பிராமணர்களுக்காக நடத்தப்படும் இலவச தொழில் முனைவோர் வழிகாட்டு திட்டம்! பிராமணர்களுக்காக நடத்தப்படும் இலவச தொழில் முனைவோர் வழிகாட்டு திட்டம்!
உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் நவம்பர் 19 அன்று சென்னை சேத்துபட்டு சங்கராலயத் தில் நடத்தப்பட்டது. ஸ்ரீ சங்கராலயத்தின் வேதபாட சாலை மாணவர்களின் வேத கோஷம் மற்றும் கிரிஜா ஜி.க்ஷி. நாராயணன்... பிராமணர்களுக்காக நடத்தப்படும் இலவச தொழில் முனைவோர் வழிகாட்டு திட்டம்!

உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் நவம்பர் 19 அன்று சென்னை சேத்துபட்டு சங்கராலயத் தில் நடத்தப்பட்டது.

23755470_10213843428136416_346043222942598323_nஸ்ரீ சங்கராலயத்தின் வேதபாட சாலை மாணவர்களின் வேத கோஷம் மற்றும் கிரிஜா ஜி.க்ஷி. நாராயணன் அவர்களின் பக்தி பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.
பிராமணர்கள் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் திரு. சிவநாயனன் அவர்களின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கிரி டிரேடிங்நிறுவனத்தின் இயக்குனர் திரு.T.S. ரங்கநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார். HRD OF TALENT MAZIMUS INDIA LTD) இயக்குனரும் சினிமா நடிகர் மற்றும் தயாரிப்பாளரான திரு. ராஜாகிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்பான முறையில் எழுச்சியுறை நிகழ்த்தினார். பின்னர் சுதேசி இதழ் ஆசிரியர் திருமதி. பத்மினி ரவிச்சந்திரன் அவர்கள் சமூக வளர்ச்சியில் வியாபாரிகளின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துறைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒருநாள் பயிற்சி பெற்றனர். திரு. சிவகுமார் முத்துகிருஷ்ணன், திரு. ஹரி பாஸ்கர், திரு. ஷாம் சேகர், திரு. ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு கலந்துறையில் ஈடுப்பட்டனர்.december 2017 issue-47 - Copy (2)
அப்போது வியாபாரத்தில் முதலீடு புதிய வியாபாரத்திற் கான வாய்ப்புகள் போன்ற பல பரிமாணங்களில் வியாபாரிகள் தங்களை மேம்படுத்தி வியாபார வளர்ச்சி நோக்கி செல்வது பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் கடந்து கொண்டனர்.

தற்போதைய செயல்பாடுகள், எதிர்கால திட்டம் பற்றி -சிவநாராயணன்

சென்ற ஆண்டு இதே இடத்தில் ஆகஸ்டு 28 இன்று நடைபெற்ற பயிற்சியில் 75 பேர் கலந்து கொண்டு அதில் தற்போது 6 பேர் சுயதொழில் செய்து வருகின்றனர்.

எங்களின் நோக்கம் இலவசமாக ஆலோசனை, நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் கடன் பெற உதவுதல், முதலீட்டை சரியான முறையில் கையாள்வதற்கு நிதிசார் ஆலோசகர்களின் வழிகாட்டுதல் வழங்குதல் போன்ற செயல்கள் ஆகும். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 100 பேர் கலந்து கொண்டு பொதுவான அளவில் ஆலோசனைகள் மற்றும் கேள்வி பதில் விவாதங்களில் பங்குபெற்றனர். இதன் பின் அடுத்து வரும் நாட்களில் தினம் 10பேர் என்ற முறையில் தனித்தனியாக பேசி அவரவர்கள் தேவைக்கேற்ப தீர்வுகளும் நடவடிக்கைகளும் எடுக்க உள்ளோம்.20171119_120944
உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்கம் மற்றும் அனன்யா பவுண்டேஷன்ஸ் கடந்த முன்று வருடங்களுக்கு மேலாக கல்வி உதவி தொகை, மருத்துவ உதவி தொகை முதலான பல்வேறு நலத்திட்டங்களையும், மற்றும் நலிந்த பிராமணர்கள் முன்னேற்றம் அடைய உதவிகளையும் செய்து வருகிறது.

எதிர்கால திட்டம்

அடுத்து வரும் காலங்களில் பிராமண சமூகத்தை சார்ந்த மாணவ மாணவியர் ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் நுழைவு தேர்வுகளுக்கும், மத்திய, மாநில, பேங்க் நுழைவு தேர்வுகளுக்கும், மருத்துவ படிப்புகளுக்கும் (** தேர்வு) வழிகாட்டுதல் திட்டத்தை இலவசமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த அமைப்பின் மூலம் பிராமண சமூகத்திற்கு

உதவ எண்ணுவோர் மற்றும் சேவையை பெற விரும்புவோர் அணுகவும்.

சிவநாராயணன் 918939966743,
ஸ்ரீதரன் வெங்கட்ராமன், 9962195170,
டாக்டர். சுந்தரம் சேஷாத்திரி 9840656575

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *