பாரத பிரதமர் ஜாதக அலசல்! – பிரும்மஸ்ரீ பாலக்காடு ஸ்ரீ சூர்யன் நம்பூதிரி பாரத பிரதமர் ஜாதக அலசல்! – பிரும்மஸ்ரீ பாலக்காடு ஸ்ரீ சூர்யன் நம்பூதிரி
பாரத பிரதமர் வசீகர சூப்பர் ஸ்டார் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளின் ஒர் ஜாதக அலசல்! வழங்குபவர் – பிரும்மஸ்ரீ பாலக்காடு ஸ்ரீ சூர்யன் நம்பூதிரி M.A.,(Astro) M.Phil.,(Astro) செல்: (0)98401 02001/... பாரத பிரதமர் ஜாதக அலசல்! – பிரும்மஸ்ரீ பாலக்காடு ஸ்ரீ சூர்யன் நம்பூதிரி

பாரத பிரதமர் வசீகர சூப்பர் ஸ்டார் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளின் ஒர் ஜாதக அலசல்!

வழங்குபவர்
– பிரும்மஸ்ரீ பாலக்காடு ஸ்ரீ சூர்யன் நம்பூதிரி M.A.,(Astro) M.Phil.,(Astro)

செல்: (0)98401 02001/ (0) 95001 52427 / 94455 36579

ராசி – விருச்சிகம்

நட்சத்திரம் – அனுஷம் 2ம் பாதம்
நடப்பு தசை – புத்தி – சந்திர திசா – புதன் புத்தி up to 21/4/2019
அனுஷம் மகான்களின் நட்சத்திரம் என்பர். அதற்கு தகுந்தாற் போல், வாழும் மகானாகவே மோடிஜி திகழ்கின்றார்.
கிரகங்களின் பலம்
விருச்சிக லக்னத்துக்குரிய செவ்வாய் லக்னத்திலேயே, சந்திரன் நீச்சம், புதன் அதி உச்சம்.
லக்னாதிபதி செவ்வாய் மிக தைரியமான முடிவுகளை எடுக்க வைத்து வெற்றி பெற வைப்பார். தளபதியான செவ்வாயின் போர் குணமிக்கவர். மனோகரனான சந்திரன் லக்னத்தில் நீச்சம் பெற்று இருப்பினும் இறுதியில் துணிவான முடிவு எடுத்து ஜெயம் உண்டாகும்.
புதன் கதி உச்சம் பெற்று இருப்பதால், மிகுந்த புத்தி கூர்மை மிக்கவராய் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
யோகங்கள்

ருசத யோகம்

லக்னாதிபதி செவ்வாய் தனது சொந்த வீட்டில் இருப்பதால் வசீகர தோற்றம்.

நீச்சபங்க ராஜ யோகம்

நீச்ச மடைந்த வீட்டில் சந்திரன் இருப்பதால் வீட்டின் அதிபதி செவ்வாயுடன் கேந்திரத்தில் இணைந்து இருப்பது ராஜ யோகத்தினை கொடுக்கும்.

அகண்ட சாம்ராஜ்ய யோகம்

ஒன்பதாம் அதிபதியான சந்திரன் கேந்திரத்தில் இருப்பதால், மக்களை ஆளும் ஆட்சி அதிகாரமும், செயலை முடிப்பதில் வல்லவராகவும் திகழ்வார்.

கஜ கேசரி யோகம்

சந்திரனிலிருந்து, குரு கேந்திரம் இருப்பது, நீடித்த வெற்றிகரமான வாழ்க்கையினை எதிர்காலத்திலும் எதிர்பார்க்கலாம்.

அமலா யோகம்

இந்த யோகத்தினால் மக்களிடம் நல்ல செவ்வாக்கு பெற்று திகழ்வார். மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு.
சசி மங்கள யோகம்
சந்திரனும், செவ்வாயும் ஒரே வீட்டில் (லக்னத்தில்)இருப்பதால் இந்த யோகம் ஏற்படுகிறது. கஷ்டம் என்பது பொருளாதார ரீதியில் இல்லை!

பெரி யோகம்

சுக்கிரன், மற்றும் லக்னாதிபதி, குருவிற்கு கேந்திர நிலையில் இருப்பதால், ஞானம் சார்ந்த விஷயத்தில் மிகவும் பற்றுடன் இருப்பீர்கள்.

சரீர சௌக்ய யோகம்

லக்னாதிபதி குரு, சுக்கிரர், கால் பகுதியினை ஆக்ரமித்து உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் இருந்து எப்போதும் அனுகூலம்! நீண்ட ஆயுள் பகவான் அருளி உள்ளார்.

மாத்ரு மூல தன யோகம்

குரு, சனியினால் நிலைப்படுத்த படுவதால் உங்களுக்கு தாயின் ஆசீர்வாதம் எப்போதும் உதவியாக இருக்கும்.
நீச்சமடைந்த சந்திரன், நன்மையே செய்து கொண்டு இருக்கிறார். மோடி ஜீ அவர்களுக்கு, சந்திர திசை 19-1-2022ல் முடிகிறது. அதுவரை, அதாவது (2019ல்) அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும், மோடிஜீயே வெற்றி பெறுவார். இது உறுதியான வாக்கு. இந்திய அரசியல் வரலாற்றில் மோடிஜீயின் சாதனைகள் பொன் எழுத்துகளில் பதிக்கப்பட வேண்டிய பொற்காலம் என பெயர் பெறும். இவரால் இந்தியா மீண்டும் உலகை ஆளும்.

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *