளைய தலைமுறையினரின் பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தோமோ? இதுகுறித்து, எந்த ஆசிரியரோ, பெற்றோரோ, மாணவர் களோ அரசை எதிர்த்து பாடத்திட்டம் மாற்றம் குறித்து போராடிய, வாதாடிய செய்திகள் உண்டா?
ஊடகங்கள் மட்டும் அவ்வப்போது குறைந்த அளவில் தமிழக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை என்று ஒற்றை வரியில் பாடத்திட்ட செய்தியை கூறிவிட்டு, அடுத்த அரசியல் நிகழ்விற்கு, சினிமா நிகழ்ச்சிக்கு, விளம்பர மோகத்திற்கு என்று சென்றுவிட்டார்கள். இந்த காரணிகளால் ஒவ்வொரு ஆண்டாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக நம் கிராமப்புற மாணவர்களுக்கு போட்டித் தேர்வு, நீட் தேர்வு, தகுதித் தேர்வு அதில் தேர்ச்சி என்பவை எட்டாக்கனி ஆகிவிட்டது!

திராவிட கட்சிகளின் கல்வி துரோகம்!

நெருக்கடி நிலையின்போது இரண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தன. பின்னர் வந்த அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியார்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்காக தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி கல்வியை தனியார்வசப்படுத்தி, தனியார் பள்ள¤ மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஒரு பெரும் வேற்றுமையை நிரந்தரமாக ஏற்படுத்தி விட்டார்கள்.

தனியார் பள்ளிகள்!

தனியார் பள்ளிகள், தங்களின் பாடத்திட்டம், தகுதி, திறமையான ஆசிரியர்கள், சிறப்பு பாடங்கள், கணினி வகுப்புகள், ஆங்கில வகுப்புகள் என்று அனைத்து நிலைகளிலும் அதிகப்படியான பணத்தை பெற்றோர்களிடம் பிடுங்கிக் கொண்டு வளரத் தொடங்கின.
இந்த தனியார் பள்ளிகளை நடத்தியது பெரும்பாலும் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் அவர்களுடன் கூட்டு வைத்தவர்களும்தான். இதே காலகட்டத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அரசு அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு பள்ளி முன்னேற்றம் குறித்து இம்மியளவும் அக்கறை காட்டவில்லை.
அரசு பாடத்திட்டம் தரத்துடன் உயர்த்தப்பட்டால் தங்கள் தனியார் பள்ளியின் நிரந்தர வருமானத்திற்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்பதை மட்டும் கருத்தில்கொண்டு அரசு பள்ளி பாடத்திட்டம் உயர்த்தாமல் பார்த்துக் கொண்டார்கள்.

September Sudesi Magazine 2017-10
சமீபத்திய செய்தி

ஆசிரியர் வருகைப்பதிவு குறைவு, குறைவான நேரம் கற்பித்தல், மோசமான கல்வித்ததரம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று கூறி நிடி ஆயோக், அரசு பள்ளிகளை தனியார் பங்களிப்புக்கு விடலாம் என்ற ஆலோசனையை கூறியுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. முற்றிலும் தவறானது. அரசு பள்ளி சரியில்லையென்றால் தரம் உயர்த்தப்பட வேண்டுமே தவிர, தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது.

அரசாங்கம் வேண்டும்… அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள் வேண்டாமா?

தேர்தலில் நின்று, வென்று மக்கள் பிரதிநிதிகள் ஆன பிறகு அமைச்சராகிய உடன் சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள அரசு பங்களாக்கள், அரசு வாகனங்கள், அரசு ஊழியர்கள், அரசின் சலுகைகள், அரசின் முன்னுரிமைகள் என அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் மக்கள் பிரதிநிதிகள்.
ஆனால், அவர்களின் அரசாங்கத்தின், ஆளுமையின் கீழ் வருகின்ற அரசுப் பள்ளி, கல்லூரிகளை தங்கள் வாரிசுகள் கல்வி பயில பயன்படுத்துவதில்லை.

அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனைகளுக்கு ஏன் செல்வதில்லை!

இதேபோல், தங்கள் மருத்துவ சிகிச்சைகளுக்கும் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனை போன்று அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை. இது அரசு ஆசிரியர்கள், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவர்கள், மக்கள் என அனைவரையும் அவமதிக்கும் செயலாகும். இவர்களின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் வரும் அரசு கல்வி நிறுவனம், அரசு மருத்துவமனை மீது இவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

இலவசங்கள்!

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச மிக்ஸி, கிரைண்டர் போன்றவை அவர்களின் புகைப்படத்துடன் வழங்கப்பட்டன.
இந்த இலவசங்களுக்காக மட்டும் 11,561 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று ஒரு பத்திரிகை செய்து கூறுகிறது. இப்பணத்தில் 25,000 பள்ளிக்கூடங்கள் அல்லது 11,000 ஆரம்ப சுகாதார மையங்கள் துவக்கியிருக்க முடியும்.
இதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் செலவிடப் படும் தொகை நாட்டிலுள்ள 17 பெரிய மாநிலங்களின் சராசரியை விட குறைவாக இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது, தமிழகத்தின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறாமல் இருக்க முடியாது.

September Sudesi Magazine 2017-11
வெறும் ஏமாற்று வேலை!

நுழைவுத் தேர்வு, நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு மட்டும் விலக்கு கேட்பது என்பது மக்களின் பார்வையில் பெரிய முயற்சியாக தோன்றலாம். இவை மேலோட்டமாக பார்க்கின்றபோது அரசுப் பள்ளி மாணவர்களை காப்பது போன்று தோற்றமளிக்கும் இந்த நடவடிக்கை உண்மையில் தமிழக கல்வித்துறையின் தோல்வியை மறைக்க முயலும், பொதுச் சமூகத்தை ஏமாற்றும் ஒரு யுக்தி என்று சொல்லலாம் என்ற நீதியரசர் கே.சந்துரு அவர்களின் கருத்து முற்றிலும் உண்மையானது.
இப்படி தமிழக ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையினால்தான் தமிழகத்தின் கல்வி நிலை போட்டித் தேர்வை எதிர்கொள்ளாத முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது என்று கூறலாம்.
தீர்வாக நான் குறிப்பிடுவது சிறப்புமிக்க தரமான பாடத்திட்டம் தான்!
அந்தப் பாடத் திட்டத்தை சிறப்பாக நடத்தக் கூடிய தகுதி கொண்ட திறமையான ஆசிரியர் களும் தான்!

September Sudesi Magazine 2017-11 - Copy

கி.ராமசுப்பிரமணியன்
ஆசிரியர் கல்வி டுடே

kalvitoday6@gmail.com

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *