பல் வெலக்காதீங்க… பல் வெலக்காதீங்க…
நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு கொள்வோம், இதில் எந்த பதில் வந்தாலும் இந்த பக்கத்தை முழுவதுமாக படித்து விட்டு உங்கள் ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கின்றது... பல் வெலக்காதீங்க…

நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு கொள்வோம், இதில் எந்த பதில் வந்தாலும் இந்த பக்கத்தை முழுவதுமாக படித்து விட்டு உங்கள் ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு அதை இயற்கையான முறையில் எப்படி மேம்படுத்துவது என பார்ப்போம்.

எது ஆரோக்கியம், முதலில் நாம் பார்த்தது ஆரோக்கிய பானம், அதற்கு காரணம் இருக்கிறது, என்னவென்றால் நம் உடல் 70% நீரால் உருவானது அதனால் தான் இதுவரையில் நாம் அதிகாலையில் அருந்தி வந்த தே(வையில்லாத) நீரை ஆரோக்கியம் நிறைந்த தே(வையான)நீராக மாற்றினோம்.

காலை எழுந்ததும் செய்பவை என நாம் பார்த்தவை தேநீர் page 1 1அருந்துவது, ஆனால் செய்யவேண்டியவை வேறு ஒன்று உள்ளது. இன்றைய நவீன உலகத்தில் படுக்கையிலேயே காபி (BED COFFEE) எனும் நம் ஆரோக்கியத்தை முற்றிலும் கெடுக்கக்கூடிய செயல்களை செய்துகொண்டுள்ளோம். நாம் செய்தது மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கும் இதையே பழக்கி விடுகிறோம். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரின் ஆரோக்கியமும் படி படியாக சீர்குலைந்து வருகிறது.
பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் இல்லத்தரசிகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நடத்தப்பட்ட ஆய்வின் படி ஒரு அதிர்ச்சியான முடிவு பெறப்பட்டது.Sudesi Novmber issue1-36

காலை எழுந்ததும் படுக்கையிலேயே காபி அருந்தும் பழக்கம் (அதாவது பல் துலக்காமல்) யாரிடம் உள்ளது என நேரடியாக கேட்கப்பட்ட கேள்விக்கு 10 இல் 3 பேர் பல் துலக்கிவிட்டு தான் மற்ற செயல்கள் செய்வதாகவும், 3 பேர் காபி அருந்துவதாகவும், 4 பேர் கோபப்பட்டு நான் காபி குடிப்பது இல்லை டீ தான் என சொல்கிறார்கள். மொத்தத்தில் 7 பேருக்கு இந்த பழக்கம் உள்ளதாக அறியப்படுகிறது.

இதில் வருத்தம் தரக்கூடிய நகைச்சுவை என்னவென்றால் நான் காபி குடிப்பதில்லை டீ தான் என சொல்கிறார்கள். டீயோ காபியோ காலையில் பல் விளக்காமல் செய்தால் தவிர்க்க முடியாத பேராபத்தில் மாட்டுவது உறுதி.
இரண்டு வேளை பல் விளக்க வேண்டும் என்று படிக்கும் காலத்தில் இருந்தே கற்று தந்துள்ளனர். ஆனால் அதை கடைபிடிப்பதில்லை, இரண்டு வேளை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை காலை மட்டுமாவது முறையாக செய்ய வேண்டும் அதையும் செய்ய தவறியதன் விளைவுகளே மரபு சாரா நோய்களாக (NON -COMMUNICABLE DISEASE) நம்மை ஆள தொடங்கியுள்ளது.

மீண்டும் ஒரு குட்டி கதை….

புரியாத புதையல்

ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற வயதானவர் இருந்தார், தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு ஊர் மக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்தார். மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு, சில்லறைகளை வீசுவார்கள். ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, ‘கடவுளே’ என்னை மட்டும் ஏன் ஒரு ஏழையாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு அரசனாகப் படைத்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?’ என்று புலம்பிக் கொண்டேயிருப்பார்.

Sudesi Novmber issue-36
காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென அவர் இறந்துவிட்டார். அவருடைய உடலை சுமந்து சென்று ஈமக்கிரியைகளைச் செய்ய அங்கிருந்த மக்கள் யாருக்கும் விருப்பமில்லை. அதனால் அவரது உடலை அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்து அங்கே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர். சில அடிகள் தோண்டியவுடன், அங்கே மிகப்பெரிய ஒரு வைரப் புதையலைக் கண்டெடுத்தனர்.

இந்த வயதான ஏழை தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் புதையலின்மேலேயே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ, அதையெல்லாம் அடைந்திருப்பார்.

ஆரோக்கியமும் அப்படித்தான்
இந்த கதையில் வரும் வயதான முதியவர் போலவே தான் மரபு சாரா நோய்களினால் தவிக்கும் அனைவரும் ஆரோக்கியம் எங்கு இருக்கிறது என தெரியாமல், ஏதேதோ செய்து கொண்டுள்ளோம்.
உதாரணமாக மழை நீரானது எந்த நிலப் பரப்பில் விழுகின்றதோ அந்த தன்மைபெறுகின்றது.அதாவது சிப்பிக்குள் விழுந்தால்முத்தாகவும், கடலில் விழுந் தால் உப்பு சுவையும், விளை நிலத்தில் விழுந்தால் செடிகளுக்கு உயிராகவும், ஆற்று படுகையில் விழுந்தால் மக்களுக்கு பயனுள்ளதாவும் மாறுகிறது, அதுவே சாக்கடை கழிவுகளில் விழுந்து ஊருக்குள் சென்றால் கெட்ட வாடையுடன் பலதொற்று நோய்களையும் உருவாக்குகிறது, Sudesi Novmber issue-37

இதுபோல் தான்நாம் உண்ணும்உணவு நமக்கு ஆரோக்கியமானதாக மாறுவதும் நம் உடலை பலகெட்ட வாடையுடன் நோய்களை உண்டாக்குவதும் நம் வாயை (பற்களை) சுத்தமாக வைத்திருப்பதிலேயே உள்ளது.
இதற்கான தீர்வுகள் அனைவரின் வாயிலும் உள்ளது. ஆம் முதலில் பார்த்தஆய்வுகள் நமக்கு உணர்த்துவது பல் விளக்காமல் அனைத்தையும்செய்வதுதான் முக்கிய காரணம். பலரும் தவறான நவீன பாதையை (பெட் காபி) நோக்கி செல்கிறோம் அதை மாற்றி பாரம்பரிய முறைகளை பின்பற்றின்னால் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும்.

குறைந்த ஆயிலை கொப்பளித்தால் குறைவில்லா ஆரோக்கியம்!    எண்ணெய் கொப்பளித்தல்

எண்ணெய் கொப்பளித்தல் என்பது மிக பாரம்பரியமான ஒரு ஆரோக்கிய செயல், இதை செய்வதற்கு உகந்த நேரம் காலை (அல்லது) காலி வயிறு நிலை (அதாவது சாப்பிட்ட பிறகு மூன்று மணி நேரம்). காலை எழுந்ததும் வாயை தண்ணீரால் கொப்பளித்த பிறகு வயல்வெளியின் கேச்சா ஆயில் 5விலி வாயில் ஊற்றி குறைந்தது 12 முதல் 15 நிமிடம் வரை கொப்பளிக்க வேண்டும். வாயில் ஊற்றும் போது எண்ணெயாக இருந்து 15 நிமிடங்கள் கழித்து துப்பும்போது வெறும் நீராக இருக்கும். இப்படி தொடர்ந்து செய்து வர உடலில் உள்ள அனைத்து கெட்ட கிருமிகளும் நீங்கி ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியம் பெரும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து வித நோய்களுக்கும் ஒரு உன்னத தீர்வு.

பல் துலக்குதல்

என்னங்க தொடரோட தலைப்ப ‘‘பல் வெலக்காதீங்க’’ன்னு சொல்லிட்டு இப்ப ‘‘பல் துலக்குதல்’’ அப்படின்னு குறுந் தலைப்பு கொடுக்கறீங்களேன்னு நீங்க சொல்றது எனக்கு (மைன்ட் வாய்ஸ்) கேட்குது. இது நாள் வரையில் நாம் செய்து கொண்டிருப்பது பல் விளக்குவது அதாவது ரசாயன கலவைகள் கொண்டு, பேஸ்ட் எனும் நவீன கலாச்சாரத்தில் மயங்கி பயன்படுத்துகிறோம்.

வீட்டில் உள்ள பாத்திரங்களை தான் தினமும் விலக்கி வைப்போம், அந்த பாத்திரங்கள் நாளடைவில் தேய்ந்து பயன் இல்லாமல் போகும், இதே போல் தான் பற்களும், ரசாயன கலவைகள் கொண்டு தினமும் விலக்க விலக்க பற்களால் மிக பெரிய விபரீதங்களை ஒவ்வொரு தனி மனிதனும் சந்திக்க வேண்டியிருக்கும்.
மேலே சொல்லப்பட்ட கதையில் உள்ளவரை போல், புதையலை பற்றி புரியாமலே வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம், வாய் தான் நமக்கு தேவை யான அனைத்து உணவுகளையும் உள்ளே எடுத்து செல்கிறது, அனைத்திற்கும் ஆதாரம் என உணர்ந்து நாள்தோறும் வயல்வெளியின் கேச்சா ஆயில், கொண்டு எண்ணெய் கொப்பளித்தல் செய்தும் மற்றும் பாராம்பரிய முறைப் படி தயாரிக்கப்பட்ட வயல்வெளியின் காண்யே பற்பொடி கொண்டு கை விரல்களால் (NO BRUSH) பல் துலக்கியும் வர ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது.

நாளின் தொடக்கத்தை சிறப்பாக தொடங்கினால் அதுவே ஆரோக்கியத்தின் முதற்படி.
பின்வரும் மாதங்களில் நாம் இன்று செய்து கொண்டிருக்கும் அனைத்து செயல்களுக்கும் சரியான ஆரோக்கியம் நிறைந்த மாற்று முறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

கேச்சா ஆயில் மற்றும் காண்யே பற்பொடி வாங்க அழைக்கவும்

வயல்வெளி இயற்கை களஞ்சியம்

CELL : 7200072070

CELL : 9500120269

website : www.vayalveli.in

facebook_logos_PNG19751

: vayalveliiyarkaikalanchiyam

என்றும் உங்கள் ஆரோக்கியத்தில் ஆவலுடன்

ராஜ்குமார் சம்பத்

(ஆயுர்வேதா மற்றும் இயற்கை உணவு ஆலோசகர்)

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *