சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? நம்பி நாராயணன் வரலாற்றுத் தொடர் சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? நம்பி நாராயணன் வரலாற்றுத் தொடர்
தண்டி யாத்திரையும்  உப்பு சத்தியாகிரஹமும்! சுதந்திரப் போராட்ட வரலாறு தெரிந்தவர்களுக்கு பலருக்கும் தெரியாத பெயர் வயிரப்பன். தேச பக்தர் வயிரப்பன் சுதந்திர வேட்கையால் ஈர்க்கப் பட்ட 76 வயது இளைஞரான அவர் தியாகிகளுக்கும்... சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? நம்பி நாராயணன் வரலாற்றுத் தொடர்

தண்டி யாத்திரையும்  உப்பு சத்தியாகிரஹமும்!

சுதந்திரப் போராட்ட வரலாறு தெரிந்தவர்களுக்கு பலருக்கும் தெரியாத பெயர் வயிரப்பன்.
Dandi-March

தேச பக்தர் வயிரப்பன்

சுதந்திர வேட்கையால் ஈர்க்கப் பட்ட 76 வயது இளைஞரான அவர் தியாகிகளுக்கும் தேசியவாதிகளுக்கு மட்டுமே சவரம் செய்வது என்றும் ஆங்கிலேயர்களுக்கும், போலீசாருக்கும் அவர்களுக்கு துணை நிற்கும் இந்தியர்களுக்கும் சவரம் செய்வதில்லை எனும் உறுதி எடுத்து செயலாற்றி வந்தார்.

தவறு செய்து விட்டேனே…

 ஒருமுறை வரிசையில் வந்தமர்ந்த ஒருவருக்கு சவரம் செய்யத் தொடங்கிய பின்னர் அவர் ஒரு போலீஸ்காரர் எனும் தகவல் வயிரப்பனுக்குத் தெரியவருகிறது. அவ்வளவுதான்,சவரக் கத்தியை அப்படியே போட்டு விட்டு சவரத்தைப் பாதியில் விட்டுச் செல்கிறார்.போலீசாரின் எந்த மிரட்டலும் உருட்டலும் அவரை ஏதும் செய்யவில்லை. காவல் அலுவலகத்தில் இருந்து அவரை அழைத்து விசாரிக் கும்போது. ‘என் கையை வெட்டினாலும் போலீசாருக்கு வேலை செய்யமாட்டேன்’ என வயிரப்பன் உறுதியுடன் தன் எதிர்ப்பை தெரிவித்துவிட்டார்.

 6 மாத காவல் தண்டனை!

விளைவு,   ராஜாஜி, வேதரத்தினம் பிள்ளைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உப்புசத்தியாகிரக  போராட்ட காலத்தில் ஆறு மாத கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கும் பேறு வயிரப்பனுக்கும் வழங்கப்பட்டது.

உப்பு சத்தியாகிரகம்

 காந்திஜியின் இந்த உப்பு சத்தியாகிரக போராட்டம் உலக நாடுகளில், அதிக தாக்கத்தை ஏற்படுத்திய 10 போராட்டங்களில் ஒன்று என அமெரிக்காவின், ‘‘டைம்ஸ்’’ பத்திரிகை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 2011ல் நடத்தப்பட்ட இந்த ஆய்வு இந்திய சுதந்திரப் போராட் டத்தில்  காந்திஜியின் சத்தியா கிரகம் எப்பேர்ப்பட்ட தாக் கத்தை ஏற்படுத்தியது என தெளிவுபடக் கூறியிருக்கிறது. உப்பு சத்தியா கிரகத் தில் ஈடுபட காந்திஜியால் நடத்தப்பட்ட
யாத்திரை ‘‘தண்டி யாத்திரை’’ எனப் புகழ் பெற்றது.

தண்டி யாத்திரை

1930 மார்ச்சில்,313178575 குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகில் உள்ள, சபர்மதி ஆசிரமத்திலிருந்து, சிறிய கிராமமான தண்டிக்கு மகாத்மா காந்தி உப்பு சத்தியா கிரகம் மேற்கொண்டார். இந்த வன்முறையற்ற ஆர்ப் பாட்டத்தின் போது, 80 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்’ என்பது  மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
            நெடும் பயணம்

1930-ஆம் ஆ20070907505607602ண்டு மார்ச் 12-ஆம் தேதி குஜராத்தின் தண்டியில், ஆங்கிலேயரின் எதிர்ப்பையும் தாண்டி உப்பு எடுப்பதற்காக இந்த நடைபயணம் துவங்கியது. சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு மகாத்மா காந்தி வழிநடத்திய இந்தப் பயணம் 23 நாட்கள் நீடித்தது. 4 மாவட்டங்கள் மற்றும் 48 கிராமங்கள் வழியே கடந்து சென்றது இப்பயணம்.

இந்த பயணத்தின்போது காந்தியின் அறைகூவலுக்கு செவி மடுத்து ஆங்கிலேய அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் பணிகளைத் துறந்து போராட்டக் களத்தில் ஐக்கிய
மாகினர். ஒரு தலைவரின் அறைகூவல் எந்த அளவிற்கு மக்களை ஊக்குவிக்கும் என்பதற்கு மற்றொரு சான்று அரசு வேலையை துறந்து வந்தவர்களின் எண்ணிக்கை.
சத்தியாகிரக நடைபயணத்தில் காந்திஜியுடன் பங்கேற்ற 78 சத்தியாகிரகிகளில் இரண்டு இஸ்லாமியரும் ஒரு கிறிஸ்தவரும் இடம் பெற்றிருந்தனர். காந்திஜியின் மகன் மணிலால், பேரன் காந்திலால் உட்பட  காந்திஜியின் குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

பிரிட்டிஷ் பார்வை

 காந்திஜியின் இந்த நடைப்பயணத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் முதலில் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டது. ஏன், நேரு உட்பட கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் பலரும் கூட இம்முடிவை முதலில் ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் செயற்குழுவோ இத் தீர் மானத்தை நிராகரித்தது.
பின்னர் வேறு வழி யின்றி காங்கிரஸ் கட்சி இதற்கு இசைந்தது. முதல் நாளே அகமாதாபத்தில் இருந்து சபர்மதி பிரியும் சாலையில் 2
கிமீ தூரம் சுமார் 1,00,000 கூடியிருந்து வரவேற்பளித்தது பிரிட்டிஷாருக்கு அதிர்ச்சி அளித்தது. காங்கிரசுக்கோ எழுச்சி தந்தது.

வரவேற்பு

 ஒவ்வொரு கிராமத்திலும் நடைப் பயணம்  நுழைந்தபோது, நடைப்பயணத்தை மத்தளம் மற்றும் கைத்தாளமிட்டு மக்கள் வரவேற்றனர்.  நடைப்பயணத்தின் போது அறப்போராளிகள் ‘‘ரகுபதி ராகவ ராஜா ராம்’’ என்ற பாடலைப் பாடிக்கொண்டே நடந்தனர். பயணம் செல்லச் செல்ல ஒவ்வொரு நாளும், நடைப்பயணத்தில் இணைந்த மக்கள் எண்ணிக்கைப் பெருகியது.
2122201065-salt-march

அகிம்சா வழியில்

 நடைப்பயணத்திற்காக மட்டும், காந்தி கடுமையான ஒழுக்கத்தை விரும்பினார். மேலும் சத்தியாக் கிரகம் மற்றும் அகிம்சையைக் கடைபிடிக்கவும் விரும் பினார். அதன்காரணமாக அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நடை பயணத் திற்காகத் தேர்வு செய்வதை அதிகம் தவிர்த்தார்.
மாறாக,  அவரது சொந்த ஆசிரமத்தில் குடியிருந்தவர் களை, காந்தியின் கடுமையான ஒழுக்க தரநிலைகளில் பயிற்சிப் பெற்றிருந்தவர்களைத் தேர்ந் தெடுத்தார்.  நடைப்பயணத்தின் வழி, ஒவ்வொரு நாளின் மாலையில் பயணம் நிற்கும் இடம், ஆகியவை கடந்த காலத் தொடர்புகள் மற்றும் நேரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்டது.
காந்தி சாரணியர்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் நடைப் பயணத்திற்கும் முன்பே அனுப்பினார். ஆதலால் அவர் தனது ஒவ்வொரு ஓய்விடத்திலும் உள்ளூர் மக்களின் தேவைகளுக்கேற்ப திட்டமிட முடிந்தது.

ராஜாஜி

  இந்தியா முழுவதும் பல்வேறு இடங்iகளில் இந்த யாத்திரை நடந்தது. மேற்குக் கடற்கரையில் இந்த யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருந்த போது கிழக்குக் கடற்கரையில் ராஜாஜி தலைமையில்  திருச்சியில் இருந்து வேதாரண்யத்துக்கு நடைப்பயணம் துவக்கிஇருந்தார் மூதறிஞர் ராஜாஜி.

சவுக்கடி

  வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தின் போது அன்றைய தஞ்சாவூர் கலெக்டர் தொர்ன் மிக கடுமையான முறையில் அதனை எதிர்கொண்டார். சத்தியாகிரகிகளை குதிரை படை வீரர்களைக் கொண்டு புளியம் விளாரால் கொண்டு அடித்து விரட்ட முற்பட்டார்.
சத்தியகிரகிகளுக்கோ ஒவ்வோர் அடியும் ஒரு புது உத்வேகத்தைக் கொடுத்தது.  கடற்கரையோரம் கடுமை யான காவல் போடப்பட்டது. எப்படியேனும் இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசு நிர்வாகம் பெரும் முயற்சி செய்தது.
அனைத்துவிதமான கட்டுகாவலையும் மீறி மறைவான ஓரிடத்தில் இருந்து திடீரென்று தோன்றிய ராஜாஜி, கையில் உப்பை எடுத்து வந்தே மாதரம் என உரக்க கூவினார்.  காவலுக்கு நின்ற இந்திய போலீஸார் செய்வதறியாது திகைத்தனர்.  தோல்வி முகத்தில் அவர்களுக்கு வியர்வை கொட்டியது. அவர்களை தானாக ஆசுவாசபடுத்திய ராஜாஜி, உயரதிகாரியை அழைத்து வந்து தன்னை கைது செய்யும் வரை காத்திருப்பதாக உறுதி அளித்தார். அதன்படியே காத் திருந்து கைதானார்.
8762627527_27cc2bd2bc_o (1)

உறுதி மொழி

 ஏப்ரல் 5 ல் தண்டி கடற்கரைக்கு வந்து சேர்ந்த காந்திஜி,  ஒரு சிறிய பிரார்த்தனைக்குப் பிறகு,  கையளவு உப்பை எடுத்து உயர்த்திப் பிடித்து, ‘’ இதனுடன், நான் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அசைக்கிறேன்”, என்று அறிவித்தார். பிறகு அவ்வுப்பைக் கடல் நீரில் கொதிக்க வைத்து, சட்டத்தை மீறி உப்பெடுத்தார். அவர் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் அதேபோல உப்பினைக் கடற்கரை முழுதும் “எங்கு வசதியாக இருக்கிறதோ அங்கு” தயாரிக்கத் துவங்குமாறும், மேலும் கிராமவாசிகளிடம் சட்டத்தை மீறி ஆனால் தேவையான உப்பெடுத்துப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லு மாறும் அறைகூவல் விடுத்தார்.

 சாத்தியமா?

 சாதரண உப்பைக் கையில் எடுத்துக் கொண்டு பலம் பொருந்திய ஆங்கிலேய அரசை எதிர்ப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு மிகவும் சாத்தியம் என்று தண்டி யாத்திரையின் வெற்றி உரக்கத் 1000509261001_2033463483001_Mahatma-Gandhi-A-Legacy-of-Peaceதெரிவித்தது.
 உப்பு சத்தியாகிரகத்தின் பின்னணி எளிதில் உணரக்கூடியது.
 அன்று இருந்த இந்திய கிராமங்கள் அனைத்தும் தன்னிறைவு பெற்றவை. அவற் றுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தையும் கிராம மக்களே உற்பத்தி  செய்து விடுவார்கள். வெளியில் இருந்து வாங்கும் பேச்சே கிடையாது. ஆனால் உப்பு அப்படிக் கிடையாது. வடஇந்திய மக்கள் முழுவதுமே குஜராத்தில் இருந்து உற்பத்தி ஆகும் உப்பை நம்பியே இருந்திருக்கின்றனர். இந்திய சீதோஷ்ண நிலையும் இந்தியர்களின் உடல் உழைப்பு மிகுந்த வாழ்க்கை முறையும் தண்ணீருக்கு அடுத்ததாக உப்பையே முக்கியமான தேவையாக்கியிருந்தது. எனவே ஆங்கிலேய அரசு இந்தியாவில் காலூன்றியதில் இருந்தே உப்பு வரியின் மீது விசேட கவனம் செலுத்தி வந்தது.
அதன் விளைவே 1759ஆம் ஆண்டில் இருந்தே உப்பின் மீது வரி விதிக்க ஆரம்பித்தது. உப்பு வணிகத்தை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் உப்புக் கடத்தலை தடுக்கவும்  மகாராஷ்டிரத்தில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் உயிர்வேலி எனப்படும் முட்புதர்களால் ஆன வேலி அமைத்து செயல்பட்டு வந்தது.  ஆங்கில ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த பல கொடிய பஞ்சங்களுக்கும் நோய் சாவுகளுக்கும் உப்புவரி நேரடி மற்றும் மறைமுக காரணமாக இருந்திருக்கிறது.
ராய் மொக்ஸ்ஹாம் என்பவரால் எழுதப்பட்ட  ‘‘மாபெரும் இந்திய உப்புவேலி’’ இந்தியர்களுக்கும் பிரிட்டிஷ் பேரரசுக்கும் உப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கிறது என்பதை நமக்குப் புரிய வைக்கும்,
6490433
சுதேசியின் இயக்கம் போல…
 திலகர் பெருமானால் பிரபலமடைந்த சுதேசி இயக்கமும் காந்திஜியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கமும் உப்பு சத்தியாகிரகப் போராட்டமும் இந்தியாவெங்கும் சுதந்திர வேட்கை ஓங்கவும், சுதேசி எண்ணம் வளரவும் முக்கியக் காரணிகள் ஆயிற்று. 1905 ஆண்டு காலகட்டத்தில் காணப்பட்ட அதே சுதேசி எழுச்சி தண்டி யாத்திரையின் போதும் நாடெங்கும் காணப்பட்டது.

காந்தி தேசம்

4

கீதா ரகஸ்யம் பேசிய திலகரின் தேசத்தில், ராம ராஜ்யம் பேசிய காந்தியின் தேசத்தில், மதமாற்றத்திற்கும் பிரிவினைக்கும் எதிராக உதிரம் சிந்திய திலகர் தேசத்தில் இன்று காந்தியின் பெயரைத் தாங்கிய வண்ணம் தனி தமிழ்நாடு கோரும் மதம்மாறிய காந்திகளையும், ராமபிரானை செருப்பால் அடித்தால் அது கூட தப்பாகாது என்று பேசும் காந்திகளையும் நாம் பார்த்துக் கொண்டிருப்பது வரலாற்று வேதனை. கயவர்களும் மதம்மாற்று சக்திகளும் பிரிவினைவாதிகளும் இன்று காந்தி என்ற பெயரைத் தாங்கி போலியாக உலா வருவதை நாம் எச்சரிக்கையோடு எதிர் கொள்ள வேண்டும்.

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *