நவோதயா பள்ளிகள்  தமிழ்நாட்டில் திறக்கப்படும்!  உயர்நீதி மன்றம்… நவோதயா பள்ளிகள்  தமிழ்நாட்டில் திறக்கப்படும்!  உயர்நீதி மன்றம்…
உண்மையில் நவோதயா பள்ளிகள் என்றால் என்ன? நமது தேசிய கல்வி கொள்கை 1986ம் ஆண்டின்படி அனைத்து தரப்பு மாணவர்களும் தரமான கல்வி அறிவு பெற வேண்டும் என்பதே! சமூக நிதியை நிலை நிறுத்தி,... நவோதயா பள்ளிகள்  தமிழ்நாட்டில் திறக்கப்படும்!  உயர்நீதி மன்றம்…

உண்மையில் நவோதயா பள்ளிகள்
என்றால் என்ன?

நமது தேசிய கல்வி கொள்கை 1986ம் ஆண்டின்படி அனைத்து தரப்பு மாணவர்களும் தரமான கல்வி அறிவு பெற வேண்டும் என்பதே! சமூக நிதியை நிலை நிறுத்தி, ஏழை மற்றும் கிராமபுற மாணவர்களுக்கும் தரமான கல்வியை கொடுக்கும் பொருட்டு 1985-86ல் துவங்கப்பட்டது தான் நவோதயா வித்யாலயா.October Sudesi Magazine 2017-10
நவோதயா பள்ளிகள் எங்கு உள்ளது?

‘நவோதயா பள்ளிகள்’ திட்டத்தின் படி, நமது ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவோதயா பள்ளி இருக்க வேண்டும் என்பதே.
சில இடங்களில் மலை வாழ் மக்கள் அதிகம் இருந்தால், பிரத்யேகமாக சில நவோதயா பள்ளிகள் திறக்கப்படும்! இவ்வகை பள்ளிகள் கணக்கில் வராது.October Sudesi Magazine 2017-10 - Copy (3)
மொத்த பள்ளிகள்

2016ம் ஆண்டு கணக்கு படி 598 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அவற்றில் 591 பள்ளிகள் முழுவீச்சில் இயங்கி வருகிறது. இதை தவிர 62 பள்ளிகள் பிரத்யேகமாக இயங்கி வருகிறது.October Sudesi Magazine 2017-10 - Copy (2)
நவோதயா பள்ளியின் சிறப்புகள்

மாநில அரசு 30 ஏக்கர் நிலம் கொடுத்தவுடன், நவோதயா பள்ளி அமைப்பு 20கோடிகள் செலவு செய்து, உலக தரம் வாய்ந்த உள் கட்டமைப்பு வசதிகள் நிறைந்த பள்ளி கூடத்தை கட்டி முடிப்பார்கள்.October Sudesi Magazine 2017-11 - Copy
சர்வதேச தரத்திலான பயிலரங்கம், ஆய்வு கூடங்கள், நூலகம், கம்யூட்டர் லேப், ஆடிட்டோரியம், பல விதமான விளையாட்டுக்கள் கற்றுக் கொள்ள போதுமான விளையாட்டு மைதானங்கள் என நவோதயா பள்ளிகள் நம்மை பிரமிக்க வைக்கும்.

தங்கும் விடுதிகள்

நவோதயா பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ல் வகுப்பு வரை படிக்க முடியும் இங்கு பயிலும் மாணவ – மாணவியருக்கு தனித்தனியாக தங்கும் வசதியும், ஆசிரியர்களுக்கு தனியாகவும், பள்ளி October Sudesi Magazine 2017-11நிர்வாகிகளுக்கு தனியாக தங்கும் வசதிகளும் செய்து தரப்படுகிறது.

நவோதயா பள்ளி நிர்வாகம்

மத்திய அரசின் அங்கமான மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்குகிறது. ‘‘நவோதயா வித்யாலயா சமிதி’’ எனும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு. இந்த அமைப்பு தான் நவோதயா பள்ளிகளை நாடு முழுவதும் நிர்வகிக்கிறது.
நவோதயா பாடத்திட்டங்களை வடிவமைப்பது தரம் நிர்ணயிப்பது, அங்கீகாரம் வழங்குவது முதலானவற்றை சி.பி.எஸ்.சி எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நிர்ணயிக்கிறது.

நவோதயா பள்ளியில் சேர்வது எப்படி?

நவோதயா பள்ளி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிற்று விக்கிறது. மாணவ/மாணவியர் 6ம் வகுப்பில் சேர ஒரு பரிட்சை எழுத வேண்டும். அதை அவர்கள் தங்கள் தாய்மொழி அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். மாநில பாடதிட்டத்தின் 5ம் வகுப்பில் இருந்து தான் தேர்வுக்கான கேள்விகள் வரும்.October Sudesi Magazine 2017-12 - Copy
ஒவ்வொரு வகுப்பிலும் 80 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளபடுவார்கள். அதில் 75% கிராமபுற மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு மீதமுள்ள இடங்கள் 25% நகர்புற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. 33% பெண் குழந்தைகளுக்கும், 3% மாற்று திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு உண்டு.

கட்டணம் மிக சொற்பம்

உலக தரம் வாய்ந்த கல்வி மற்றும் உள்கட்டமைப்பு கொண்ட நவோதயா பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் மிகவும் சொற்பம். 6,7,8ம் வகுப்புகளுக்கு கட்டணமே கிடையாது.
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே மாதம் 200 ரூபாய் தான் கல்வி கட்டணம். அதுவும் 10 மாதங்கள் தான்!! ஏழை மாணவர்களுக்கு அதுவும் இல்லை.

இந்தி மொழி திணிக்கப்படுமா?

நவோதயா தாய்மொழி கல்வியில் படிக்க அனுமதி அளிக்கிறது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை விருப்பமானவர்கள் தாய் மொழியில் படிக்கலாம். அதன் பிறகு இந்தி அல்லது ஆங்கிலம் மூலம் மட்டுமே பயில முடியும்.
நவோதயா பள்ளிகளில் ஆங்கில மொழியில் கல்வி பயிற்றுவிக்கப்படும். 9ம் வகுப்பு முதல் துணை மொழியாக தமிழ் இருக்கும். வேண்டுபவர்கள் இந்தி மொழியை படிக்கலாம்.
நவோதயா பள்ளிகளின் சாதனைகள்! ஏராளம் தரம் மட்டுமே தாரக மந்திரம்.
இந்த திராவிட கட்சிகள் செய்த துரோகத்தால் நமது தமிழகத்தில் கடந்த 32 வருடங்களாக நவோதயா பள்ளிகள் வரவே இல்லை. ஏழை மக்களால் தரமான கல்வியை பெற முடியவில்லை.

சாட்டையடி

பொது நல வழக்கில் மதுரை உயா நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பில் உடனடியாக தமிழக அரசு நவோதயா பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ‘தமிழ் கற்றல் சட்டப்படி’ பத்தாம் வகுப்பு வரை, தமிழ் பாடமாகவும், 11&12ம் வகுப்புகளில் விருப்ப பாடமாகவும் பயிற்றுவிக்கப்படும் எனும் பிரமாண பத்திரத்தையும் பெற்றபின்னரே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆனாலும் இப்போதும் இந்த திராவிட கட்சிகள் நவோதயா பள்ளிகளை எதிர்க் கின்றன??

திரு ஜான்சன் நாகர்கோயிலை சேர்ந்தவர். இவர் தான் இந்தியாவில் முதன் முதலில் மகாராஷ்டிராவில் அமராவதி என்ற ஊரில்துவங்கப்பட்டOctober Sudesi Magazine 2017-13 - Copy நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபாலாக பணியாற்றி யவர்.
அதனை தொடங்கி வைத்தவர்

திரு ராஜீவ் காந்தி அவர்கள்.
எந்தக் கட்டத்திலும் இந்தி என்ற மொழி ஒரு கட்டாயப்பாடமாக இந்தி பேசாத மாநிலங்களில் படிக்கும் நவோதயா பள்ளி

மாணவர்களுக்கு கிடையாது.M_Karunanidhi-1

 

ஆனால் நவோதயா பள்ளிகளில் இந்தி திணிப்பு நடப்பதாக கடந்த 31 ஆண்டுகளாக தமிழக அரசியல்வாதிகள் பொய் சொல்லி வருகிறார்கள்.

நவோதயா பள்ளியில் படித்த கேரளாவை சேர்ந்த ஒரு மாணவர் பில்கேட்சிடம் வலது கரமாக உள்ளார். மலை ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் என்ற பிரிவில் வரும் மாணவர்கள் கூட நவோதயாவில் பயின்று ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று மத்திய அரசில் சிறந்த பணி ஆற்றி வருகிறார்கள்.
இந்தியாவிலேயே சிறந்த போட்டி தேர்வாக கருதப் படும் மதிப்பு மிக்க ஐஐடி மற்றும் ஐஐஎம் (IIT & IAM) ஆகியவற்றுக்கு நடத்தப்படும் நுழைவு தேர்வுகளில் ( JEE & CAT ) எழுபது சதவீத இடங்களை நவோதயா வித்யாலயா மாணவர்கள் தான் கைப்பற்றுகின்றனர்.
பாட நூல்கள், உணவு, தங்குமிடம், சீருடை எல்லாமே இலவசம். கல்விக்கட்டணம் பெயரளவுக்குத் தான். அந்த கல்வி கட்டணம் கூட எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு கிடையாது.
நீட் தேர்வில் கூட 83 சதவீத இடங்களை நவோதயா வித்யாலயா மாணவர்கள் தான் வென்றுள்ளனர்.
கேந்திரீய வித்யாலயாக்களில் வசதி உள்ளவர்கள் மற்றும் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகள் மட்டுமே படிக்க இயலும். மேலும் கேந்திரீய வித்யாலயாக்களில் மாவட்ட ஆட்சித்தலைவர், எம்பி, கேந்திரீய வித்யாலயாவின் முதல்வர் ஆகியோருக்கு கோட்டா உண்டு. ஆனால் நவோதயா வித்யாலயாவுக்கு நடைபெறும் நுழைவு தேர்வில் யாருக்கும் எவ்வித கோட்டா வும் இல்லை. முற்றிலும் ஏழை மாணவர்களே பயன் பெறுவார்கள்.
இத்தகைய நவோதயா வித்யாலயாக் களை தமிழகம் பெறமுடியாதபடி, கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 1989 ஆம் ஆண்டு தடுத்தார். இப்போது மதுரை உயர்நீதி மன்றக் கிளை போட்டுள்ள உத்தரவால் தமிழகத்துக்கு நல்ல காலம் பிறந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இந்த நவோதயா அமல் பற்றி வழக்கு தொடர்ந்த குமரி மகா சபா அமைப்புக்கும் அதன் பின்னணியில் வழிகாட்டிய திரு ஜான்சன் அவர்களுக்கும் தமிழக ஏழை மக்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டு உள்ளனர்.
நவோதயாவில் ஏழை மாணவர்களுக்கு மட்டும் தான் அட்மிஷன் என்பதால் தான் தமிழக அரசியல்வாதிகள் இதனை எதிர்க்கிறார்கள் போலும்…

 

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *