ஒரே நாடு மக்கள் சட்டம் ஒரே நாடு மக்கள் சட்டம்
ஒரே நாடு மக்கள் சட்டம் உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும், மத்தியில் ஆளும் அரசை கடந்த 50 ஆண்டுகளாக எல்லோருக்கும் ஒரே சட்டம் கொண்டு வர அறிவுறுத்தி வருகிறது. ஒரே நாடு! ஒரே... ஒரே நாடு மக்கள் சட்டம்

ஒரே நாடு மக்கள் சட்டம்

உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும், மத்தியில் ஆளும் அரசை கடந்த 50 ஆண்டுகளாக எல்லோருக்கும் ஒரே சட்டம் கொண்டு வர அறிவுறுத்தி வருகிறது. ஒரே நாடு! ஒரே சட்டம்! என்பதை நிலை நிறுத்தாமல் செய்ததில் காங்கிரஸ் அரசின் பங்கு தான் அதிகம்.

talak-1

இஸ்லாமிய பெண்களின் உரிமை குரல்
ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கு இப்போது என்ன ஒரே கூச்சலும் குழப்பமும் என்றால், அதற்கு காரணம், இஸ்லாமிய பெண்களின், பாரத முஸ்லிம் மகிளா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு தான்.
தலாக்! தலாக்! தலாக்!இஸ்லாமியரின் ஷரியத் சட்டத்தின்படி, ஒரு பெண்ணிற்கு 15 வயது முதல் திருமணம் நடக்கலாம் என்பதே இன்றைய நிலைப்பாடு! மேலும் கல்யாணம் ஆன நாள் முதல், இறுதி மூச்சு வரை, ஒரு இஸ்லாமிய பெண், ஒவ்வொரு நிமிடமும், பயத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும்.
திருமணமாகி எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் எவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் ஒரு கணவன் தனது மனைவியிடம் தலாக்! தலாக்! தலாக்! என்று 3 முறை சொல்லி விட்டால் போதும் விவாகரத்து முடிந்து விட்டது.

கொடுமை

இந்த கொடுமை உண்மையில் இன்றும் இந்தியாவில் நடக்கிறதா என்று கேட்பவர்கள் அதிகம். ஆனால் இது தான் வேதனையான உண்மை.சொத்தில் உரிமை, விவாகரத்து கோருவதில் உரிமை, சமஉரிமை, பல தார தடுப்பு சட்டம், ஜீவனாம்சம் என இந்தியாவில் உள்ள மற்ற பெண்களுக்கு உள்ள உரிமைகள் talak-3எங்களுக்கு ஏன் இந்திய சட்டம் அளிக்கவில்லை. இது எங்கள் அடிப்படை உரிமை இல்லையா?? என்றும் கேள்வி கேட்டுள்ளனர்?!இந்திய அரசியல் சட்ட சாஸனத்தின் முகப்பு கருத்தே, இந்திய குடிமகன்/குடிமகள் ஒவ்வொருத்தருக்கும், ஆண்பால் பெண்பால் வேறுபாடு இல்லாமல், சர்வ சுதந்திரமாக, சகல உரிமைகளோடும் வாழ இந்திய சட்டம் வழிவகுக்கிறது.

இந்த அடிப்படை சுதந்திரத்திற்கு பாதகம் விளைவிக்கும் எந்த ஒரு சட்ட பிரிவும் செல்லுபடி ஆகாது என்றும் தெளிவாக கூறுகிறது.எனவே இந்த தலாக் தலாக் தலாக் என்று கூறி, மனைவியரை விவாகரத்து செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். பிற இந்திய பெண்களைப் போல எங்கள் திருமணமும் சட்டத்தின் படியே தான் விவாகரத்து பெற வேண்டும்.
சொத்துரிமை, வாரிசு உரிமை, கல்யாண வயது வரம்பு, பலதாரம் என அணைத்தும் எங்களுக்கு இந்திய சட்டத்தின்படியே தான் நிர்ணயிக்க படவேண்டும்.இது எங்கள் அடிப்படை உரிமை என்று இந்த மகளிர் அமைப்பு வாதாடி உள்ளது, உச்ச நீதிமன்றம், 1956ம் ஆண்டு, இந்து திருமணச்சட்டம் சீரமைக்கப்பட்டது அதனை தொடர்ந்து இஸ்லாமிய திருமண சட்டமும் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஏன் இன்னும் பொது சிவில் சட்டம் கொண்டு வரவில்லை என உச்சநீதி மன்றம் கேட்டுள்ளது. கால கெடுவும் அளித்துள்ளது.மத்திய அரசும் ஒரு கருத்து அறியும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்திய பொது மக்களிடம் பொது சிவில் சட்டம் என்றால் என்ன என்று விளக்கி, பல கேள்விகளையும் முன் வைத்துள்ளது அரசு??

எதிர்ப்பு

இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், இன்னும் தனி நபர் உரிமை, சில இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.பொது சிவில் சட்டம் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்றும் கூறுகின்றன.பொது சிவில் சட்டம் எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானது. அவை இந்து மத சட்டங்கள் இல்லை. மேலும் இந்த பொது சட்டங்கள் எல்லோருக்கும் சம உரிமையும் சுதந்திரமும் கொடுக்கும்! என்று சட்ட பிரிவினர் கூறியுள்ளனர்.
குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கு முறையான உரிமையும், வாழ்வில் கௌரவமும் கிடைக்க வழி செய்கிறது. இதை ஏன் எதிர்க்க வேண்டும். மேலும் இதே இஸ்லாமிய சட்ட வாரியமும், இஸ்லாமிய அமைப்புகளும் இந்திய கிரிமினல் சட்டத்தை எற்றுக் கொண்டுள்ளதே. பின் என்ன பிரச்சினை என்றும் கேட்டுள்ளனர்,இது பற்றிய மக்கள் மன்றத்தை பாருங்களேன்.
அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் தலாக்!

 

மதுமிதாname-4, பெண்கள் உரிமை சங்க தலைவி,

பெங்களுர் – ககடாசபுரம்.

இஸ்லாமிய பெண்களுக்கு இந்த தலாக் முறையால் அடிப்ப
டை உரிமையிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமல்
லாது அவர்களின் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு தொடர்கிறது.குறிப்பாக ஒன்றிற்க்கும் மேற்பட்ட திருமணம் செய்துகொண்ட பெற்றோர்கள் த
ங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்யும்போது பல சங்கடங்களை சந்திப்பதும், சமூக அங்கிகாரத்தில் பாதிப்பும் ஏற்படுகிறது.இஸ்லாமிய திருமணங்கள் பதிவும் செய்யபடுவதில்லை விவாகரத்தும் அவர்கள் மத அடிப்படையிலேயே சமூகத்தினர் முன்னிலையில் நடைபெறுகிறது. இதனால் அரசின் பாதுகாப்பும் ஆதரவும் பெண்களுக்கு கிடைப்பதில் வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் பெண்கள் மற்றும் எதிர்கால தலைமுறை நலன்காக்க காமன் பொது சிவில் சட்டம் இன்றியமையாதது.

அடிப்படை சுதந்திரங்கள் – வரதன், சமூக ஆர்வலர்,அளிக்கப்பட வேண்டும்!

varadan-1

இந்திய அரசியலமைப்பு சட்டம் மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளின் அடிப்படையில் தான் அமைக்கப்பட்டன. குறிப்பாக ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் அடிப்படை சுதந்திரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசியல் தலைவர்கள் மிகவும் உறுதியுடன் இருந்தார்கள். ஏனென்றால் அப்போது நமது நாடு அடிமைபட்டு, மக்களுக்கு சமஉரிமை இல்லாமல், அடிமைகளாய் வாழ வேண்டிய சூழல் இருந்தது.இனி சுதந்திர இந்தியாவில் அந்த ஒரு நிலை, எந்த ஒரு இந்தியருக்கும் வரகூடாது! வரவே கூடாது என்றே நமது முத்த அரசியல் தலைவரிகள் அரசியலமைப்பில் இந்த அடிப்படை உரிமைகளை, பொறித்து வைத்துள்ளனர்.

இந்து சட்டம் 1956- கலிங்கா, வழக்கறிஞர்.

190781_457921257604077_322713674_n

இன்றைய இஸ்லாமிய சட்டத்தைப் போலவே, இந்து திருமண சட்டம் இருந்தது. ஆனால் அன்றைய பிரதமர் நேரு, அதை பல சீர் திருத்தங்களை செய்து பல தாரத்தை ஒழித்தார். சட்டப்பதிவினை கட்டாயமாக்கினார். பெண்களுக்கு ஜீவனாம்சத்தை உறுதி செய்தார். கல்யாண வயதினை உயர்த்தி, பெண்களின் ஆயுட்காலத்தை நீட்டித்தார். சிறுவயதில் குழந்தைகள் பெறுவது பெண்களின் உயிரை பெரிதும் பறித்து வந்த காலம் அது. மேலும் இந்த சட்டங்கள், தொடர்ந்து கிறிஸ்த்துவ மதம் மற்றும் பிற மத பெண்களுக்கு காலத்திற்கேற்றவாறு மாறிக்கொண்டு தான் வருகிறது. இன்று இந்திய பெண்கள் முழுஉரிமைகளோடு தான்,சந்தோஷமாக வாழ்கிறார்கள். இது இன்று கோவாவில் நடைமுறையில் இருக்கிறது. இஸ்லாமிய சகோதரர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இது சம தர்மத்தின் பாதை!!!

name-31

கிரிமினல் சட்டம் ஒன்று தானே!!                                  டெல்லி ராகவன் நாயுடு, விராத் இந்து சங்கம்.
கொலை செய்தால் என்ன தண்டனை?? இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் இத்தகைய கிரிமினல் குற்றங்களுக்கு ஒரே மாதிரியான நீதிதானே அதில் இந்து சட்டம், முஸ்லீம் சட்டம், சீக்கியர் சட்டம் என இருக்கிறதா?
நீதிக்கு ஏது மத, ஜாதிபேதம்! அதுவும் ஜனநாயக நாடான இந்தியாவில்!! அதே போலத்தான் பொது சிவில் சட்டமும்.
இது மத ரீதியானது இல்லை. இந்தியர் அனைவருக்கும் பொதுவானது தாம். மேலும் நமது இந்திய குடியரசின் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடித்தளமே, இந்திய மக்கள் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகளை காக்க வேண்டியது தான்.
எனவே ஒரு சில இஸ்லாமிய தலைவர்கள் இதனை எதிர்ப்பது சட்டப்படி எடுபடாது. தார்மீக முறையிலும் அது, இஸ்லாமிய பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரானது.

 

பெண்களுக்கு சுதந்திரம் ,- ஸ்ரீப்ரியா.

13445681_10153918423577885_3956673586637092782_n

இஸ்லாமிய பெண்களுக்கு சுதந்திரம் கூடாது என்னும் எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டும் தான் இந்த பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று சொல்வார்கள்.15 வயதிற்குள் திருமணம் என்றால், அவர்கள் படித்து, தன்னம்பிக்கையுடன் இருக்க அதிக வாய்ப்பில்லை. மேலும் எந்த சிறிய பிரச்சினைக்கும், தலாக் சொல்லி தனது வாழ்வை பறித்து விடலாம் என்ற பயமும் இருக்கும். பெண்கள் வெறும் குழந்தை பெறும் இயந்திரங்களாக, சம உரிமைகள் இல்லாமல், தவித்து தான் இன்றும் வாழ்கிறார்கள்.
இந்த சிவில் சட்டம், பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கும். இந்திய சட்டத்தின் பாதுகாப்பை கொடுக்கும் தனது கணவன் பலரை திருமணம் செய்வதை சகித்து கொள்ள வேண்டிய அவமானத்தை தடுக்கும்! சொத்து உரிமை கிடைக்கும்!
உண்மையில் இஸ்லாமிய பெண்களுக்கு பொது சிவில் சட்டம் வந்தால், புதிய பூமியாகவே இந்தியா மாறும்.

 

பகுத்தறவு வாதிகள், மூட நம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள், பெண்கள் உரிமைக்கு பாடுபடுபவர்கள் என்று கூறும் கொள்கைவாதிகள் பலர் தங்கள் கருத்துக்களை சொல்ல மறுத்துள்ளனர். அதில் சிலர்…

talaq-sudesi

ஞாநி – நோ கமெண்ட்ஸ் – நோ கமெண்ட்ஸ்

வெளியூர்ல இருக்கேங்க! அப்பறம் போன் பண்ணுங்க
சுபவீர பாண்டியன்

சல்மா-எதுக்குங்க வீன் வம்பு
மனுஷ்யபுத்திரன் – நான் ரொம்பபிஸி

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *