நாளின் தொடக்கத்தை சிறப்பாக தொடங்கினால் அதுவே ஆரோக்கியத்தின் முதற்படி! நாளின் தொடக்கத்தை சிறப்பாக தொடங்கினால் அதுவே ஆரோக்கியத்தின் முதற்படி!
நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு கொள்வோம், இதில் எந்த பதில் வந்தாலும் இந்த பக்கத்தை முழுவதுமாக படித்து விட்டு உங்கள் ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கின்றது... நாளின் தொடக்கத்தை சிறப்பாக தொடங்கினால் அதுவே ஆரோக்கியத்தின் முதற்படி!

நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு கொள்வோம், இதில் எந்த பதில் வந்தாலும் இந்த பக்கத்தை முழுவதுமாக படித்து விட்டு உங்கள் ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு அதை இயற்கையான முறையில் எப்படி மேம்படுத்துவது என பார்ப்போம்.

page 1 1
நாம் காலை எழுந்தது முதல் உறங்குவது வரை நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் ஆரோக்கியம் சார்ந்தே உள்ளது, எனவே இதை கொஞ்சம் உற்று நோக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.கொஞ்சம் காலம் பின்னோக்கி (REWIND) சென்று பார்போம்.

நம் தாத்தா பாட்டி என அனைவரும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை, இருந்ததை கண்கூட பார்த்தும், பார்த்து கொண்டும் உள்ளோம். இதற்கு காரணம் அவர்கள் உணவு முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே இருந்தது.

ரசாயனம் இல்லாத உணவு வகைகளையே அவர்கள் உண்டு வந்தனர் மேலும் மண்களால் ஆன பொருட்களை வைத்தே சமையல் முறைகளை கையாண்டனர். ரசாயனம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்தனர் அதுவே அவர்கள் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம்.

இந்த நேரத்தில் குட்டி ஜென் கதை ஒன்று நினைவில் வருகிறது……

தூணிலே பூனை!……

வேதம், சாஸ்த்திரம், உபநிஷத்துக்கள் என அனைத்திலும் தேர்ச்சி பெற்ற ஒரு குரு தனது சீடர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்தார் அந்த நேரத்தில் ஒரு பூனை ஒன்று அங்கும் இங்கும் ஓடி அவர்களுக்கு இடையூரு தந்தது, அந்த பூனை குருவை எதுவும் செய்யவில்லை ஆனால் சீடர்கள் கவனம் சிதறியதால், குரு தன் சீடர்களிடம் அந்த பூனையை அருகில் இருந்த தூணில் கட்டிவைக்குமாறு கூறினார்.

அந்த பூனையும் தினமும் வர குருவும் கட்டளை இட அவர் பாடம் நடத்தும் போதெல்லாம் தொடர்ந்து… பூனையை தூணிலே கட்டி வைப்பது என வழக்கமானது. ஒரு நாள் குரு வயதாகி இறந்துபோனார்.அவருடைய சீடர்களில் ஒருவர் அந்த பாட சாலையில் குருவாக இருந்தார் ஒரு நாள் அந்த பூனையும் இறந்தது.

அவர் தன் சீடர்களுக்கு பாடம் நடத்தும் போது சீடர்களை பார்த்து கோபித்து கொண்டார். பாடம் நடத்தும் போது தூணிலே பூனையை கட்டவேண்டுமென்று தெரியாதா உங்களுக்கு? உடனே சென்று ஒரு புது பூனையை பிடித்து வந்து அந்த தூணிலே கட்டுங்கள் என்றாராம்……

இந்த கதையில் வரும் சீடர்களில் இருந்து குருவானவரைபோல் நாமும் பல வியாபார யுக்தி மற்றும் அவசர வாழ்வில் (நவீன கலாச்சாரத்தில்) சிக்கி எதற்கு என்றே தெரியாமல் செயல்களை செய்து கொண்டு இருக்கிறோம் (உதாரணம்: காலையில் டீ குடிப்பது) டீ-க்கு மாற்று யோசித்தாலே ஒவ்வொரு நாளின் தொடக்கமும் சிறப்பாய் அமையும்.

அதுவும் நம் ஆரோக்கியத்தை சிறிது சிறிதாக சீர்குலைக்க கூடிய உணவு பழக்க வழக்கங்களில் சிக்கி கொண்டுள்ளோம்.ஆரோக்கியம் என்பது நோய் இல்லாமல் இருப்பது மட்டும் அல்ல,நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதும் தான். ஆரோக்கியம் என்பதை தெரிந்துகொள்ளும் முன்பு நாம் நோயை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

நம் மனித சமுதாயத்தையே அதிரவைத்து கொண்டிருக்கும் நோய்களில் மிகவும் சவாலாக இருப்பவை அனைத்தும் மரபு சாரா நோய்கள் அதாவது பரம்பரை நோய்கள் அல்ல (NON-COMMUNICABLE DISEASE ). இந்த மரபு சாரா நோய்கள் உருவாகுவதற்கு காரணம் நாம் நம் கலாச்சாரத்தை தவறவிட்டதுதான்.

சர்வேதேச ஆய்வின்படி இந்தியாவில் தோராயமாக 10ல் 6 பேருக்கு சர்க்கரை நோயும், 4 பேருக்கு மூச்சு குழல் சம்பந்தப்பட்ட நோயும், 8 பேருக்கு செரிமானம் குறைபாடு களும், 7 பேருக்கு இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோயும், 7 பேருக்கு நரம்பியல் தொடர்பான குறைபாடுகளும், 8 பெண்களுக்கு மாதவிலக்கு குறைபாடுகளும், 6 பேருக்கு கொலஸ்ட்ரால் தொடர்பான நோய்களும், 6 பேருக்கு தைராய்டு நோயும், 30 வயதை தாண்டியவர்களில் 10ல் 7 பேருக்கு மூட்டு வலி நோய்களும். இந்த நோய்களின் சதவிகிதம் அதையும் தாண்டி அதிகமாகி கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வுகள் அனைத்தும் நமக்கு தெரிவிப்பது நம் சமூகம், நோய்கள் நிறைந்த சமூகமாக மாறிக்கொண்டுவருவதை சுட்டிக்காட்டுகிறது. இதில் இருந்து மாறி நாமும் நம் குடும்பமும், சமூகமும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் பின்பற்றவேண்டியவை வள்ளுவனின் வாய்மொழிகளில் ஒன்றே ஒன்றுதான்

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
(அதிகாரம்: மருந்து, குறள் 944)

முன்பு உண்ட உணவு நன்கு செரிமானமானதை அறிந்து பின்பு நன்கு பசித்த பிறகு உடலுக்கு ஏற்ற உணவை உண்டால் உயிர் வாழ்வதற்கு இடையூறான நோய்கள் ஏற்படாது.

காலை எழுந்தவுடன் செய்து கொண்டிருப்பது பாலே இல்லாத பாலையும், சர்க்கரையே இல்லாத சர்க்கரையும் (வெள்ளை சீனி), உடலுக்கு ஆரோக்கியமே இல்லாத குப்பை தேநீர் பொடியும் (DUST TEA) கலந்து தேநீர் எனும் பெயரில் தேவையில்லாதவற்றை குடித்து வருகிறோம்.இதற்கு சிறந்த மாற்றாக புளுமா டீ (BLUMAA TEA )  உள்ளது.

page 1 2 - Copy

 

ஒரு ஸ்பூன் புளுமா டீ 2 கப் தண்ணீரில் கலந்து அது ஒரு கப் ஆக மாறும் வரை கொதிக்க விட்டு நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டி கலந்து பருக ஆரோக்கியம் உறுதி செய்யப்படும்.

நாளின் தொடக்கத்தை சிறப்பாக தொடங்கினால் அதுவே ஆரோக்கியத்தின் முதற்படி.
பின்வரும் மாதங்களில் நாம் இன்று செய்து கொண்டிருக்கும் அனைத்து செயல்களுக்கும் சரியான ஆரோக்கியம் நிறைந்த மாற்று முறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

Flower-Teaபுளுமா டீ வாங்க அழைக்கவும்
வயல்வெளி இயற்கை களஞ்சியம்
ராஜ்குமார் சம்பத்

CELL : 72000 72070

            9500120269

website : www.vayalveli.in

 

 

 

 

 

 

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *