நாட்டு பசு பாதுகாப்பு இயற்கை விவசாயம் பாதுகாப்பு கோரக்ஷனா சமிதி அமைப்பின் முக்கிய நோக்கம்! – ஆடிட்டர் திரு. குருபிரசாத் உறுதி நாட்டு பசு பாதுகாப்பு இயற்கை விவசாயம் பாதுகாப்பு கோரக்ஷனா சமிதி அமைப்பின் முக்கிய நோக்கம்! – ஆடிட்டர் திரு. குருபிரசாத் உறுதி
நாட்டு மாடுகளை பாதுகாத்தல் இயற்கை விவசாயத்தை நடைமுறை செய்தல், மரச் செக்கின் மூலம் எண்ணெய் தயாரித்தல் போன்றவை இன்றைய சூழலில் மிகவும் அரிதான ஒரு விஷயமாக மாறிவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இதை சிறந்த... நாட்டு பசு பாதுகாப்பு இயற்கை விவசாயம் பாதுகாப்பு கோரக்ஷனா சமிதி அமைப்பின் முக்கிய நோக்கம்! – ஆடிட்டர் திரு. குருபிரசாத் உறுதி

நாட்டு மாடுகளை பாதுகாத்தல் இயற்கை விவசாயத்தை நடைமுறை செய்தல், மரச் செக்கின் மூலம் எண்ணெய் தயாரித்தல் போன்றவை இன்றைய சூழலில் மிகவும் அரிதான ஒரு விஷயமாக மாறிவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இதை சிறந்த முறையில் பலருக்கு பயிர்ச்சியும் வழங்கி தன்னை போலவே பலரும் உருவாக இயற்கை விவசாயம் காக்க உருவான ஒரு இயக்கம் போல திகழ்கிறது கோரக்ஷன சமிதி என்னும் அமைப்பு. சென்னையை சார்ந்த ஆடிட்டர் திரு. குருபிரசாத் அவர்கள் இந்த அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். இதன் செயல்பாடுகள் பற்றி நம்மிடம் அவர் தெரிவித்தது.

 

ஒரு குடும்பத்தின் தேவை
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம். 2 ஏக்கர் நிலமும் 2 நாட்டு பசுக்களும் வைத்திருந்தால் யாருடைய தயவும் இல்லாமல் அவர்களால் நிம்மதியாக வாழ முடியும் இரண்டு பொருட்கள் மட்டுமே அவர்கள் வெளியே வாங்க வேண்டி இருக்கும் ஒன்று உப்பு இரண்டாவது பெருங்காயம்.
அன்னியர் பிரவேசத்தின் போது நம் நாட்டில் 1 மனிதனுக்கு 10 நாட்டு மாடுகள் இருந்தது என்பார்கள்.
அடிமை படுத்திய விதம்
வெள்ளைக்காரன் அவனது வியாபாரத்தை பெருக்க மிகப் பெரிய சவாலாக இருந்தது நமது நாட்டு பசுக்கள். இதை அழித்தால் தான் பாரத மக்கள் பொருளாதார சுய சார்பு நிலை இழந்து அன்னிய பொருட்களை சார்ந்து வாழும் நிலை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்து நாட்டுமாடு அழிப்பு, கலப்பின பசு அதிகரிப்பு, செயற்கை உரங்கள் அறிமுகம் என பாரத மக்களை அன்னிய உரங்களையும் மாடுகளையும் நம்பிவாழும் நிலையை ஏற்படுத்தினான். இதனால் இன்று 10 மனிதனுக்கு 2 மாடுகள் இருக்குமா என்பது சந்தேகமே! ஆனால் இப்படிபட்ட சூழலில் அனைவருக்கும் தேவையான அளவு சிறந்த நாட்டு பசு பால் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் நம் அனைவருக்கும் பால் கிடைக்கிறது. அப்படி என்றால் அவை நாட்டு மாடுகளுக்கு இணையான ஒரு சத்து மிகுந்த பாலாக இருக்க வாய்பே இல்லை.
இயற்கை பொருட்கள்
இந்த நிலை பாலில் மட்டும் அல்ல பல்பொடி முதல் பச்சரிசி வரை உள்ளது. இப்படிபட்ட சூழலில் அடுத்த தலைமுறை நல்ல இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும். வீட்டில் ஒரு பசுவாவது அனைவரும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடிப்படையில் இந்த கோசாலையை உருவாக்கி உள்ளோம். பலர் எங்கள் கோசாலையை தொடர்பு கொண்டு இயற்கை விவசாயம் மற்றும் கோ வளர்ப்பு போன்ற பல பயிற்சிகளை பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆதரவு
பொதுமக்கள் நம்மால் இயற்கை விவசாயம் செய்ய முடியவில்லை. ஆனால் அதை செய்பவர்கள் அதரவு வழங்கவேண்டும் என்ற உயரிய மனநிலையில் கோசாலைக்கு போஷகர்களாக இணைகின்றனர். இவர்களின் அதரவோடு நம் கோசாலை பல பணிகளை செய்து வருகிறது
கோசாலை திருவிழிமிழலை க்ஷேத்திரத்தில்
நம் கோசாலை திருவிழிமிழலை என்ற க்ஷேத்திரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வழி செல்லக்கூடிய பேருந்துகள் தென்கரை என்ற இடத்தில் நின்று செல்லும். அந்த இடத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நம் கோசாலை அமைந்துள்ளது. நம் கோசாலை யில் 60க்கும் மேற்பட்ட நாட்டு பசுக்களும் காளைகளும் உள்ளன.
பனந்தோப்பு என்ற பகுதியில் நம் கோசாலை அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதினம் அவர்களால் இந்த இடம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் கோசாலை நன்கொடையை மட்டுமே நம்பி எந்த செயலையும் செய்வதில்லை. எனெனில் வரும் காலங்களில் இந்த கோசாலையை தொடர்ந்து செயல்படுத்த முடியுமா என்பது கேள்விகுறி ஆகிவிடும்.
இயற்கை பொருட்கள்
இந்த காரணத்தால் தரமான பொருட்களை இயற்கையான முறையில் உற்பத்தி செய்ய வேண்டும். அதை நல்ல உள்ளங்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும். அந்த நல்ல உள்ளங்கள் மூலமாக கோசாலையை நடத்த வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்.unnamed (6)
அதற்கு ஒரு செயல்திட்டம் வைத்துள்ளோம். ஒருவருடத்திற்கு 6000 ரூபாய் நன்கொடை பெறுவது. அப்படி நன்கொடை வழங்குபவர்களுக்கு 80ஜி வரி விலக்கு உண்டு. மேலும் பிரதி மாதம் நாம் உற்பத்தி செய்த அரிசியே, பல்பொடி, விபூதி, தாம்பூலபொடி, குளியல்பொடி என எதாவது ஒரு பொருளை 1/2கிலோ கொரியர் மூலம் அனுப்பிவைப்போம்.
இப்படி நாங்கள் செய்யும் போது நன்கொடையை£ளர்களுக்கு நமக்கும் ஒரு நல்ல தொடர்பு ஏற்படுகிறது. அவர்களுக்கும் நல்ல ஒரு கோசாலைக்கும் இயற்கை விவசாயத்திற்கும் ஆதரவு வழங்கிய ஆத்ம திருப்தி உண்டாகிறது. இதன் அடிப்படையிலேயே நம் கோசாலை இயங்கி வருகிறது.
நாம் விலைவிக்கும் பொருட்கள்
நம் கோசாலையில் இந்த நாட்டு பசுவின் சானம், கோமியம் இவற்றின் மூலம் பல்பொடி, குளியல் பெடி, விபூதி, குங்குமம், இயற்கை தூபம்(கம்யூட்டர் சாம்ராணி) கருவேப்பிலை பொடி, முருங்கைபொடி, திருகடுகம், தாம்பூல பொடி, மூலீகை கொசு விரட்டி, பாத்திரம் துலக்கும் பொடி என பல பொருட்களை தயார் செய்யது வருகிறோம்.
நம் இயற்கை விவசாய முறை
நாட்டு பசுவின் கழிவுகளை இயற்கை உரமாக்கி வயல்களில் போட்டு உணவுப் பொருட்களை விளைவிக்கிறோம்.
விவசாய விளைச்சலில் உண்டான கழிவு பொருட்களான சக்கை, வைக்கோல் போன்றவற்றை மாடுகளுக்கு உணவாக வழங்குகிறோம். July 2017 sudesi magazine-43
வயல்களில் உழும் நாட்டு காளைகளின் குளம்பில் அதிக அளவு சத்து உள்ளது. இது வயல்களில் பதியும் போது நமக்கு சத்தான விளை பொருட்கள் உருவாகிறது. நம் வயல் வெளிகளில் எள் விளைவிக்கிறோம்.
இதை பாரம்பரிய முறைபடி மரச் செக்கில் ஆட்டி அதன் எண்ணையை உற்பத்தி செய்கிறோம். இதில் உண்டாகும் எள்ளு, புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு போன்றவற்றை பசுக்களுக்கே வழங்குவதால் அவை ஆரோக்கியமாக உள்ளது.
மரச் செக்கு
சாதாரணமாக நாம் கடைகளில் வாங்கும் எண்ணெய் குருடாயிலை மையப்படுத்தியே உற்பத்தி செய்யபடுகிறது அதை சூடாக்கி வாசனை உண்டாக பல செயற்கை பொருள்களை சேர்த்து இயந்திரங்கள் துணைகொண்டே உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்சாரம் இயந்திரங்கள் துணைகொண்டு எண்ணெய் ஆட்டும் போது உராய்வின் போது அதிக அளவு சூடு ஏற்படுகிறது. பொதுவாக மனிதர்கள் ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து எழுந்தாலே அந்த இடத்தில் ஒருவித சூடு ஏற்படுகிறது. இயந்திரங்கள் தொடர்ந்து சுற்றுவதால் உண்டாகும் உராய்வு காரணமாக ஏற்படும். ஒருவித சூடு அந்த எண்ணெய்யையும் பாதிக்கிறது. இதை தவிர்க்க நம் கோசாலையில் நாட்டு காளை மாடுகளின் உதவியுடன் மரச்செக்கில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தயாரிக்கிறோம்.

 

நம் கோசாலைக்கு ஆதரவாக உள்ள மக்களுக்கு நாம் தயாரிக்கும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் தேய்ங்காய் எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்ய முன்னுறிமை வழங்குகிறோம். 1 லிட்டர் 250 வீதம் முன்று எண்ணெய்களையும் விற்பனை செய்கிறோம்.

நம் மரச் செக்கின் நன்மைகள்
மரச் செக்கில் காளை மாடுகள் சுற்றும் போது சிறிது நேரம் நடக்கும் பின் ஒய்வு எடுக்கும்! இப்படி அதன் சக்தி கேற்ற வேகத்தில் சுற்றுகிறது. இதனால் ஒரே வேகத்தில் உராய்வு நடைபெறுவதில்லை. இதனால் ஏற்படும் சூடின் அளவு மிகவும் குறைவு.July 2017 sudesi magazine-44
அடுத்து மரச் செக்கில் எண்ணையை நாம் மேல் பகுதி வழியாக மொண்டு எடுக்கிறோம். ஆனால் பல இடங்களில் மின்சார செக்கின் அடியில் துளைமூலமாக எண்ணை எடுப்பார்கள் இதனால் அடர்த்தி குறைந்த எண்ணெய் கிடைக்கிறது.
நாம் செக்கின் மேல்பகுதியில் அடர்த்தி அதிகம் உள்ள எண்ணெய்யை மட்டுமே எடுப்பதால் உண்மையான நல்ல எண்ணெய் நமக்கு கிடைக்கிறது.
சான எரிவாயு
நம் கோசாலையில் 16 பேர் வேலை செய்கின்றன. அவர்களுக்கு உணவு தயாரிக்க தேவைபடும் எரிபொருள் நாம் இரண்டாண்டுகாலமா சான எரிவாயு மூலமாகவே தயாரித்து வருகிறோம்.
விருஜா ஹோமத்துடன் விபூதி
கன்றுடன் இருக்க கூடிய நாட்டு பசு காலையில் இடும் முதல் சானத்தை மேலோட்டமாக எடுத்து அதை வரட்டியாக தட்டி மாத சிவராத்திரி அல்லது மஹா சிவராத்திரி அன்று மாலை நேரத்தில் விருஜா ஹோமம் செய்து முட்டாம் போட்டு விபூதி தயாரிக்கின்றோம்.1
4 வேதங்களில் யஜீர் வேதத்தில் அதிக அளவு யாகங்கள் சொல்லப்பட்டுள்ளது. ரிக்வேதத்தில் இரண்டு ஹோமங்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஒன்று புண்ணியா வஜனம் (வீடு சுத்தி செய்ய) மற்றொன்று விருஜா ஹோமம் (விபூதி) தூய்மைபடுத்த.
நம் விபூதி நன்மைகள்
விபூதி நெற்றியில் தேய்க்கும் போது தலையில் உள்ள நீர் வெளியேறுகிறது. மூட்டு இணைப்பில் தேய்க்கும் போது மஜ்சை பலப்படுகிறது. அரிப்பு, எரிச்சல், பூச்சிகடி பட்ட இடத்தில் விபூதி தேய்க்கும் போது குணமாகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் எற்பட்டால் ஆர கால தாமதம் ஏற்படுகிறது அந்த இடத்தில் நம் விபூதி தேய்த்தால் விரைவில் குணமடையும். அம்மை தழும்பு மறையாமல் இருப்பவர்களுக்கு நம் விபூதியை குழம்பாக பிசைந்து பூசினால் தழும்புகள் மறையும்.
நாம் ஒரு புதிய இடத்திற்கு சென்றால் அங்குள்ள குடிநீர் தூய்மை குறைவாக இருந்தால் அப்போது அந்த நீரில் சிறிதளவு இந்த விபூதியை போட்டு 15 நிமிடம் கழித்து குடித்தால் அதில் உள்ள தீமைகளிலிருந்து நாம் நம்மை காத்து கொள்ளலாம். இப்படிபட்ட பல நன்மைகளை கொண்டது நம் விபூதி.
பல்பொடி
நம் உடலில் உள்ள எலும்பில் நிறமும் நம் பற்களின் நிறமும் ஒன்றாக இருக்கும். ஆனால் நாம் பற்களை பேஸ்ட்டு கொண்டு உபயோகப்படுத்தி வெள்ளையாக்க முயற்சிக்கும் போது தேய்மானமும், பலம் இன்மையும் தேவையற்ற பற்கள் சம்மந்தமான பாதிப்பையும் சந்திக்கிறோம். இதை தவிர்க்க பாரம்பரிய முறைபடி இயற்கையான முறைபடி நம் கோசாலையில் பல்பொடி தயாரிக்கிறோம்.
பல்பொடி பயன்படுத்தும் முறை
குறிப்பாக பல்பொடி என்பது பற்களுக்காக மட்டும் என புரிந்திருப்போம். அது தவறு! நம் பற்பொடி நடுவிரலால் முதலில் இருபுறமும் தேய்க்க வேண்டும் பின் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலால் நாக்கில் தேய்க்க வேண்டும்.
பற்பொடியில் உள்ள வேப்ப கசப்பு அடிவயறு வரை சென்று ஒரு ஒமட்டலை உண்டாக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்கும் மன அழுத்தத்தால் பித்தம் உண்டாகிறது. இந்த ஒமட்டல் மூலமாக பித்தம் வெளியேற்றி வயிறு சுத்தமாகிறது.
இப்படி பித்தம் வெளியேறும்போது தலை முழுவதும் ஒரு அழுத்தம் தோன்றி தலையில் உள்ள நீர் கண்கள் வழியாக வெளியேறி தலை சுத்தமாகிறது. இப்படி பற்பொடி பயன்படுத்தி வயிறு முதல் தலைவரை தினசரி சுத்தப்படுத்தி உடல் நலம் பேணலாம். நீங்களும் வந்து எங்களுடன் கோசாலையில் பங்கேற்க வாருங்களேன்.
நம் கோசாலை அருகில் இராமாயணம் காலம் சார்ந்த பல புராண கோவில்கள் உள்ளன.
அதம்பா, மாந்தை, கொல்லுமாங்குடி, சீதக்கமங்கலம், தேதியூர், சீதாதேவி குளித்த குளம், கும்பகோணம் பிரதியங்கரா தேவி கோவில் (ராமர் நிக்கலம்பலா யாகம் செய்த இடம்) ஸ்ரீவாஜ்ஜியம், (ராமர் ஜடாயூ தசரத மஹாசாவிற்கும் ஜடாயுவிற்கும் தர்பணம் செய்த இடம்).July 2017 sudesi magazine-45
ஆதி புரிஸ்வரர் கோவில் (விநாயகர் மனித ரூபத்தில் முதல் முதலில் தோன்றிய கோவில்) ஜெரஹரேஷ்வரர் கோவில் (காய்சலை போக்கும் கோவில்) மேற்கண்ட கோவில்களை பார்க்க விரும்புவேர் நம் கோசாலையில் தங்கி இருந்து பார்க்கலாம். தங்குவதற்கு 2017ஆம் ஆண்டு வரை இலவசம். ஆனால் முன் கூட்டியே போன் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உணவிற்கும், சுற்றி பார்ப்பதற்கும் மட்டும் செலவு செய்தால் போதும், மக்களின் வசதிக்காக நகர்புறம் போல கீமிதிமி இன்டர்நெட் வசதி, வெஸ்டன் டாய்லெட், நல்ல படுக்கை வசதிகளும் செய்துள்ளோம். செல்லும் போது நம் கோசாலைக்கு தாங்கள் விரும்பியதை கொடுத்து விட்டு செல்லலாம்.

மேலும் விவரங்களுக்கு அணுகவும்:
குருபிரசாத் – 94444 11772,

மாலதி – 94443 81772,

அனிதா – 95430 11772.
நெ.3 பணந்தோப்பு தெரு,

திருவிழிமிழலை,

திருவாரூர் மாவட்டம்,

தமிழ்நாடு – 609 501
Email : gorakshna@gmail.com

website : www.gorakshana.org

 

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *