தனிக்கட்சியை தீபா ஆரம்பித்தது ஏன்? தனிக்கட்சியை தீபா ஆரம்பித்தது ஏன்?
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி ஒரே அணியில் சசிகலாவின் பின்னால் நின்றதை விரும்பாத தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு ஆதரவு வழங்கினர். அதன் பின்னர் சசிகலாவுடன் இருந்த ஓபிஎஸ் போர்க்கொடி... தனிக்கட்சியை தீபா ஆரம்பித்தது ஏன்?

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி ஒரே அணியில் சசிகலாவின் பின்னால் நின்றதை விரும்பாத தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு ஆதரவு வழங்கினர். அதன் பின்னர் சசிகலாவுடன் இருந்த ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கி தனியாக வந்த பின்னர் பெரும்பாலான தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் வந்தனர்.
சசிகலாவுக்கு எதிராக இயங்கி வரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஒன்றாக இணைந்து சசிகலாவை எதிர்ப்பார்கள் என்று மக்கள் நினைத்திருந்தனர்.
ஜெயலலிதாவின் சமாதியில் இருவரும் சந்தித்து பேசி, ‘‘ஒன்றாக இணைந்து செயல்படுவோம்’’ என்று கூட்டாக பேட்டியும் அளித்தனர். பின்னர் ஓபிஎஸ் தனது வீட்டிற்கு தீபாவை அழைத்து சென்று ஆரத்தி எடுத்து வரவேற்று நல்ல மரியாதை அளித்தார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை உருவாக்கி தனது அரசியல் பிரவேசத்தை தனி ஆவர்த்தனமாக ஆரம்பித்தார் தீபா. அன்றைய தினமே தனது பேரில் ஆரம்பித்த அந்த பேரவையின் கொடியையும் அறிமுகம் செய்தார் தீபா.

தீபாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், ஓபிஎஸ் அணியிடம் தான் வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லையாம்.
தீபா, ஓபிஎஸ் அணியிடம் இரண்டு கோரிக்கைகள் வைத்துள்ளார். ஓபிஎஸ் அணியில் தாம் இணைய வேண்டுமானால் தம்மை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும். அதேபோல் அதிமுக பொதுச்செயலர் பதவியும் தமக்கு தரப்பட வேண்டும் என்று தீபா கேட்டதாக அதிமுகவின் ஓபிஎஸ் அணி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அரசியலில் இப்போது தான் குதித்துள்ள தீபாவின் இந்த ஆசை ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இதனால் தீபாவின் ஆசைக்கு தடை போட்டதாகவும், அதனால் தான் தீபா தனியாக சென்று தனது பெயரிலேயே பேரவையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *