நள்ளிரவில் மீண்டும் ஒரு பொருளாதார நள்ளிரவில் மீண்டும் ஒரு பொருளாதார
நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற் கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட... நள்ளிரவில் மீண்டும் ஒரு பொருளாதார

நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற் கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

 

இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.

மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும்.

மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும்.

அதிக வரிச் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் பொருள் உற்பத்தி மதிப்பை அடிப்படை யாகக் கொண்டு வரி விதிப்ப தில்லை. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத் தியை (ஜிடிபி) மறைமுகமாக பாதிக்கிறது. வரி ஏய்ப்பு, குறைந்த வரி ஆகியவற்றை தவிர்ப்பதோடு தொழில் புரிவதை எளிதாக்கும்.

2011-ம் ஆண்டு வடிவமைக் கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா வரை வில் கச்சா எண்ணெய், பெட் ரோல், டீசல், எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் மதுபானங் கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.

ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜிஎஸ்டி சமரச தீர்வு ஆணையம் ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இப்புதிய வரி விதிப்பு முறையால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து இது ஆராயும். ஆனால் 2014-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் ஆணையத்துக்கு இத்தகைய அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது.

2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் மது பான வகைகள் ஜிஎஸ்டி பட்டியலில் இடம்பெறவில்லை.

மாநிலங்கள் சில முக்கிய பொருள்கள் மீது வரி விதிப்பைக் குறைக்கலாம் என 2011-ல் அளிக் கப்பட்ட விதி 2014-ல் மேற்கொள் ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலு மாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவில் எந்த உணவுப் பொருளும் இடம்பெற முடியாது.

அதேபோல பஞ்சாயத்து மற்றும் முனிசிபாலிட்டி களில் பொருள் நுழைவு வரி விதிக்கலாம் என்ற விதிமுறையும் 2014 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.
ஒரே நாடு! ஒரே வரி! என்பதே இன்று புது முழக்கம். பிரதமர் மோடி ஜி.எஸ்.டி வரியை துவக்கி பேசுகையில் இது தேசத்தின் நலனுக் கான ஒரு துவக்கgst 3ம் என்றே குறிப்பிட்டார்.சாமான்யர்களின் அன்றாட செலவுகளை இது பாதிக்காது. அத்தியாவசிய பொருள்களின் மேல் அதிக வரி இல்லை என்பதே அடிப்படை கொள்கை. உண்மையில் பல உற்பத்தி பொருள்களின் விலை குறையும் என்பதே நற்செய்தி ‘‘ஜி.எஸ்.டி துவக்கம் என்பது நள்ளிரவில் மீண்டும் ஒரு பொருளாதார சுதந்திரம்’’ என்று பிரதமர் உரையாற்றினார்.
ஜி.எஸ்.டி என்றால் என்ன?

சரக்கு மற்றும் சேவை வரி என்பதன் சுருக்கமே ஜி.எஸ்.டி.
1954ம் ஆண்டில் முதன்முதலாக பிரான்ஸ் நாட்டின் தான் இந்த ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்தது. பிறகு அதனை தொடர்ந்து பல நாடுகள் பின்பற்றி இன்று 140 உலக நாடுகள் ஜி.எஸ்.டி வரியை அமுல் படுத்தியுள்ளன.

நேரடி மற்றும் மறைவு வரி
நேரடி வரி என்றால் வருமானவரி, சொத்துவரி என்று கட்டுகிறோம். ஒரு பொருளை வாங்கும் போது இப்போதும் நாம் பல வகையான வரிகளை தெரியாமலே கட்டுகிறோம். ஒரு பில்லை எடுத்து பார்த்தால், தொகைக்கு பின்னர் நாலைந்து வரிகள் இருக்கும். சேவை சர்வீஸ் வரி, வேட் வரி, விற்பனை வரி, சொகுசு சரி, என இந்த பட்டியலின் நீளம் மொத்தம் 17!! ஆம் அன்பர்களே நாம் இதுவரை 17 விதமான வரிகளை செலுத்தி வருகிறோம்.
ஜூலை 1 முதல் 17 வரிகளையும் நீக்கி விட்டு, ஒற்றை வரியாக ஜி.எஸ்.டி விளங்குகிறது.
இதனால் இனி குழப்பங்களுக்கு ஒரு பெரும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
ஒரே நாடு! ஒரே வரி! என்பதே இனி உற்பத்தியாளர் களுக்கும், நுகர்வோருக்கும் உற்சாகம் தரும் விஷய மாகும்.

வரி மேல் வரி கிடையாது
உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளுக்கு விதிக்கப்படும் வரி, விநியோகஸ்தர்களிடம் செல்லும் போது, வரியுடன் சேர்த்தே மீண்டும் வரி நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக சைக்கிள் உற்பத்தியாளர் ஒருவர் 100 ரூபாய்க்கு உற்பத்தி செய்து 10 வரி செலுத்தினால் சைக்கிளின் விலை, உற்பத்தி இடத்தில் 110% ரூபாய்.gst 4
மொத்த விநியோகஸ்தர் ஒருவர் வாங்கி 30 ரூபாய் அதிகரித்து, 140ரூபாய்க்கு விற்றால், அவர் இந்த ஜி.எஸ்.டி முறையில் 140-110=30 ரூபாய்க்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும். சைக்கிளின் விலை.. 110+3=ரூ.113 மட்டுமே.
பழைய முறையில் மொத்தம் 140+10% என்று கட்ட வேண்டி இருந்திருக்கும். சைக்கிளின் விலை 141.40% என்று ஆகியிருக்கும்.
சில்லறை வியாபாரிகள் எடுத்து சென்று 20 ரூபாய் விலை ஏற்றி, அதற்கு வரி கட்டி, வாடிக்கையாளர் களுக்கு விற்கும் போது, புதிய முறையால் உற்பத்தி விலை குறையும்.
வரிமேல் வரி கிடையாது. இதனால் வெகு விரைவில் உற்பத்தி விலை குறைவதே நன்மை.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையின் மூலம்
இந்திய வர்த்தகத் துறை மிகப்பெரும் வளர்ச்சியடையும்!
IJK – நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு

இந்தியா சுதந்திரமடைந்தது முதல் சுமார் 70 ஆண்டுகளாக, ஒரே பொருளுக்கு பல்வேறு கட்டங்களாக வரிவிதிப்பு முறை நடைமுறையில் இருந்தது. இதேபோல், மாநிலத்திற்கு மாநிலம் வரிவிதிப்பு முறையில் ஏற்றத் தாழ்வுகளும் இருந்தது. இதனால் பொருட்களின் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டிருந்தது. மேலும், உற்பத்தி வரி – சேவை வரி – விற்பனை வரி – சுங்க வரி – கலால் வரி – வாட் வரி என TR Pachamuthu, Founder and Chancellor, SRM Universityபல்வேறு வரிவிதிப்புகளால் வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளை பராமரிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை அமல்படுத்தினால் அது வியாபாரிகளுக்கு மிக எளிதாக இருக்கும் எனவும், மாநிலத்திற்கு மாநிலம் பொருட்களின் விலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கிவிடும் எனவும் பல பொருளாதார நிபுணர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில், பொருள் மற்றும் சேவை வரி திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்காக 17 முறை கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில், 1200 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியை நிர்ணயம் செய்தது. இந்த பொருட்கள் அனைத்தும் முறையே 5,12,18,28 ஆகிய சதவிகிதங்களில் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான வர்த்தகர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை பராமரிப்பதில் எளிமையான நடைமுறையினை கையாளுவதற்கு ஏற்றவாறு இவைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நேற்று நள்ளிரவு உரை யாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், ‘500 மண்டலங் களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே தேசமாக வல்லபாய் பட்டேல் அவர்கள் ஒன்றிணைத்தார். அந்த வரலாற்று சாதனைக்கு ஈடாக பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடக்கும் வரிவிதிப்பு முறையை நாம் ஒன்றிணைத்திருக்கிறோம்’ என்று பேசியதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இதுதான் இந்திய வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறையின் யதார்த்த நிலை. அவ்வகையில், இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையின் மூலம் இந்திய வர்த்தகத் துறை, எதிர்காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சியடையும் என்கின்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள பொருள் மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்பதுடன், இடைவிடா முயற்சியின் மூலம் இதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அமைப்புச்சாரா நிறுவனங்கள்!

நமது நாட்டு தொழில் துறையில் ஒரு சரிபாதி, ‘‘அமைப்பு சாரா தொழில் துறையாகவே’’ இருந்து வந்துள்ளது. இந்த புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம், இந்த அமைப்பு சாரா தொழில் துறைகள், அரசின் வரி கட்டமைப்பிற்குள் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது தான். இன்னும் எவ்வளவு காலம் தான் இந்த வியாபாரிகள் நவீன முறையை பின்பற்றாமல் இருக்க முடியும் என்பதே என் வாதம்.
அனைவரின் எதிர்பார்ப்பும் ஒன்று தான். இந்த புதிய வரியின் தாக்கம், குறைவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வரி விதிமுறைகளை அரசிடம் பதிவு செய்யும் முறை எளிமையாக இருக்க வேண்டும் என்பதே.chola nachiyar
இந்த அமைப்பு சாரா தொழில் துறையினருக்கு நவீன வர்த்தக தேர்ச்சி குறைவாக இருப்பதால் ஜி.எஸ்.டி வரி விதிமுறைகளை முறையாக பதிவு செய்ய, அவர்கள் வல்லுநர்களை நாட வேண்டி வரும். அதில் சற்று செலவும் சிரமும் இருக்கும்.
இந்த வரி வளைவிற்குள் அனை வரும் வந்தே ஆக வேண்டிய சூழ் நிலையை அரசு உருவாக்கி விட்டது! உலக போக்கு கூட அப்படித்தான் உள்ளது.
அரசிற்க்கு ஆதாயம் உண்டு. அந்த அதிகபடியான வருமானத்தை, உள்கட்டமைப்பு, மருத்துவ வசதிகள் தரமான கல்வி என்று செலவிட்டால் நிச்சயம் அனைவரும் இந்த ஜி.எஸ்.டி வரி விதித்தலை வரவேற்பார்கள்.
இந்த ஜி.எஸ்.டியில் பெட்ரோல் பொருட்களை சேர்க்கவில்லை. வெகு விரைவில் சேர்க்கபட வேண்டும் என்பதே என் விருப்பம். ஏனெனில் அதனால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும். மொத்தத்தில் ஜி.எஸ்.டியை மக்கள் வரவேற்பார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமம் தான் என்பதை ஒத்து கொள்கிறேன். அரசு உதவும் என்றே நம்புறேன்.
          – சோழ நாச்சியார், தலைவர், தமிழ் வர்த்தக சங்கம்.
சாமானியர்களுக்கு ஜிஎஸ்டி-யினால் என்ன பயன்?

80 % பொருட்களின் வரி 18%க்குள்!
நேர்மையாக வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு லாபம்!
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராது, சிலவற்றின் விலை குறையும்!
உணவு, பால், தானியங்கள், காய்கறி, சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளுக்கு பூரண வரி விலக்கு! (சாமானிய மக்களுக்கு லாபம்)
16 குறு வரிகளுக்கு பதிலாக ஒரே வரி! (லஞ்சம் குறையும்)
10 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்தால் வாட் (க்ஷிகிஜி) வரி இருந்தது. இப்போது 20 லட்சம் வரை வரி இல்லை! (சிறு வியாபாரிகள் ஊக்குவிக்கப் படுகின்றனர்)meganathan
சாதாரண மனிதனுக்கு லாபம், லஞ்சம் குறையும், செக்போஸ்ட் தொல்லை இல்லை, வரி ஏய்ப்பு குறையும், சிறு மற்றும் குறு வியாபாரிகள் ஊக்கம் பெறுவர் !
இதை வரவேற்பதும், எதிர்ப்பதும் அவரவர் நோக்கத்தைப் பொருத்தது!
                                  – மேகநாதன், இயக்குநர், மெகன்ஸ் நிதி நிறுவனம்,

 

அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரி வர வேண்டும்!
ஜி.எஸ்.டியால் அனைவரும் ஒரு குடையின் கீழ் வருகிறோம். அப்படி அனை வரும் வரி துறை யினரின் கட்டிற்குள் வர வேண்டும் என்பதே ஒவ்வொரு அரசின் கடமையும் கூட. உலகில் 140 நாடுகள் இந்த சட்டத்தை அமுல் படுத்தியுள்ளன.
நமது நாட்டில் இப்போது தான் இந்த ஜி.எஸ்.டி அமுலுக்கு வந்துள்ளபடியாலும், பல்வேறு வகைப்பட்ட அமைப்பு சாரா தொழில் துறைகளை கருத்தில் கொண்டும், வரிகளை விதிக்கும் உரிமைகளை பெற்றுள்ள மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகவும், 0%,5%,12%,18%,28%, என பல நிலைகளில் வரியை தீர்மானித்துள்ளது அரசு.
மத்திய நிதி அமைச்சர் திட்டத்தை துவக்கி பேசுகையில், ‘‘அரசின் நோக்கமே, ஒரு காலகட்டத்தில், நாடு முழுவதும் ஒரே வரி மட்டுமே இருக்க வேண்டும். அந்த சதவிகிதம் அனைத்து பொருட்களுக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதே’’ என்றுள்ளார்.suresh
இதில் ஒரு சங்கடம் என்னவென்றால், உடனடியாக அனைத்து அமைப்பு சாரா நிறுவனங்களும், ஜி.எஸ்.டி வரி விதிமுறைக்கு மாற வேண்டும். அதற்கான நவீன கட்டமைப்பும் தேவைபடும்.
ஒட்டல் சாப்பாட்டு பில்லில் 15% விற்பனை வரி இல்லை. இன்று முதல் 18% ஜி.எஸ்.டி என்றே கூறுகிறார்கள்.
ஆனால் உண்மையில், அவர்கள் உணவுக்கான மளிகை பொருள்களை வாங்கும் போது கட்டவேண்டிய 5% வரியை இந்த ஜி.எஸ்.டி வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.
ஆக, 5%+15%=20% கட்டிய ஒட்டல் முதலாளிகள் இப்போது, 18%-5%=13% மட்டுமே வரி கட்டுகிறார்கள்.
ஆனால் இதற்கு இவர்கள் முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தான் மளிகை சாமான்களை வாங்க வேண்டும். அப்போது தான் இந்த ஜி.எஸ்.டி தொகையிலிருந்து, மளிகை சாமான்களுக்கான ஜி.எஸ்.டியை குறைக்க முடியும்.
எனவே பெரும்பான்மையான நிறுவனங்கள் கூட, இனி வரி விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இயங்க முடியும். இல்லையென்றால் ஜி.எஸ்.டி விதிகளுக்கு உட்பட்ட நிறுவனங்களுடன் அவர்களால் வர்த்தகம் செய்ய இயலாது.
இல்லையென்றால் மற்ற நிறுவனங்கள் இவற்றோடு வர்த்தகம் செய்ய இயலாது.
இந்தியா முழுவதும் வர்த்தகத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதே அரசின் கொள்கை. இந்த ஜி.எஸ்.டி மூலமாக அதனை அடைய முடியும். நாடும் பத்தாண்டுகளாக இதற்கு தானே முயற்சித்து வருகிநோம். இன்னும் சில காலம் மறைமுகமாக செயல்படும் சிறு நிறுவனங்கள் தொடரலாம். ஆனால் அவற்றின் வளர்ச்சி கேள்விகுறி தான்.
ஜி.எஸ்.டி விதிமுறைகளை முறையாக பின்பற்ற, எளிய வழிகளை புகுத்தி, வியாபாரிகளின் குழப்பத்தை தீர்க்க வர்த்தக ஆரோசனை மையங்களை முடுக்கி விடவேண்டும்.

                      – ரி.சுரேஷ்  (President , Association of National Exchanges Members of India)

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையே ஜி.எஸ்.டி

ஆடிட்டர் அறக்கட்டளை தினத்தன்று பேசிய பாரத பிரதமர் ‘‘உங்களின் ஒவ்வொரு கையெத்தும் நமது அரசின் இறையாண்மையை உறுதிபடுத்தும் ஒரு செங்கல். எனவே உங்களது வாடிக்கையாளர்களை முறையாக வழி நடத்தி, தேசத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்க வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு உண்டு’’ என்று பேசியுள்ளார்.
சுமார் 3 லட்சம் போலி நிறுவனங்கள் கருப்பு பண முதலைகளின் ஏவலுக்கு துணை போகின்றன. அவை அரசின் கண்காணிப்பிற்க்கு வந்துள்ளன. sivakumar
37,000 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இனி ஸ்விஸ் வங்கியில் பணம் கொண்டு சேர்த்தாலும், அது மத்திய அரசின் கவனத்திற்கு உடனடியாக வர உள்ளது.
2013ம் ஆண்டை வைத்து அளவு பார்த் தோமானால், 2016ம் ஆண்டில், ஸ்விஸ் வங்கியில் போடப்படும் இந்தியர்களின் கருப்பு பணம் 46% குறைந்துள்ளதாம்.
கருப்பு பணத்திற்கு எதிரான பிரதமர் மோடியின் இந்த அறப்போராட்டத்தின் ஒரு அங்கம் தான் இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு.
பெரும்பான்மை நிறுவனங்கள் அரசின் வரி வட்டத்திற்குள் வந்தால் தான், மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருமானம் கிடைக்கும்.
அரசுக்கு வருமானம் கிடைத்தால் மட்டுமே, பாமர மக்களுக்கு நலமான வாழ்வு கிட்டும்.
இன்றைய தேதியில் 37 லட்சம் பேர்கள் மட்டுமே தாங்கள் 10 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறோம் என்று கணக்கு காட்டியுள்ளனர். என்ன கொடுமை இது?? பாமர மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா இது!! ஜி.எஸ்.டி யை முழுமனதுடன் வரவேற்கிறேன்.
                                           – கோவை சிவகுமார்  ( சமூக ஆர்வலர்)

29 சோதனை சாவடிகள் மூடல்!
ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒரே வரி தான். சரக்கு ஏற்றப்படும் இடத்திலேயே அதற்கான மொத்தவரி ‘ஆன்லைனில்’ செலுத்தப்பட்டு விடுகிறது. மாநில எல்லைகளில், வணிக வரித்துறை சோதனை சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
முன்னர் ஒவ்வொரு லாரியும், சரக்குகளை ஏற்றி வரும்போது, வணிக வரிதுறை சோதனை சாவடியில் ஒரு மணி நேரம் நின்று அனுமதி பெற்று தான் நகர முடியும். மேலும் இதற்கு முன், பிற மாநிலங்களில் இருந்து, பொருட்கள் வாங்கி வரும்போது, அந்த மாநிலத்திற்கான வரியை செலுத்த வேண்டும். சொந்த மாநிலத்திற்குள் நுழையும் போதும், வரி செலுத்த வேண்டும். தற்போது அமல்படுத்தப்பட்ட, ஜி.எஸ்.டி.,யால் நாடு முழுவதும் ஒரே வரி என்பதால், வரித் தொகை குறைவதுடன், ஒவ்வொரு வணிக வரி அலுவலகத்திற்குள் சென்று முத்திரையிட்டு, அதிகாரி அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்க அவசியம் இல்லை.
இப்போது சரக்கு லாரிகளுக்கு ஒரே மகிழ்ச்சி. ஒரு நாளைக்கு 280 கி.மி தான் செல்ல முடிந்தது. இப்போது சோதனை சாவடிகளில் நிற்க வேண்டாம் என்பதால், ஒரு நாளில் சுமார் 800 கி.மி வரை சரக்கு ஏற்றி செல்லலாம என்றனர் இதனால் வெளிப்படைத் தன்மையும் ஏற்பட்டுள்ளது என்பதும் ஆறுதல்.
ஜி.எஸ்.டி யின் வழி முறைகளை உணர்ந்து செயல்பட்டால் மிகவும் நன்மை!

முன்பு மாதக் கணக்குகளை ஆன்லைனில் சமர்பித்து பின் அதன் காப்பியை நேரில் சென்று வரி அலுவலகத்தில் வழங்குவார்கள். ஜி.எஸ்.டி அமலுக்கும் பின் விற்பனை கணக்கை ஆண்லைனில் மட்டும் சமர்பித்தால் போதும்.
மேலும் தாங்கள் தாக்கல் செய்த விற்பனை கணக்கு சரி பார்த்து உங்களுக்கு ரேட்டிங் வழங்கபடும்.
இந்த ரேட்டிங்கை ஒவ்வொருவரும் தங்கள் ஜி.எஸ்.டி ஆன்லைனில் லாகின் செய்து பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற எதாவது ஒரு வண்ணத்தில் பார்க்கலாம்.
சிகப்பு நிற ரேட்டிங் இருந்தால் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து ஆய்வுக்காக விரைவில் அணுகுவார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். சோதனைக்கு வருபவர்கள் நாட்டின் எந்த மாநிலத்தில் இருந்தும் மேற்கொள்ளலாம்.sundar
உதாரணமாக மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அஸ்ஸாமிலிருந்து கூட வந்து ஆய்வு செய்வார்கள். அரசு செப்டம்பர் வரை வழங்கியுள்ள நேரமானது வியாபாரிகள் தங்களை தயார் செய்து கொள்வதற்காகவே என்பதை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மக்கள் இதை எளிதில் புரிந்து செயல்பட நாங்கள் ஒரு ஜி.எஸ்.டி அப்ளிகேஷன் சாஃப்டுவேர் வைத்துள்ளோம். இதற்காக பயிற்சியும் வழங்கி வருகிறோம். மக்கள் எங்களை அணுகி பயன் பெறலாம்.
சுந்தர் ராஜன்

XATTAX (PLAT FORM FOR GST)  CELL :98403 00186

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *