சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள்  2017 சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள்  2017
சுதேசி என்பது ஒரு இதழ் மட்டுமல்ல… ஒரு இயக்கமும் கூட என்ற முழக்கத்தோடு வரும் நமது பத்திரிகை இன்று தனது 8வது வருடத்தில் காலெடுத்து வைத்துள்ளது. எட்டாவது ஆண்டு கொண்டாட்டம், துருவா மற்றும்... சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள்  2017

சுதேசி என்பது ஒரு இதழ் மட்டுமல்ல… ஒரு இயக்கமும் கூட என்ற முழக்கத்தோடு வரும் நமது பத்திரிகை இன்று தனது 8வது வருடத்தில் காலெடுத்து வைத்துள்ளது.
எட்டாவது ஆண்டு கொண்டாட்டம், துருவா மற்றும் சக்தி சாதனா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் இணைந்து விழா கோலாகலமாக ஆடல், பாடல், விருந்துடன் சிறப்பாக நடந்தேறியது.Sudesi Novmber issue-16
சிறப்பு விருந்தினர்களாக மூத்த தலைவர், திரு.ஹண்டே, இந்து மக்கள் கட்சி தலைவர் திரு. அர்ஜூன் சம்பத், ஸ்ரீ மாதா கேன்சர் கேரின் நிர்வாக அறங்காவலர் விஜயஸ்ரீ மகாதேவன் மற்றும் அரசியல் நாடக கலைஞர் திருமதி. மதுவந்தி அருண் வந்து சிறப்பித்தார்கள்.Sudesi Novmber issue-17 - Copy - Copyவிருது பெற்றவர்கள்ஒவ்வொருவரும் சமூக உணர்வாளர்கள் என்பதேமுதல் ஒற்றுமை. தத்தம் துறைகளில் அவர்கள் சிறந்து பணியாற்றி, சமூகத்தின்பால் உள்ள அன்பை வெளிப்படுத்தும் இந்த சேவை உள்ளங்களுக்கு சுதேசி நன்றியையும், பாராட்டுதல்களையும் வழங்கி கௌரவித்துள்ளது.

Sudesi Novmber issue-17 - Copy - Copyவாசக பெருமக்களுக்கும், துணை நின்ற சுதேசி குழுமத்திற்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், விழாவினை நடத்தி வைத்த எங்கள் போஷகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
பத்மினி ரவிச்சந்திரன்

திரு. துரை (மாதா கேன்சர் கேர்), (துருவா)

ஏழை இறுதிகட்ட புற்று நோயாளிகளின் புகலிடம் ஸ்ரீமாதா கேன்சர் கேர் என்றால் அங்கே அன்பெனும் காற்றாக பரவி நிற்பவர் திரு. துரை என்றால் மிகையில்லை.Sudesi Novmber issue-18 - Copy (2)
ஆரோக்கியமான உணவு, சுகாதாரமான சூழல், அன்பும் ஆதரவுமான பராமரிப்பு என்பதுடன் இவரது பணி முடிவதில்லை. நோய் முற்றிய ஏழை புற்று நோயாளிகளின் உடல்களை வாங்கி காரியம் பண்ண கூட உறவினர்கள் சில சமயங்களில் வருவதில்லை. எண்ணற்ற இந்த ஏழை புற்று நோயாளிகளின் அந்திம காரியங்களை, அவரவர் மதத்திற் கேற்றபடி, முறையாக, சிரத்தையுடன் செய்பவர் இந்த துரை அவர்கள் தான்.

ஈர நெஞ்சம் அறக்கட்டளை
ஈர நெஞ்சம் மகேந்திரன் (துருவா)

மனநலம் குன்றிய தனது சகோதரி சாக்கடையில் விழுந்த போது ஒரு ஆட்டோ டிரைவர் காப்பாற்றி வீடு வரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.Sudesi Novmber issue-18 - Copy (3)
நெகிழ்ந்து போன மகேந்திரன் தனது சகோதரியைப் போல் மனநலம் குன்றியவர்களுக்கு சேவையை செய்ய ஆரம்பித்தவர் இன்று ஆயிரக்கணக்கான மன நலம் குன்றியவகளை மற்றும் சாலைகளில் சுற்றித் திரிபவர்களுக்காக ஈர நெஞ்சம் எனும் அமைப்பையும் தொடங்கி இன்றும் அவர்களின் பாதுகாவலனாய் கண் போல் காத்து வருகிறார். கோவையில் ஈர நெஞ்சம் அமைப்பின் சேவை மிகவும் பிரசித்தம்.

திரு.ஆ.கணேஷ் (துருவா)

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என முழங்குபவர் தான் தமிழ் சமய பிரச்சார பாரதி நிறுவனர் திரு. கணேஷ் அவர்கள்.Sudesi Novmber issue-18 - Copy - Copy
தெய்வீகத் தன்மை கொண்ட இவரது கடிகாரங்கள் கோவிலில் பிரசித்தி பெற்றவை. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை திருமந்திரம், பகவத் கீதையின் சாரம், மற்றும் விவேகானந்தரின் வீரமொழிகள் என்று ஒலிக்கும்படி, 3 வருட ஆராய்ச்சியிற்கு பின் வெளி கொணர்ந்துள்ளார்.

 

ஆடிட்டர் குருபிரசாத்  (துருவா)

கும்பகோணம் திருவிழி மழிலையில் அமைந்துள்ளது இந்த கோரக்ஷனா. இது ராமாயண காலத்து கோயில்கள் சுற்றி உள்ள இடம். 4 பேர் கொண்ட குடும்பம் 2 ஏக்கர் நிலம், 2 நாட்டுப் பசு இருந்தால் போதும் யாருடைய தயவும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும் அது மட்டும் இல்ல அவர்கள் வெளியே வாங்கக் கூடிய பொருட்கள் இரண்டே இரண்டு தான். ஒண்ணு உப்பு இன்னொன்னு பெருங்காயம் என்கிறார் குரு பிரசாத்.

Sudesi Novmber issue-18 - Copy
பசுக்களின் பால், சாணம், கோமியம் கொண்டு சுமார் 60 மேற்பட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறார் இவர். இவருக்கு இன்னொரு தொழிலும் உண்டு. அதான் ஆடிட்டர் தொழில்!!!

 

ஜெகதீசன் (துருவா) 

சென்னை கோவிலம்பாக்கத்தில் கடந்த 13 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வரும் ஜெகதீசன் அவர் களால் ஆரம்பிக்கப்பட்டது தான் ‘கை கொடுப்போம் அறக்கட்டளை’!Sudesi Novmber issue-19 - Copy (2)
நலிவடைந்த மாணவ மாணவியர்க்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, இலவச மருத்துவ முகாம்கள், போக்கு வரத்து விழிப்புணர்வு, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, இரத்த தான முகாம்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு அடிப்படைத் தேவைகள் என கைகொடுப்போம் அமைப்பின் சேவை நீண்டு கொண்டே போகிறது.

ஐ மண் குப்புராஜ்   (துருவா)

ஐ மண் என்கிற அமைப்பு வட சென்னையில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரையும் ஒருங்கிணைத்து ஒரு குழுவாக இவர்கள் மரம், செடி நடுதல் வேலையை ஒரு சேவையாக சுமார் 20 வருடங்களாக செய்து வருகிறார்கள். Sudesi Novmber issue-19 - Copy (3)
அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு பொது இடங்களில் இவர்கள் வாலண்ட்ரியாக சென்று பர்மிஷன் கேட்டு இவர்கள் சொந்த செலவில் இந்த மரக்கன்றுகளையும், செடிகளையும் நடுகிறார்கள்.

 

வனச் சரகர் ராமநாதன்  (துருவா)

செங்கம் அடுத்த சாத்தனூறில் வனச் சரகராக பணியாற்றி வருகிறார் திரு. ராமநாதன் அவர்கள். காட்டு யானைகள் மற்றும் சிறுத்தை புலிகளிடமிருந்து பொதுமக்களை பாது காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.Sudesi Novmber issue-19 - Copy
இரவது செயல்பாடுகளை பார்த்து மாவட்ட கலெக்டர் முதல் பொதுமக்கள் வரை இவர் மீது அத்தனை மதிப்பு மரியாதை கொண்டுள்ளனர். முக்கியமாக காடுகளில் சந்தன, செம்மர கடத்தல் களை தடுக்கும் அபாய பணியில். எவருக்கும் பயப்படாமல் நேர்மையாக பணியாற்றியது என தமிழக வனத்துறையின் பாராட்டும் விருதும் பெற்றவர்.

 

திரு. சடகோபர் ராமானுஜ தாசன்   (துருவா)

ஏழை மாணவர்களுக்கும், கிராமபுற மாணவர் களுக்கும் நவீன கம்யூட்டர் தொழில் நுட்பம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு வேண்டும் என்பதே ஸ்ரீ ராமானுஜ அறக் கட்டளையின் இலக்குSudesi Novmber issue-19

ஒரு தலா 1 ரூபாயில் 40 கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கம்யூட்டர் பாடங்கள் கற்று கொடுத்து வருகிறார் சடகோபர்.
இவரது சேவையால் இன்று பல ஏழை மாணவர் களுக்கு நவீன தொழில் நுட்பம் வசமாகியுள்ளது.

பசு ராகவன் (துருவா)

சின்னதா தொழுவம் வைக்க ஒரு இடம் ஒரு பசு, ஒரு காளை இது போதும். உங்க வாழ்வாதாரத்துக்கு நான் கியாரண்டி இது தான் பசு ராகவன் அவர்களது தாரக மந்திரம்.Sudesi Novmber issue-20 - Copy (3)
திருவாரூர் மாவட்டம் அம்பலச்சேரி இவரது சொந்த ஊர். இது வரை சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் தொழுவம் வைத்து பசுக்கள் பராமரிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ராகவன் அவர்கள் அது மட்டுமின்றி பசுவின் சாணத்திலிருந்து எரிவாயு, பசுவின் பால் மற்றும் கோமியம் கொண்டு விபூதி, உர வகைகள், ஸ்வீட்ஸ், ஹெல்த்தி புட்ஸ் என இவாது கைவண்ணம் ஏராளம்.

திரு. சிவநாரயணன் (துருவா)
சமூக ஆர்வலர்

ஆஸ்திரேலியா, சீனா என பல வருடங்கள் வெளிநாடுகளில் வசித்து வந்த சிவ நாரயணன், இந்தியாவிற்கு திரும்பியவுடன் செய்த முதல் காரியம் அனன்யா அறக்கட்டளை’ துவங்கியது தான்.Sudesi Novmber issue-20 - Copy (4) இதன் மூலமாக கல்வி, மருத்துவம், பேரிடர் என பல வகையான உதவிகளை செய்து வருகிறார். மேலும் தொழில் துறையில் முன்னேறுவதற்கான வழிமுறைகள், தொடர்புகள் என பல புதிய பரிமானங்களையும் தனது சேவை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார்.

திரு. மோகன், (துருவா),  (வேலா தொண்டு நிறுவனம்)

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக இந்த வேலா அமைப்பு சமூக சேவையில் தனது பங்களிப்பை அர்பணிப்புடன் ஆற்றி வருகிறது. பேச முடியாத காது கேளாத 183 குழந்தைகளுடன் இந்த பயிற்சி பள்ளி இலவசமாக நடத்தி வருகிறது.Sudesi Novmber issue-20 - Copy (2)
6 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆரம்ப நிலை காது கேளாமை, பேச்சுத் திறன் குறைபாடு போன்ற குறைகளை கண்டறிதல், மனவளர்ச்சி குன்றியோர் மூளை முடக்குவாதம், ஆட்டிசம் என அனைத்து வகை நோய்களையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை கொடுத்து வருவது இந்த பள்ளியின் சிறப்பு.

 

திரு. ரவிச்சந்திரன் (தாசில்தார்),(துருவா)

சோழிங்கநல்லூர் தாசில்தாராக பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் காஞ்சி மாவட்ட கலெக்டரின் துணையோடு இவர் மேற்கொண்ட அதிரடி ரெய்டு களால் பல்லாயிரம் கோடி அரசு நிலங்கள் மீட்கப்பட்டு அரசு வசம் கொண்டு வரப்பட்டுள்ளது.Sudesi Novmber issue-20 - Copy
முன்னாள் ராணுவத்தினருக்கு சோழிங்க நல்லூரில் ஒதுக்கப்பட்ட 200 ஏக்கர் நிலத்திற்கு போலியான வரைபடம் தயாரித்து விற்க முயன்றனர்.
இந்த நிலத்தின் மதிப்பு, 260 கோடி. இதுவும் இவரது அதிரடிதான். நேர்மையின் உறைவிடம்! கடமை தவறாதவர்!

 

திருமதி.மஹாலக்ஷ்மி (சக்தி சாதனா)

பலமொழி பேசும் பன்மொழி வித்தகர். பட்டிமன்ற பேச்சாளர், மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுத்து வருபவர்.பன்முக திறமை கொண்ட மனித நேய பண்பாளர்.Sudesi Novmber issue-22 - Copy (3)
மதுரையில் பெண்கள் சுயதொழில் முன்னேற்றத்திற்கு உந்து கோலாக உழைப்பவர். தனது நீண்ட நாள் கனவான நெசவுத் தொழில் துறையில் கால் பதிக்க அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு ‘கண்ணன் ஐக்கார்டு இண்டஸ்ட்ரீஸ்’ எனும் நிறுவனத்தின் வெற்றிகரமான பெண் தொழிலதிபர்.
இன்று அவரால் அடையாளம் காணப்பட்டு, தொழில் தொடங்கி வேகமாக வளர்ந்து வரும் பெண்கள் நூற்றுக் கணக்கானோர்.

வீணை எஸ். அஞ்ஜனி சீனிவாசன் அஸ்வினி சீனிவாசன் (சக்தி சாதனா)

8 வயதிலிருந்து வீணை பயிற்சி பெற்று கடந்த 11 வருடங்களாக இந்தியா மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளில் தனது இசையை அரங்கேற்றி உள்ளார். Sudesi Novmber issue-22 - Copy (2)
இசைத்துறையில் முத்திரை பதித்த பல்வேறு ஜாம்பவன்களே புருவம் உயர்த்தி இவரது இசையை புகழ்ந்து ஆசி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஞ்ஜனிக்கு பக்கபலமாக அதாவது பக்க வாத்தியமாக மிருதங்கத்தில் வெளுத்து வாங்கும் அவரது தங்கை அஸ்வினி அவர்களும் இசைத் துறையில் தனது சகோதரியுடன் கைகோர்த்து சாதனை படைத்து வருகிறார்.

 

ஏஞ்சலின் செரில் (சக்தி சாதனா)

தற்போது 15 வயது பூர்த்தி செய்திருக்கும் ஏஞ்சலின் பரத நாட்டியம், மேற்கத்திய நடனம், கிராமிய நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க் கால் குதிரை, சிலம்பம் என பல கலைகளை கற்று பல மேடைகளை அலங்கரித்து வருகிறாள். Sudesi Novmber issue-22 - Copy (4)
கண் இமைகளால் பிளேடை எடுப்பது போன்ற கடின செயல்களை நடனத்தின் ஊடே இவர் செய்து கை தட்டல் பெற்றார். உற்சாகம் பொங்க நடனம் ஆடினார்!!

 

அனு ஸ்ரீராம் (சக்தி சாதனா)

அனு ஸ்ரீராம் சில நண்பர்களுடன் இணைந்து ஒரு புதிய முயற்சியாக யுடோப்பியா எனும் ஒரு சேவை அமைப்பை துவக்கி உள்ளார். இதில் சிறு குழந்தைகள் கொண்ட பெற்றோர்கள் வந்து எந்தவித கவலையும் இன்றி உடற்பயிற்சி செய்யலாம். Sudesi Novmber issue-22 - Copyதங்கள் நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்க்கலாம். வியாபார சம்பந்தமான மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளலாம். சில நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம். அதுவரை குழந்தைகளை ஆக்க பூர்வமான விளையாட்டுகளில் ஈடுபடுத்தி, பாதுகாப்பாக பார்த்து கொள்ள தேர்ந் தெடுக்கப்பட்ட குழந்தை காப்பாளர்கள் உள்ளனர்.

திருமதி. புவனேஷ்வரி நீலகண்டன் (சக்தி சாதனா)

ரவண சமுத்திரத்தில் இருக்கும் 150 தனி வீடு களுக்கு கழிப்பறை வசதிகள் செய்து, ஊர் முழுக்க சேனிடேஷன் முறைகளை சீர்படுத்திய பெருமை இவரையே சேரும். Sudesi Novmber issue-23 - Copy (2)இவர் மூலம் நிர்மல புரஸ்கர் விருது இந்த கிராமத்திற்கு கிடைத்தது. அங்கு இருந்து பழமையும் பெருமையும் வாய்ந்த 100 ஆண்டு காசி விஸ்வநாதர் கோயிலை, சீரமைத்து கும்பாபிஷேகம் செய்தார். பள்ளி படிப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து திறன் பயிற்சி, மேல்படிப்பு என ஊக்குவிப்பது இவரது முழு நேர தொண்டு எனலாம்.

 

திருமதி.சங்கீதா சங்கரன், (சக்தி சாதனா)

பன்னாட்டு நிறுவனங்களில் ஆடிட்டராக பணி செய்து வருகிறார். இந்தியாவின் சிறந்த சிதிளி பெண்மணி விருது வாங்கி உள்ளார்.பல்வேறு மேடைகளில் தனது தொழில் துறையில் பாராட்டுகளையும், விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.Sudesi Novmber issue-23 - Copy (3)
மராத்தன் ஒட்டப்பந்தயம், சைக்கிளிங் நீச்சல் என இவரது பன்முகம் நம்மை பிரமிக்க வைக்கிறது.இவரது புத்தகம் எழுதுதல் உண்மையில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் பிரபல நாளிதழ்களில் இவரது புத்தகத்தை அலசி ரிப்போர்ட் எழுதியுள்ளதே இதற்கு சாட்சி.

 

டாக்டர். ரஜினி (சக்தி சாதனா)

இவர் பல பட்டங்களை பெற்றவர். பல மொழி வித்தகர். இவர் ஒரு கல்வியாளர். Sudesi Novmber issue-23 - Copy (4)இவரது ‘‘லட்சியம் கல்வி’’ அறக்கட்டளையின் ஒரே இலக்கு மாணவ செல்வங்களுக்கு கல்வி தித்திக்க வேண்டும். கல்வி பாடங்களை புரிந்து கொண்டு படித்து புதிய எல்லைகளை தொட வேண்டும் என்பதே.
பிரைமரி முதல் 12ம் வகுப்பு வரை இவர் எழுதிய பாடநூல்கள் 58. இவர் பாடல், ஆடல், கலை நிகழ்வுகளிலும் நம்மை அசத்துபவர்.

 

பத்ம பிரியா (சக்தி சாதனா)

சென்னையிலிருந்து விசாகபட்டினம் வரை சைக்கிளில் செல்வது இவரது வாடிக்கை. அதுவும் சாதனை செயல் வீரராக 59 மணி நேரத்தில் சென்றுள்ளார்.Sudesi Novmber issue-23 - Copy
சைக்கிளிங் செய்வதால் என் மனதில் அமைதி வருகிறது என்னும் பிரியா, ஆஸ்திரேலிய தூதரகத்தில் உயர் பதவியில் இருப்பவர். பல மாநில தேசிய விருதுகளை குவித்துள்ள பத்மபிரியா அவர்களின் அடுத்த இலக்கு பாரிஸ் நகரம். 2019ம் ஆண்டு ஜூலை மாதம் பாரிஸ் நகரில் நடக்க உள்ள 1200 கிமி போட்டியில் கலந்து கொள்ள பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

திருமதி. ராதிகா சந்தானகிருஷ்ணன்
(சக்தி சாதனா)

தன்வந்திரி அறக்கட்டளையின் ஒரு பரிணாமம் தான் ‘பெண் நலம்’. இதன் மூலமாக இதுவரை சுமார் 1 லட்சம் பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் சோதனை செய்துள்ளனர். இவர்களது குழுவில் புற்றுநோய் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்து வர்கள் தேர்ந்த செவிலியர்கள் உள்ளனர்.Sudesi Novmber issue-24 - Copy (3)
விழிப்புணர்வு வர பல கிராமங்களை தேர்ந்தெடுத்து மார்பக புற்றுநோயைப் பற்றிய விவரங்களை எடுத்து சொல்லி, சோதனைகளை செய்து மருத்துவம் செய் கிறார்கள்.

 

திருமதி. ப்ரியதர்ஷிணி (சக்தி சாதனா)

இவர் சிறந்த அழகு நிபுணர் என்று மட்டும் சொல்லி நிறுத்திவிட முடியாது.Sudesi Novmber issue-24 - Copy (2) இவர் மூலிகைகளை கொண்டு மட்டுமே கடந்த 35 வருடங்களாக அழகு கலை சேவையை செய்து வருகிறார். இவர் தீவிர ஆன்மீகவாதி. உளவியல் தெரிந்தவர். மகான் பாபாஜி அவர்களின் ஆத்மார்த்த சீடர்.

 

திருமதி.மதுவந்தி அருண் (சிரோன்மணி)

இயல், இசை, நாடகம் என்ற முக்கலைகளை வளர்க்கும் பொருட்டு மகம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை 5 ஆண்டுகளுக்கு முன் துவக்கினார். இந்த 5 ஆண்டுகளில் கிட்டதட்ட 400க்கும் அதிகமான நாடகங்களை அரங்கேற்றி உள்ளார். Sudesi Novmber issue-24 - Copy
கலை உலக வாரிசாக உள்ள மதுவந்தி அவர்கள் சிறந்த பரத நாட்டிய கலைஞரும் கூட. அவர் ஒரு கல்வியாளர். சமூக சேவகர். அரசியல்வாதி என பல பரிணாமங்களை கொண்டவர்.
இவரது நாடகங்கள் சமூகத்தின் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பதால் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் இவர் பிரபலம்.

இளைஞர் வெங்கடேஷ் (விசிஷ்டா)

சமூக ஆர்வலரான அம்பேத் வெங்கட் சென்னை யூத் என்ற பெயரில் தனது 12வது வகுப்பு முதல் ஏழை மாணவர்களுக்கு இலவச டியூஷன் மையங் களை நடத்தி வந்துள்ளார். Sudesi Novmber issue-26 - Copy (3)
பெரியாரின் மறு பக்கம் என்ற இவரது முதல் புத்தகம் 2004ம் ஆண்டு வெளிவந்ததது தமிழ்நாடே இவரை உற்றுநோக்கியது. அவரது மேலும் சில படைப்புகளும், பலரது கருத்துகளை மாற்றியமைத்துள்ளது. ஒரே நாடு, ஒரே மக்கள் என்று தாயக பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

 

திரு.எம்.சத்தியகுமார்

வழக்கறிஞர் மற்றும் ஆடிட்டர் (விசிஷ்டா)
இதுவரை சுமார் 60,000 மாணவர்களுக்கு இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் பல மேடைகளில் ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.Sudesi Novmber issue-26 - Copy (4)
ஆன்மீக தலைவர் தலாய்லாமா அவர்களின் அன்பு பார்வையில் உள்ளவர். இந்திய அரசின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்து செல்லும் உன்னதசேவையை மேற் கொண்டுள்ளவர்.
இதுவரை அவர் அரசின் ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார கொள்கைகளை குறித்து பல ஆயிரம் மேடைகளில் பிரசங்கம் செய்துள்ள பெருமை கொண்டவர்.

திரு.ஹரிஹர சர்மா (விசிஷ்டா)

பாரம்பர்ய ஜோதிட குடும்பத்தின் நான்காவது தலைமுறை ஜோசியர் திரு.ஹரிஹர சர்மா அவர்கள்.Sudesi Novmber issue-26 - Copy (5)
ஜோதிடத்தில் பிஎச்டி பட்டம் பெற்றவர். மக்களின் பிரச்சினைகளுக்கு சோழி, பிரஸன்னம் மற்றும் ஜாதகம் மூலம் சரியான முறையில் ஜோதிட ஆலோசனை வழங்கி வருகிறார். இரண்டு ஜோதிட பயிற்சி நிலையங்களில் ஆசிரியராகவும் சேவையாற்றி வருகிறார். மேலும் வாஸ்து, நியூமரலாஜி, நேமாலஜி போன்றவற்றிலும் கைதேர்ந்தவர்.

திரு. கே.ஜி. ஜவர்லால் (விசிஷ்டா)

தனது வாழ்வையும் எழுத்தையும் நகைச்சுவை உணர்வோடு நகர்த்தும் ஜவர்லால் எழுத்துலகுக்கு எழுத்தாளர் ‘சாவி’யால் அறிமுகமானவர். Sudesi Novmber issue-26 - Copy
இவரது சிறுகதைகள் குமுதம் இதழில் வழியே ஜென்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் வெளி வந்துள்ளன. சர்ச்சைக்குரிய ஆங்கில நூலான ‘லஜ்ஜா’வை தமிழில் மொழிபெயர்த்தவரும் இவரே. இயல், இசை, நாடகம் என பன்முக திறன் கொண்டவர்.

 

மோகன்ராஜ் (விசிஷ்டா)

திரு.மோகன் ராஜ் சிறந்த தொழிலதிபராக இருந்தவர்.Sudesi Novmber issue-27
அதனை உதறிதள்ளிவிட்டு தமிழக அரசு இசைக் கல்லூரியில் எம்.எ மியூசிக் பட்டம் பெற்றும் ஆன்மீகம் தொடர்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டுமென்று சக்திபுரம் எனும் அறக்கட்டளையை துவக்கி அதன் மூலம் கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லம், அன்னதான கூடம், பசுமடம், வேதபாடசாலை, திருமுறை பாடசாலை ஆகியவற்றினை துவக்கி சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டுள்ளார்.

 

முனைவர். எஸ். விஜய்சேது நாராயணன் (விசிஷ்டா)

எஸ். விஜய்சேது நாரயணன் இளம் வயதிலேயே வேதத்தை சார்ந்த முறையில் பரிகாரங்கள் செய்வதில் நிபுணத்துவம் கொண்டவர். h15 வயதிலே இருந்து அவருக்கு ஆன்மீகத்திலும், ஜோசிய சாத்திரத்திலும் நாட்டம் எழுந்தது. ஜோதிடம், சிவ வழிபாடு என பயின்று, அதர்வன வேதத்தையும் பயின்றார். கேரளா, நேப்பாளம், சீனா, ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளுக்கு சென்று சிறப்பு பயிற்சிகளையும் பயின்றுள்ளார் விஜய். இவர் இந்து மதத்தில் முனைவர் பட்டர் வாங்கியுள்ளார்.

ஹைதராபாத் தமிழ்ச் சங்கம் (விசிஷ்டா)

ஹைதராபாத், செகந்தராபாத் என்ற இரட்டை மாநகரங்களிலும் சேர்ந்து சுமார் 7 லட்சம் தமிழர்கள் உள்ளனர். நம் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியிலும், தமிழ்க் கலாச்சாரம், ஆன்மீகம், பண்பாடு ஆகியவற்றை கட்டிக்காக்கும் நோக்கிலும் தொடங்கப் பட்டது தான் ஐதராபாத் தமிழ்ச் சங்கம்.ds
கடந்த 20 வருடங்களாக கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் இரத்ததான முகாம் என இன்றளவும் தொய்வில்லாமல் சமூக சேவைகளை ஆற்றி வருகின்றனர், ஐதராபாத் தமிழ்ச்சங்கத்தினர்.

 

முனைவர் ராதா கிருஷ்ணன் (ஸ்ரேஷ்டா)

தற்போது சென்னை சமஸ்கிருத கல்லூரியின் தலைவாரக உள்ளார். ஜோதிட சாஸ்திரத்தில் சிறந்த புலமை பெற்றுள்ள இவர் அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 6 மொழிகளில் நன்றாக பேசவும் படிக் கவும் தெரிந்தவர்.Sudesi Novmber issue-28 - Copy (4)
இவர் ஆயுர்வேத வைத்திய சாஸ்திரத்தில் சிறந்து விளங்குபவர். இவரது புத்தகத்தில் 60 வகையான வியாதிகளும் அதற்கான ஆயுர்வேத வைத்தியங்களும் எழுதியுள்ளார்.
இயற்கை, ஆயுர்வேதம், ஜோதிடம், சமையல் என பல கலைகள் இவர் வல்லவர்.

திரு. வி.ஜெயமணி (ஸ்ரேஷ்டா)

1000 வருட பாரம்பரிய மிக்க சிவன் மற்றும் பெருமாள் கோவிலை பராமரித்து வருகிறார் திரு. ஜெயமணி அவர்கள்.Sudesi Novmber issue-28 - Copy
கோயிலை புதுப்பித்து, பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அந்த கிராமத்தில் உள்ள ஜாதி ஏற்றத் தாழ்வுகளை களைய எண்ணி சாய் பாபா கோயிலை கட்டி, வியாழன் தோறும் சிறப்பு அன்னதானம் தொடங்கினார்.கல்வி கட்டணம், மருத்துவம், தொழில் திறன் மேம்படுத்துதல் என பலவகையான சமூக சேவையில் நாட்கள் விரைகின்றன என்கிறார் இந்த நல்ல உள்ளம் கொண்ட நல்லாவூர்காரர் ஜெயமணி வயது (89).

என்.சேஷாத்ரி குமார் (ஸ்ரேஷ்டா)

அருமையான தண்ணீரை சேமிப்பது எப்படி என்பதே திரு. குமார் அவர்களின் தொண்டு நிறுவனமான ‘வீடோ’வின் முக்கிய கடமை.Sudesi Novmber issue-28
ஒரு 1000 சதுர அடி வீட்டில், ஒரு மழையில் 1.5 லட்சம் லிட்டர் நீர் விழுகிறது. இதனை நாம் சேகரித்தால் கூட போதும். தண்ணீர் பஞ்சமே வராது என்கிறார் திரு.என்.எஸ். குமார் மேலும் நதிநீர் இணைப்பு, நீர் நிலை போக்கு வரத்து, அரசின் நீர் சேமிப்பு திட்ட ஏற்பாடுகளின் பலன்களை ஆராய்வது என இவரது வீடோ தொண்டு நிறுவனம் அயராது பாடுபட்டு வருகிறது.

 

திரு. ரங்கநாதன் (ஸ்ரேஷ்டா)

திரு. ரங்கநாதன் அவர்கள், இந்தியர்களில் ஒரு சிலரே பெற்றுள்ள ஜப்பானின் ‘எம்பரர்’ விருது பெற்றவர். மிகச் சிறந்த சமூக சிந்தனையாளர். Sudesi Novmber issue-28 - Copy (2)கேமராக் காதலன். அந்நாளில், குமுதம் ஆனந்த விகடன் பத்திரிகைகளில் அட்டைப் படங்களை இவரது புகைப்படங்கள் அலங்கரித்துள்ளன. ஜப்பானிய மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றுத் தரும் அமைப்பை ஏற்படுத்தியவர்.
பல நூறு மாணவர்களுக்கு ஜப்பான் செல்லும் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து வருபவர்.

திரு.வரதராஜன் (ஸ்ரேஷ்டா)

தமிழ்நாடு பிராமணச் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர், ரெட்டேரி சமூக நற்பணி மன்ற தலைவர், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் மனித நேய பண்பாளர். Sudesi Novmber issue-29இளைஞர்களுக்கு பல கல்வி மற்றும் வர்த்தக வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்தி ஊக்குவிப்பவர்.ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி தொகை உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி கள் என பன்முகம் காட்டி நிற்கும் இன்முகத்தார்

திரு.எஸ்.மோகன் (தர்மோ தாரணா)

எளிமை, இனிய சுபாவம் கொண்ட திரு.மோகனிடம் அவரது தயாள சிந்தனையும், உதவும் உள்ளமும் இருப்பதால் தான் சமூக சேவையில் தன்னை முழுவது மாக ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.jff
இவர் பாரதிய வித்யாபவனின் கௌரவ பொருளாள ராகவும் இருக்கிறார்.
பிரபல சார்ட்டர்ட் அக்கௌண்ட்டாக திரு.மோகன் அவர்கள் 38 ஆண்டுகளாக விளங்குகிறார்.
இவரது சமூக உணர்வினால் சென்னை பிரண்ட்ஸ் போரம் எனும் அமைப்பை சில நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

திரு.மாணிக்கவேல் (தர்மோதாரண)

உழைப்பால் உயர்ந்தவர். தூத்துக்குடியில் பிறந்து குண்டூரில் தொழில் துறையில் சாதித்துள்ளார். இவரது பாரதி சோப்பு நிறுவனத்தின் பொருட்கள் ஆந்திராவில் மிகவும் பிரபலம்.k
இவரது நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். குண்டூரில் தமிழ்ச் சங்கம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் நலத்திட்ட உதவிகள், ஆதரவற்றோர்க்கு அடைக்கலம் தருவது என சேவையில் முன்நிற்கிறார். திரு. மாணிக்கவேல்.

பி.வி. சண்முகம் (தர்மோதாரண)

கோயமுத்தூர் நகர வீதிகளிலும், அரசு அலுவலகங் களிலும், மக்களுக்கான குறைகளை தேடிப் பிடித்து அதற்கான தீர்வையும் உடனே முடித்து கொடுப்பவர். Sudesi Novmber issue-30அரசின் பயன்பாட்டுத் திட்டங்கள், மக்களுக்கு சென்று சேர வேண்டிய பலன்கள் அதாவது மாநில மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களையும் அதை அணுகும் முறைகளை யும் தெளிவாக தீர்த்து வைப்பதில் சாதுர்யமானவர்.
குறிப்பாக தனது சொந்த செலவிலேயே மற்றவர் பிரச்சனைகளுக்கு தீர்வு செய்து கொடுப்பது இவரது தனிச்சிறப்பு.

திரு. பஞ்சாபகேசன் (தர்மோதாரண)

சென்னை சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் திரு. பஞ்சாபகேசன் அவர்கள்.
தனி ஒரு நபராக குறைந்த கட்டணத்திலும் பலருக்கு இலவசமாகவும் திருமண உதவி, மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி, மோட்டிவேஷன் ஸ்பீச் என இவரது சேவையை சொல்லிக் கொண்டே போகலாம்.w
உடல் ஊனமுற்றவர்களுக்காகவும் மேட்ரிமோனி சேவையை ஏற்படுத்தியது தான்!
இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட திருமணங் களை நடத்தி வைத்துள்ளார்.

ராஜா உடையார் (தர்மோதாரண)

கடலூர் திட்டகுடியை பூர்வீகமாகக் கொண்டவர். மும்பையில் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த சிறந்த சமூக ஆர்வலர் ராஜா உடையார். fgdgd
குறிப்பாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஸ்டேஷனில் ரயில்கள் நிற்காது. மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று ரயில்கள் நிற்பதற்கும். ஆளில்லா லெவல் கிராஸிங், கும்மிருட்டு பகுதிகளில் வெளிச்சமில்லாமல் நடந்த விபரீதங்களை தடுக்கும் பொருட்டு சாலை விளக்குகளை அமைத்துக் கொடுத்தது என இவரது சேவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

திரு. சிதம்பரம் (தர்மோ தாரண)

திரு.சிதம்பரம் அவர்கள் பெரும் தொழில் வித்தகவர். மனிதநேய பன்பாளர். ஆன்மீகம் அவரது உயிர்நாடி என்றால் மிகையில்லை. Sudesi Novmber issue-31நமது கோயில்களையும், அதனை சார்ந்த சொத்துக்களையும் பாதுகாப்பது எப்படி என்னும் வழிமுறைகளை ஓயாமல் தேடி முயற்சித்து வருபவர். நமது பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும் பொன்னான குணத்தை கொண்டவர்.

மகேஷ் குமார் (யுவரத்னா)

இந்தியன் யூத் பார்லிமெண்ட் சார்பாக MIT பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் மாணவ செல்வங்களை அழைப்பார்கள்! தமிழகத்திலிருந்து சென்றவர் மகேஷ் குமார்.Sudesi Novmber issue-32 - Copy - Copy (2)
விவசாயிகளின் பிரச்சினையை எடுத்து சொன்ன போது, உலக பிரபலங்கள் அங்கு இருந்தனர்.
I.A.S அல்லது I.P.S படிக்க வேண்டும் என்பதே இவர் கனவு.

சுப்புலஷ்மி (யுவசக்தி)

12ம் வகுப்பில் படிக்கும் மாணவி சுப்புலஷ்மி 4ம் வயது முதலே சங்கீதம் பயில தொடங்கினார்.
சுமார் 20 கச்சேரிகள் சென்னையிலும் துபாயிலும் வழங்கியுள்ளார். 6 வருடங்கள் பரதமும் பயின்றுள்ளார். Sudesi Novmber issue-32 - Copy - Copy
இந்த மாணவி இந்தி பிரச்சார சபாவில் சேர்ந்து ஹிந்தியில் பி.ஏ சேர்ந்து பட்டம் பெற்றுள்ளார். சமஸ்கிருத பாரதியில் சமஸ்கிருதத்தில் பி.ஏ பட்டமும் வாங்கி விட்டார்.
பல கோயில்களில் பாடி வரும் சுப்புலஷ்மியின் இலக்கு சங்கீதம் அனைவருக்கும் வசப்பட வேண்டும் என்பதே!!

 

தேஜஸ்வினி,மானஸ்வினி (யுவசக்தி)

5 வயதில் தொடங்கிய இந்த சகோதரிகளின் ஜீம்னாஸ்டிக் பயிற்சிகள் தேசிய அளவில் பரிசு களை குவித்துள்ளன.Sudesi Novmber issue-32 - Copy
காலை 4 மணி முதல் பிராக்டிஸ் ஜிம்னாஸ்டிக் மட்டு மில்லாமல், பரதமும் பயின்று வருகிறார் கள். படிப்பில் மிகவும் சுட்டி என்பது கூடுதல் சிறப்பு.j

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *