அன்னமிடும் அன்பு கரங்களில் தூக்கு கயிற்றை  கொடுத்தது யார்? அன்னமிடும் அன்பு கரங்களில் தூக்கு கயிற்றை  கொடுத்தது யார்?
காவேரி வருமா? காவேரி நீர் ஆணையம் கோரி நடந்து வரும் போராட்டம் தொடங்கி பல வருடங்கள் கடந்து விட்டது. 1924ம் ஆண்டு அன்றைய மைசூரை ஆண்ட இந்து மகராஜாவிற்க்கும், சென்னை மாகாண வெள்ளை... அன்னமிடும் அன்பு கரங்களில் தூக்கு கயிற்றை  கொடுத்தது யார்?

காவேரி வருமா?

காவேரி நீர் ஆணையம் கோரி நடந்து வரும் போராட்டம் தொடங்கி பல வருடங்கள் கடந்து விட்டது. 1924ம் ஆண்டு அன்றைய மைசூரை ஆண்ட இந்து மகராஜாவிற்க்கும், சென்னை மாகாண வெள்ளை அதிகாரிக்கும் நடந்த காவேரி நீர் ஒப்பந்தம் 1974ம் ஆண்டு வரை இருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னர் மாற்றியமைக்காமல் இருந்தது தவறு என்று இப்போது தோன்றுகிறது.April-magazine-59
மெட்ராசில் அதிக விவசாய நிலம் என்று காரணம் காட்டி, கர்நாடகாவில் தோன்றினாலும் அங்கு 30% நீர் உரிமையும் மீதமுள்ள 70% தமிழகத்திற்கும் என்பதே ஒப்பந்தம். வேறு வழி இல்லாமல் மைசூர் மகாராஜா கையெழுத்திட்டார்.

1974ம் ஆண்டு ஒப்பந்தம் முடிந்தவுடன் விவாதம் தொடங்கியது. 1990ம் ஆண்டில் காவிரி மேலாண்மை குழு அமைக்கப்பட்ட்து பல வருடங்கள் கழித்து தீர்ப்பும் வந்தது. இரு மாநிலங்களிலும் எதிர்ப்பு இருந்தபடியால், வழக்கு இன்னும் தொடர்கிறது.
கர்நாடக அரசு 70% காவேரி நீரை தாரைவார்க்க முடியாது. மக்கள் தொகை அதிமாகி விட்டது. காவேரி நீர் எங்களுக்கு குடிநீர். மேலும் எங்கள் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் வரும் மழையை எதிர்பார்த்து அண்டை மாநிலமான தமிழ்நாடு எப்படி 100 வருடங்களாக பயிர் செய்கிறது என்று கேட்டுள்ளது. ஆக காவேரி நீர் நமக்கு முன் போல 70% வருவது என்பது இனி நடக்காது.

April magazine-21

வானம் பொய்த்தால்….

மனிதன் இயற்கை வளத்தை அழிக்க, இயற்கையும் தடுமாறித்தான் போகிறது போலும். வானம் பொய்த்து விட்டால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வயல்களில் வறட்சி நிச்சயம்.

காரணம் என்ன?

காவேரி ஆணையமும், வானம் பொய்த்ததால் மட்டும் தான் இந்த வறட்சிக்கு காரணமா என்றால், நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 50 ஆண்டுக்காலமாக தொலைநோக்கு இல்லாத தலைவர்கள், விவசாய பொருளாதாரம் பற்றிய கவலை இல்லாமல் கொள்ளை அடிப்பதை மட்டுமே கண்ணாக இருந்த திராவிட கட்சிகளின் ஆட்சியால் வந்த கொடுமையே இந்த வறட்சி.

திராவிட கழகங்களின் அலட்சியம்

என் தமிழன் என்று உரிமை கொண்டாடும் இந்த திராவிட கட்சிகள், 1967ம் ஆண்டு தான் அரசின் நாற்காலியில் அமர்ந்தது.may-layout-final-1-8
அன்றிலிருந்து இந்நாள் வரை ஒரு அணைக்கட்டு கூட கட்டியது இல்லை. தடுப்பணைகளை கூட கட்டவில்லை. அதற்கான திட்டமும் இல்லை.

நீர்வழி தடம் பராமரிப்பு

தமிழகத்தில் லட்சக்கணக்கான நீர்நிலைகள் இருந்தன என்று நமது முன்னோர் எழுதி வைத்திருந்தனர் அந்த லட்சங்கள் தொலைந்து விட்டன. 2013ம் ஆண்டில் சுமார் 55,000 முதல் 60,000 நீர் நிலைகள் உள்ளன என்று அரசு அறிக்கை கூறுகிறது.
நீர்வழி தடங்களை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, பாதுகாப்பு சுவர் எழுப்பி, பராமரிக்க வேண்டிய அரசு என்ன செய்துள்ளது??
இந்த நீர் நிலைகளில் தடுப்பணைகளை கட்டி, நீரை தேக்கி, நிலத்தடி நீரின் அளவை உயர்த்தியதா? இல்லை, பின் என்ன தான் இந்த திராவிட அரசுகள் 50 ஆண்டுகள் விவசாயத்திற்கும் நமது விவசாயிகளுக்கும் செய்தது.

 

பாழ் செய்தது

நீர் வழி தடங்கள் பராமரிப்பு இல்லாமல் குறுக தொடங்கியது.தோல் பதனிடும் ரசாயன கலவை, சாய கழிவுகள், கலப்பதால், நீர் நிலைகள் மாசு அடைகின்றனF4.The Minister for Rural Development and Local Administration , Government of Tamil Nadu Shri.M.K.Stalin called on the Prime Minister, Dr. Manmohan Singh, in New Delhi on July 04, 2007. The Union Minister for Shipping, Road Transport and Highways, Shri T. R. Baalu is also seen.

நீர் நிலைகளை ஆக்ரமித்து, வீடு கட்டுவது கல்லூரிகள் கட்டுவது என்று ஆரம் பித்ததும் இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான்.
முன்னொரு காலத்தில் ஒரு கதை சொல்லுவார்கள். பச்சை பூ முதலியார் தினமும் காலையில் கூவத்தில் குளித்துவிட்டு தான் கோயிலுக்கு செல்வாராம். இன்று அந்த கூவம் தான் மனித கழிவுகளால் திணறிக் கொண்டிருக்கிறது.  தமிழகத்தின் நீர் ஆதாரம் சுமார் 850-900 டி.எம்.சி இருந்தாலும், இன்றைய சூழலில் 280 டி.எம்.சி தான் சேமித்து வைக்கும் நிலை உள்ளது.
ஆறுகளை நன்றாக தூர் வாரி வைத்தால் மட்டுமே, நிலத்தடி நீரின் அளவு தரமாக இருக்கும்.

தமிழக விவசாயி

தேசிய விவசாய வளர்ச்சி 3% என்றால், தமிழக விவசாய வளர்ச்சி 4%! இது ஏனென்றால் நமது விவசாயிகள் கடின உழைப்பாளிகள்! வயலில் வேலை செய்பவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் பெண்கள் தாம்.

விதவிதமான சாகுபடி…

நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி கிழங்கு, பூ விவசாயம், டி தூள், காப்பி, மசாலா, தென்னை என பல வகையான சாகுபடி நமக்கு உள்ளது. சிலவகை விளைச்சலுக்கு அதிக நீர் வைபடுவதில்லை.

பின் எப்படி இந்த விவசாயி தற்கொலைகள்??தமிழக ஆட்சியாளர்களை தாம் நாம் கடுமையாக சாடவேண்டும். தொலை நோக்கு பார்வை இல்லாமல், நீர்வள பராமரிப்பு வேலைகளை செய்யாமல், அரசின் கொள்கைகளில் தெளிவில்லாமல் இருந்ததால் வந்தது தான் இந்த கொடுமையான விவசாயி தற்கொலைகள்.

பயிர் பாதுகாப்பு திட்டம்

மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வை தமிழக அரசு இந்த ஏழை விவசாயிகளுக்கு கொண்டு சோக்கவில்லை. இந்த திட்டத்தின்படி வறட்சி, அல்லது புயல் போன்ற இயற்கை இடர் காரணமாக, பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால், பயிர்கள் முறையாக சாகுபடி செய்யப்பட்டால் வரும் தொகை கிடைத்து விடும். தமிழகத்தில் 30% விவசாயிகள் கூட பயிர் காப்பீடு செய்து கொள்ளவில்லை.

கரும்பு விவசாயம் ஏன் நலிந்தது??

கரும்பு விவசாயம் என்பது நான்கு வித உற்பத்தியை நமக்கு தருகிறது. சர்க்கரை, மொலாசஸ், sugarமின்சார சக்தி மற்றும் எத்தனால். இந்த உற்பத்தியை கொள்முதல் செய்வது தமிழக அரசு தான். பின் ஏன் தமிழக அரசு நமது விவசாயிகளிடம் வாங்காமல் அண்டை மாநிலமாகிய மகாராஷ்டிராவில் சர்க்கரை வாங்குகிறது??ஏன்?? 

ஏன் என்றால் அங்கு விற்பனை வரி மிக குறைவு. ஆனால் நமது அரசின் கொள்கைபடி தமிழகத்தில் அதிக வரி!!
சர்க்கரை மட்டுமல்ல, மின்சாரத்தையும் தமிழக அரசு கர்நாடகாவில் இருந்து தான் வாங்குகிறது.
நமது கரும்பு ஆலைகள் மூலமாக போதிய மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதும் உண்மை.

விவசாயியின் நண்பன் மோடி

இந்த விவசாயிகளின் உண்மையான தோழன் பிரதமர் மோடி என்றால் மிகை இல்லை. கரும்பு ஆலைகளின் பண நெருக்கடியை உணர்ந்த பிரதமர் எத்தனால் எனப்படும். கரும்பு ஆலை உற்பத்தியை இது நாள் வரை 05% தான் பெட்ரோலில் கலந்து விற்று வந்தனர். இந்த நிலையில் 5% இல் இருந்து – 10% உயத்தினார். இதனால் எத்தனால் கொள்முதல் அதிகரிக்கும்.

பத்திர கடன்

விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்ற தோழமை கொண்ட நமது பிரதமர் கரும்பு ஆலை முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து, அந்த விவசாயிகளின் கொள்முதல் பணத்தை கொடுக்க ஏற்பாடு செய்தார்.

நன்மை இல்லையென்றால்

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலும் தான் விவசாயத்திற்கு ஊறு விளைவிக்கும் ‘‘மீத்தேன்’’ எரிவாயு திட்டத்தை துவக்கினர்.
பிரதமர் மோடி, அது விவசாயத்திற்கு நன்மை தராது. ஊறு விளைவிக்கும் என்று தெரிந்து கொண்ட பின் அதனை ரத்து செய்தார். அதேபோல, நெடுவாசல் உண்மையில் கேடுவிளைவிக்கும் என்று அறிந்தால் நிச்சயம் நிறைவேற்ற மாட்டார். இந்த நெடுவாசல் திட்டமும், திமுக அரசின் உத்திதான்.

உலக வங்கி உதவியுடன்  ‘‘NERI’’ திட்டம்

F3சுமார் 60,000 ஏரிகள் குளங்கள் தூர்வாரபடாமல் உள்ளன. இவற்றை ஆழப்படுத்தி, அகலபடுத்தி இதனை சுற்றி சுவர் எழுப்பி, பாதுகாக்க வேண்டும் என்றால் சுமார் 11,300 கோடிகள் தேவை என்று மத்திய அரசு கணக்கிட்டு, அதற்கான ஒப்புதலும் கொடுத்தது.  இது உலக வங்கியின் உதவியால் செய்வதால், உலகளாவிய, வெளிபடையான பன்னாட்டு டெண்டர் முறையைத்தான் பின்பற்ற வேண்டும். இந்த ஒரே காரணத்தினால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிராகரித்தார்.

இந்த ‘‘NERI’’ திட்டத்தை தெலுங்கானா மாநிலம் ஏற்றுக் கொண்டது. 90% முடிந்து விட்ட நிலையில் தெலுங்காணா விவசாய விளைச்சலில் அமோக வெற்றியை பெற்று விட்டது.

வறட்சியை நோக்கி

நீர் நிலைகளில் தடுப்பணைகளை கட்டி, நீர் ஆதாரத்தை பெருக்க ஆரசு வகை செய்யவில்லை. இன்று டெல்லியில் போராடும் போலி விவசாயிகளும் போராடவில்லை. ஏன் தெரியுமா!? தடுப்பணைகள் கட்டினால் ஆற்று மணலை கொள்ளையடிக்க முடியாது!!

மோடியின் குஜராத்

குஜராத்தில் 3 லட்சம் அணைக் கட்டுகளை கட்டி, 500 அடிகளுக்கு கீழே இருந்த நிலத்தடி நீரை, 50 அடிக்கு கொண்டு வந்துள்ளார்.நிலத்தடி நீரை தொடாமல், வரும் மழை நீரை சேகரிப்பதே பிரதமரின் வெற்றிகரமான திட்ட மாக குஜராத்தில் அமைந்தது.

April magazine-56
தமிழகத்தில் 50 அடிகளில் நீர் கிடைத்த நிலைமை முற்றிலும் மாறி இன்று 1000 அடிகளை தாண்டி சென்று கொண்டு இருக்கிறோம். அப்போதும் சில இடங்களில் நீர் இல்லை.

நவீன விவசாய உத்திகள்

பாரம்பரிய முறையில் நெல் விவசாயம் அதிக நீரை பயன்படுத்தும் நவீன சொட்டு நீர் பாசாண முறையில், விவசாயம் செய்ய நமது விவசாயிகள் முன்வந்து கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் யதார்த்தங்களை புரிந்து கொள்ள அரசும், விவசாய மக்களும் முன் வரவேண்டும். முன்பு ஆற்று நீரின் அருகில் குடி இருந்தவர்கள் மட்டும் தான் அந்த நீரை உபயோகித்து வந்தனர். ஆனால் இன்று மாசுபட்ட, குறுகி விட்ட அந்த ஆற்றில் இருந்து பல லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் நீர் கொண்டு செல்லப்படுகிறது.
விவசாய நிலங்கள் பெருகிவிட்டன. மக்கள் தொகையும் கூடிவிட்டது. வானமும் முன் போல இல்லை. அதனால், நவீன விவசாயம் அவசியமாகிறது. கடல் நீரில் இருந்து உப்பு எடுத்து விட்டு உபயோகிப்பது, மழைநீர் சேகரிப்பு என்று பல வகையில் அரசு சிந்திக்க வேண்டும்.
தமிழ் வேளாண் பல்கலையில் கண்டு பிடிக்கப்பட்ட நூதன சொட்டு நீர் பாசன திட்டம் மூலமாக, திருப்பூரில் உள்ள தாராபுரம் வட்டத்தில் உள்ள பார்த்தசாரதி என்பவர் அமோக விளைச்சல் கண்டுள்ளார். விவசாயத்தில் தேர்ச்சி பெற்ற இஸ்ரேல் நாட்டு விவசாய வல்லுநர்கள் வந்து, குறிப்புகளை சேகரித்து சென்றுள்ளனர்.

காவேரி மட்டும் தானா?? கேரளா என்னாச்சு??

போராட்டம் என்றவுடன் கம்யூனிச் கட்சி தான் ஞாபகத்திற்கு வருகிறது. இன்றும் இந்த விவசாயிகளின் போராட்டங்களில் மறை முகமாகவும், வெளிப்படையாகவும் இந்த கம்யூனிஸ் தோழர்கள் இருப்பார்கள்.
ஆனால் ஒரு வார்த்தை கூட இன்று வரை கேரளா நதிகளை பற்றி கூறவே இல்லை.
காவேரி மட்டும் தான் கர்நாடகாவை பொறுத்தவரை! ஆனால் கேரளாவை பொறுத்தவரை நமக்கு நீர் மறுப்பது 10 நதிகளிலிருந்து… பவானி சிறுவாணி, பம்பார், அமராவதி, நெய்யாறு, பெரியாறு…

கேரள அரசு தற்போது தடுப்பணைகள் கட்டுவேன் என்று அறிவித்துள்ளது. எப்போதும் போல நாம் போர்க் கொடி தூக்கி உள்ளோம். எப்போது நாம் நமது நீர் நிலைகளை தடுப் பணைகளை கட்டி பாதுகாக்க போகிறோம் என்பதே என் கேள்வி.

என்னடா இது சோதனை

தமிழ் நாட்டிற்கு தான் என்ன ஒரு விநோதமான சோதனை பாருங்கள். போன வருடம் ஒரே புயல், மழை! புயலுக்கு நிவாரணம் கேட்டோம். இந்த வருடம் ஒரே வறட்சி. வறட்சிக்கு நிவாரணம் கேட்கிறோம். வந்த மழையை சேமிக்காது கடலுக்கு அனுப்பி விட்டு இன்று போராட்டம் என்று நாடகம் ஆடும் அவல நிலை விவசாயிகளின் நலனில் சிறிதும் அக்கறைகாட்டாத திராவிட கட்சிகளே இந்த சிக்கலுக்கு முழு காரணம்.

திராவிட கட்சிகளுக்கு விடைகொடுங்கள். பாஜக விற்கு ஆதரவு தாருங்கள். விவசாயம் தழைகட்டும் விவசாயிகள் சந்தோஷம் அடையட்டும்.

 

_T3A2645

 

 

 

எம். கோவிந்தராஜ்
மாநில பொதுச் செயலாளர்
தமிழக பாஜக விவசாய அணி

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *