சுதேசி என்பது ஒரு புத்தகம் அல்லது இணையதளமோ மட்டும் அல்ல. சுதேசி என்பது ஒரு இயக்கமாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதே எங்களது அன்பான வேண்டுகோள்.

நன்றாக யோசித்து பாருங்கள். இன்று நமது மாநிலத்தில், நமது நாட்டில், ஒரு தவறு நடக்கிறது என்றால், அதனை சுட்டிக் காட்டி, உண்மைகளை மக்கள் முன் அனைத்து ஊடகங்களும் வைத்தால், மீண்டும் அந்த தவற்றை செய்ய அரசியல்வாதிகள் துணிவார்களா??

ஆனால் இன்று நமது ஊடகங்கள் உண்மையை கூறாமலும், பொய்யை பரப்பியும் வருவதால், ஒரு ஜனநாயகத்தின் ஒரு முக்கிய தூணான ஊடகங்களின் மேல் உள்ள நம்பகத்தன்மை குறைந்து விட்டது.

இணையதளம் வந்துவிடவே தான் இன்று மக்களுக்கு ஒரு சில உண்மைகளாவது கசிந்து விடுகின்றது.

எங்கள் சுதேயின் குரல் எப்போதும் ஒரே இந்தியா! ஒரே மக்கள்! என்ற அடிப்படையில் தான் ஒலிக்கும். இந்தியாவின் நலனுக்கு, இறையாண்மைக்கும் எதிரான சக்திகளின் சதி விளையாட்டுகளை மக்களின் மேடைக்கு கொண்டு செல்வதே சுதேயின் நோக்கம்.

சுதேசி 6 வருடங்களாக மாதமிருமுறை சமூகம் மற்றும் அரசியல் அலசல்களோடு வந்து கொண்டிருக்கும் தமிழ் பத்திரிகை. இப்போது மாத இதழாக அதிக பக்கங்களுடன் வந்துள்ளது.

WWW.sudesi.com  என்ற இணையதளம் துவங்கி உள்ளோம்.

தினமும் எங்களின் பதிவுகளை நீங்கள் படித்து பகிரலாம். உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.