பிராமண எதிர்ப்பு உண்மையில் இந்துமத எதிர்ப்பு!  பிராமண எதிர்ப்பு உண்மையில் இந்துமத எதிர்ப்பு! 
ஆதியும் அந்தமும் இல்லாத நமது சனாதன தர்மத்தின் ஆணி வேரானது நமது வேதங்கள்…!! இந்த வேதங்களும் நமது சனாதன தர்மமும், நாடு பிடிக்க வந்தவர்களின் காலக் கணக்கில் அடங்காது. நான்கு யுகங்களாக தொடர்ந்து... பிராமண எதிர்ப்பு உண்மையில் இந்துமத எதிர்ப்பு! 
ஆதியும் அந்தமும் இல்லாத நமது சனாதன தர்மத்தின் ஆணி வேரானது நமது வேதங்கள்…!!
இந்த வேதங்களும் நமது சனாதன தர்மமும், நாடு பிடிக்க வந்தவர்களின் காலக் கணக்கில் அடங்காது.
நான்கு யுகங்களாக தொடர்ந்து வரும் நமது சனாதன தர்மத்தின் கால அளவை நமது இந்து மத கணக்குகளின் மூலமாகவே கண்டு பிடிக்க முடியும்.
பல கோடி வருஷங்கள் ஆகிறது உலகம் தோன்றி என்கிறது நமது கால கணக்கு.
சூரியனிடமிருந்து வரும் ஒலி தான் ஒம் என்று அமெரிக்காவின் நாசா அமைப்பு தற்போது தான் கண்டு பிடித்து சொல்லி இருக்கிறது.
ஒம் எனும் பிரணவ மந்திரத்தை உலகிற்கு அளித்தது நமது ரிஷி முனிவர்கள்!!

வேதங்களின் முக்கியத்துவம்

சனாதன தர்மம் எனும் வாழ்கை முறையை கற்றுக் கொடுக்கும் இந்த வேத நெறிமுறைகள் அநாதியானவை.
காலங்களுக்கு அப்பாற்பட்டது. இதனை போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு தருவதே தலையாய உன்னத கடமையாக கருதப்பட்டது.

வாய்மொழி கற்றல்

வேதங்கள் ஒதுவது என்பது ஒரு அரிய கலை. குருகுல வாசத்தில், பிரம்ம வித்தையை படிக்க வரும் இந்த குழந்தைகள் 12 வருடங்கள், அங்கேயே தங்கி, குருவிற்கு சேவகம் செய்து இந்த வேதம் ஒதுதலை கற்பார்கள்.

வாக்கும் மனமும்

இந்த வேதங்கள் சமஸ்கிருத மொழியில் இருப்பதால் முதலில் அதில் புலமை பெற வேண்டும். அந்த சொற்களை புரிந்துக் கொண்டு மனனம் செய்ய வேண்டும். உச்சரிப்பு தான் வேதத்தின் சாரம் என்பதால் அதி ஜாக்கிரதையாக பயில வேண்டும்.
இதற்கு மனமும் வாக்கும் உடலும் சுத்தமாயிருக்க வேண்டும்.
இப்படி கடுமையான பயிற்சிக்கு பிறகே, வேதங்களை குருவோடு சேர்ந்து ஒத தொடங்க முடியும்.

அன்றைய கால கட்டத்தில்

இந்த வேதங்கள் காது வழியாகவே பயிலப்பட்டு இவ்வளவு லட்சம் ஆண்டுகள் கழித்தும் இன்று நமக்கு கிடைத்திருக்கின்றன என்றால் அதற்கு இந்த உலகம் ‘‘அந்தணர்களுக்கு’’த்தான் நன்றி சொல்ல வேண்டும். அன்று ஒலை சுவடிகள் கூட இல்லாத கால கட்டம்.

துறவு வாழ்வு

இந்த வேதங்களை பயின்று பல ஆயிரம் தலை முறைகளுக்கு தொடர்ந்து பயிற்றுவித்து வரும் இந்த பிராமணர்களின் வாழ்வே ஒரு தவ வாழ்வு தான்.
காலை 4 மணிக்கு எழுந்து, தியானம் வேதம் பயில்தல், சொற்ப உணவு, கடவுள் சிந்தனை, கோயிலை சுற்றியே ஒரு எளிய வாழ்கை.
இவர்களும் இவர்களை சார்ந்த குடும்பங்களும் இதில் அடக்கம். இப்படியாக இவர்களின் வாழ்வே ஒரு அர்ப்பணிப்பு தான்.
ஷத்திரிய மன்னர்கள் தங்கள் கோயில்களில் இவர் களுக்கு வசதி செய்தது கொடுத்து தெய்வ காரியங்களை செய்ய ஏதுவாக உதவினார்கள்.
அந்தணர்களை போற்றி வாழ்ந்தார்கள்! அவர்களை பாதுகாத்து தான் வாழ்ந்தார்கள்! சமூகத்தினர் இவர்களை உயர்ந்த நிலையில் வைத்து, பாதுகாத்து வந்தனர். தங்களது வீட்டு குருமார்களாகவே மதித்து வாழ்ந்தனர்.

சமூக அமைப்பு

வேதங்களை பயில்பவர்கள் பிராம்மணர்கள்!
ஆனால் பிராமண குலத்தில் பிறந்து விட்டதால் மட்டுமே அவன் பிராமணனாக முடியாது. குண தர்மமே முக்கியம் குல தர்மம் கிடையாது என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
யார் வேண்டுமானாலும் வேதம் பயிலலாம்!! அதற் கான கடுமையான நியமங்களை பின்பற்ற வேண்டும் என்பதே முக்கியம். நாம் புனிதமாக போற்றும் ராமாய ணமும், பாரதமும் எழுதியவர்கள் பிராமண குலத்தில் பிறக்காதவர்கள்!! என்பதே இதற்கு சாட்சி…
சிந்தித்து செயலாற்றுபவர்கள் பிராமணர்கள், பிரம்ம வித்தையை பயில்பவர்கள். நெஞ்சுரத்தோடு வீர போர் புரியும் ஷத்திரியர்கள்.
வயிற்று பசியை போக்கும் வியா பாரிகள் தான் வைசியர்கள்.
செய்யும் வித்தை தெரிந்தவர்கள், அதாவது சூத்திரங்கள் தெரிந்து செயல் வீரர்கள் தான் சூத்திரர்கள் இதனால் தான் சூத்திரதாரி என்றும் சிலரை இன்றும் கூறுகிறோம். இதில் வாழ்வு முறை தான் உள்ளதே தவிர, ஏற்றத்தாழ்வுகள் இன்று இல்லை.
அன்றைய காலத்தில் எல்லா இந்துக்களும் பூணுல் போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அனைத்து இந்துக்களும் இன்றும் சுபத்திற்கும், துக்கத்திற்கும் பூணூல் அணிகின்றனர்…

அரசின் கள்ள மௌனம் ஏன்??

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் பிராமண எதிர்ப்பு கடந்த 50 ஆண்டுகளாக தொடர்கிறது. வலுவிழந்து விட்டது என்றாலும் தர்மத்திற்கு புறம்பானது என்பதில் ஐயமே இல்லை.
துருப்பிடித்து போய்விட்ட கருவியாகவே ஆகி விட்டாலும், அவ்வப்போது திராவிட கட்சியினர், அவதூறு பேசுவதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் ஆளும் தமிழக அரசு இதை கண்டு கொள்ளாதது வேதனை அளிக்கிறது.
மிகவும் கொச்சையாக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள இந்த பெரியார் பேடிகளையும் ஏன் நமது தமிழக அரசு கைது செய்யவில்லை. சட்டத்தின் முன் நிறுத்த வில்லை என்ற கேள்வி உறுத்துகிறது.
அரசின் இந்த கள்ளமௌனம் நமது தூக்கத்தை கலைக்க வேண்டும். விழித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது!! சிந்திக்க தொடங்குவோம்…

பிராமண எதிர்ப்பு என்பது இந்து மத எதிர்ப்பு தான்…

Jan-Dhan

ஒவ்வொரு மதத்தினருக்கும் மத குருமார்கள் உண்டு. அவர்கள் அந்த மதத்தின் புனித நூல்களை, அந்த புனித நூல் எழுதப்பட்ட மொழியிலேயே படித்து  தெளிந்து, அதனை மக்களுக்கு புரியும் விதத்தில், பிராந்திய மொழியில் விளக்கி கூறி வழி நடத்துவார்கள்.மதகுருமார்களுக்கு சிறப்பு மரியாதை என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது தான்.

 இந்து மத குருமார்கள்

இந்து மதம் என்று அழைக்கப்படும் சனாதன தர்மம் சமஸ்கிருத மொழியில் உள்ள நான்கு வேதங்களால் வழி நடத்தபடுகிறது. தேவாரம், பிரபந்தம், திருவாசகம் என பல தமிழ் பக்தி புராணங்களால் வளம் பெறுகிறது.
இதனை பல லட்சம் ஆண்டுகளாக, வாய் மொழியாக கற்று, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த பேரறிஞர்கள் ‘‘பிராமணர்கள்’’ என்றே அழைக்கப்ட்டனர். அதாவது ‘‘பிரம்மத்தை’’ படித்தவர்கள் என்பதால் பிராமணர்கள் என அழைக்கப்பட்டனர்.
இவர்களையே ஷத்திரிய மன்னர்கள் தங்களுக்கு அறம் சொல்லும் மத குருமார்களாக பாவித்தனர். பிற தொழில் செய்யும் இநது சமுதாயமும் ஆன்மீக குருமார்களானவே இவர்களை போற்றி வாழ்ந்தனர்.

அரபு மொழியும் ஷீப்ரூ, அராமிக், கிரேக்க மொழியும்

இஸ்லாமியரின் புனித நூலான குரான் அரேபிய மொழியிலேயே உள்ளது. இந்த அரேபிய மொழியில் புலமை பெற்று புனித நூலின் முழு பரிணாமங்களையும் எடுத்து கூறுபவர்கள் தான் இஸ்லாமிய மத குருமார்கள்.
இவர்களது அரேபிய மொழியை ஏன் திகவினர் விமர்சிப்பதில்லை.
அதே போவே கிறிஸ்த்துவ அமைப்புகளின் புனித நூல் பிரச்சாரத்திற்கும், திகவினர் மௌனம் தான் சாதிக்கிறார்கள்.

மத மாற்றும் சதி திட்டம்

இந்துக்களின் புனித நூல்களான வேதங்கள், பாகவதங்கள் தோவரம் திருவாசகம் இவற்றினை முறையாக பயின்று, மக்களுக்கு செவ்வனே இறைபணி செய்யும் மதகுருமார்களை எதிர்த்து வலுவிழக்கச் செய்வதால் சில அப்பாவி இந்துக்களை மதம் மாற்றம் செய்யலாம் என்ற கணக்கில் தான் இந்த திகவினர், தீய திட்டம் தீட்டி வருகின்றனர்.
மக்கள் மனதில் நமது மதகுருமார்களின் மேலும், நமது புனித நூல்களின் மேலும் அவநம்பிக்கை வரவேண்டும் அவமரியாதை வரவேண்டும் என்று திட்டமிட்டே இந்த தீய செயலை செய்கிறார்கள். தமிழக அரசு அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை எடுத்து வருகிறோம்

இலவசங்களை பெற்று அதர்மத்தை ஏற்பார்கள் தமிழக இந்துக்கள் என்று எண்ணினால் அது தவறு…

Jan-Dhan
இந்து தர்மத்தை கடை பிடித்து வரும் பிராமணர்கள், ஆசாரிகள், செட்டியார்கள் பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் திருமணம் மற்றும் அசுப சடங்கின் போது சத்திரியர்களும் பூணூல் அணியும் பழக்கம் உள்ளது. பன்றிக்கு பூணூல் போடுவோம் என கூறுவது. பூணூல் போடும் பழக்கம் உள்ள மொத்த இந்துக்களுக்கு எதிரான செயல் ஆகும்.
இந்துக்கள் ஒட்டுகளை வாங்க விரும்பும் திராவிட மற்றும் காங்கிரஸ் கட்சிகள். திகாவை எதிர்த்து கண்டன குறள் எழுப்பாதது ஏன். தமிழக இந்துக்கள் தர்மத்தை எதிர்த்து போராட துனிவு இல்லாமல் இலவசங்களை பெற்று ஒட்டளிப்பார்கள் என்று நினைக் கிறீர்களா? அப்படி எண்ணம் இருந்தால் அது தவரானது.

அந்நிய கைக்கூலிகளால் தான்…

Jan-Dhan
திராவிட கழகத்தின் வரலாறு தெரிந்தவர்களுக்கு பெரியாரின் மறுபக்கம் நன்றாக தெரியும். ஆனால் இன்றைய இளைஞர் கூட்டத்திற்கு எப்படி இந்த புரட்டுகள் தெரியும்.
உலகத்தின் 3வது பெரிய மதமாக உள்ளது இந்து மதம் தான். இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்துவம் பிற நாடுகளுக்கு சென்று கொடூரங்கள் புரிந்து, பல கோடி மக்களை கொன்றே தங்கள் மதத்தை வளர்த்தன.

எந்நாட்டுடைய சிவனே போற்றி எனும் நமது புராதானமான இந்து மதம். அன்பையே விதைத்து வளர்ந்தது!! இன்று மீண்டும் உலகை வியாபிக்க போகிறது உறுதி..

நமது மதத்தையும் நமது கலாசாரத்தையும் பண்டி கைகளையும் விமர்சிக்கும் இந்த கைக்கூலிகள் யார்??
அந்நிய கைக்கூலிகளான மிஷினரிகள், அவர்களது எச் சில் எலும்புகளை பொறுக்கி எடுத்து கொள்ளும் கம்யூனிஸ் விசுவாசிகள் தமிழர் உரிமைகளை மீட்க போகிறேன் என்று பொய்கூறி, தலீத் மக்களின் வளங்களை கவரும் மத பின் புலம் கொண்ட அரசியல் அமைப்புகள் என அனைத்துமே காசுக்கு மாரடிக்கும் கயவர் கூட்டம் தான்.
ஊடகங்கள் இவற்றை அம்பலபடுத்த வேண் டும். ஆனால் இன்று வேலியே பயிரை மேயந்த கதையாக பல ஊடகங்களையே இந்த சதி கும்பல் தன் ஆதிக்கத்தில் வைத்துள்ளது எனும் போது இனி இந்து பாதுகாப்பு அமைப்புகள் சிந்திக்க வேண்டும்.

இந்திய இறையாண்மை அரசியல் அமைப்பு சட்டம் விதி எண்&3ன் படி

Jan-Dhan
தமிழகத்தில் 1970 களில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் திராவிடர் கழகம் இந்துக்களுக்கு எதிராக, பிராம்மணர்களுக்கு எதிராக மாபெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது அனைவரும் அறிந்த ஒன்று. ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் வன்முறையையே வாழ்க்கையாக கொண்டு  செயல்படுகிறார்கள். சமுதாய முன்னேற்றம் என்ற பெயரில் இந்துக்களுக்கு இடையே சாதிய பிளவுகளை,
சாதிய வெறியைத் தூண்டிவிட்டு நாட்டில் அமைதி யைக் கெடுக்கும் முயற் சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர்கள் தங்களின் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து ஹிந்துக்களை, ஹிந்துக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதையே வழக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.
இந்திய குற்றவியல் சட்டப்படியும் இவை தண்டனைக்குரிய குற்றங்கள்.
மாண்புமிகு முதலமைச்சர்  சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எந்தவித அச்சமுமின்றி அமைதியாக வாழ்வதை  உறுதி செய்யவேண்டும்.

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *